For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிஷபத்திற்கு செல்லும் சூரியனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

2021 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி இரவு 11:15 மணிக்கு சூரியன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்கிறார். இந்நாளில் தான் தமிழ் மாதமான வைகாசி பிறக்கிறது.

|

நவகிரகங்களின் ராஜாவாக புகழப்படுபவர் தான் சூரிய பகவான். இந்த சூரியன் மற்ற கிரகங்களைப் போலவே, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு ஒவ்வொரு மாதமும் இடம் பெயர்வார். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி இரவு 11:15 மணிக்கு சூரியன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்கிறார். இந்நாளில் தான் தமிழ் மாதமான வைகாசி பிறக்கிறது.

Sun Transit in Taurus on 14 May 2021 Effects on Zodiac Signs In Tamil

இப்படி சூரியன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்வதால், ஒவ்வொரு ராசிக்காரரும் எம்மாதியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என வைகாசி மாத ராசிபலனை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் சில நிதி ஆதாயங்களைக் கொண்டு வரக்கூடும். இக்காலத்தில் வருமானம் அதிகரிக்கும். இருப்பினும் இந்த ராசிக்காரர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சில சவால்களை எதிர்கொள்ளலாம். இக்கால கட்டத்தில் குடும்பத்தினர்களுடன் எதையும் பேசுவதற்கு முன் ஒன்றிற்கு இருமுறை யோசிக்க வேண்டும். திருமணமானவர்களுக்கு இது சிறந்த நேரமாக இருக்கும். திருமணமாகாதவர்கள் இக்காலத்தில் திருமணம் செய்து கொள்ளலாம். பணி புரிபவர்கள் தங்கள் உயர் அதிகாரிகளுடன் சில கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருக்கலாம். அதே சமயம் இந்த நேரத்தில் சில புதிய மற்றும் லாபகரமான வாய்ப்புகளையும் காணலாம். மாணவர்களுக்கு, இந்த காலம் சாதகமானதாக இருக்கும். சில நேரங்களில், இந்த ராசிக்காரர்கள் சில சிறிய உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். இது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் உங்களை பலப்படுத்தும் மற்றும் உங்கள் வாழ்வில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க உதவும். அதற்காக நீங்கள் உங்கள் ஈகோவை தள்ளி வைக்க வேண்டும். இக்காலத்தில், உங்களின் செலவுகள் கணிசமாக அதிகரிக்கக்கூடும். ஆகவே உங்கள் செலவுகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பேசும் போது கவனமாக பேச வேண்டும். இல்லாவிட்டால், அது மோதலுக்கு வழிவகுக்கும். தொழில் செய்பவர்கள், ஒரு வேலையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். மேலும் பணியிடத்தில் தங்கள் நிலையைப் பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். வணிகத்தில் ஈடுபடுபவர்கள் இக்காலத்தில் பெரும் லாபத்தை ஈட்டுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண்கள், இதயம் அல்லது வயிறு தொடர்பான நோய்களால் பாதிக்கப்படலாம்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் தேவையின்றி செலவு செய்யாமல், எதிர்கால தேவைகளுக்கு பணத்தை சேமிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இக்காலத்தில் உங்கள் விருப்பப்படி எதுவும் நடக்காது. உங்கள் பணியிடத்தில் சில வெளிநாட்டு அடிப்படையிலான இணைப்புகளை உருவாக்குவீர்கள். இக்காலம் முழுவதும் உங்கள் திறமையைக் காட்ட போதுமான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் அதிக பணம் செலவழிப்பதைத் தவிர்த்து, தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக பணத்தை சேமிக்க வேண்டும். இந்த பெயர்ச்சியின் போது, உங்கள் காதல் வாழ்க்கை மேம்படும். மேலும் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட சில காரியங்களைச் செய்வீர்கள். அதோடு உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவதற்கான வழிகளையும் நீங்கள் தேடுவீர்கள்.

கடகம்

கடகம்

கடக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். இப்பெயர்ச்சியின் போது நீங்கள் சரியான முறையில் முதலீடு செய்வது முக்கியம். இதனால் இக்காலம் முழுவதும் பெரும் லாபத்தைப் பெறுவீர்கள். நீங்கள் அரசாங்கத் துறைகளிலிருந்தும் பயனடையலாம். இப்பெயர்ச்சியின் போது உங்கள் உயர் அதிகாரிகள் உங்களை ஆதரிக்கலாம். இது உங்கள் நற்பெயரையும் அதிகரிக்கும். சில நேரங்களில், உங்கள் காதல் வாழ்க்கையில் சில சிக்கல்கள் எழக்கூடும். சரியாகக் கையாளப்படாவிட்டால், உங்கள் துணையுடனான உங்கள் உறவு சற்று மோசமாக மாறும். இது உங்கள் உறவில் கடுமையான பிரச்சினைகளுக்கு கூட வழிவகுக்கும். எனவே, உங்கள் பிணைப்பு பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள உங்கள் துணையுடன் முறையான தொடர்பு கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இந்த ராசிக்கார மாணவர்கள் தங்கள் படிப்பில் சிரமங்களை சந்திக்கக்கூடும். இருப்பினும் படிப்பில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நோயெதிர்ப்பு வலுவாக இருக்கும் என்பதால் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் பணியிடத்தில் பதவி உயர்வுகளைப் பெற வாய்ப்புள்ளது. அவை குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறக்கூடும். அதோடு உயர் அதிகாரிகளுடனான உறவை வலுப்படுத்தவும் செயல்படுவார்கள். வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள், குறிப்பாக அரசு நிறுவனங்களுடன் கையாளும் போது இக்காலத்தில் பெரும் லாபத்தை ஈட்ட முடியும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் எதிரிகள் விலகி இருக்கலாம். ஆனால் இவர்களை தாக்க முயற்சிப்பார்கள். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் குடும்ப சூழல் மிகவும் மகிழ்ச்சியாகவும், நேர்மறை ஆற்றல் நிரம்பியும் இருக்கும். இதனால் இக்காலத்தில் இவர்கள் அதிக மரியாதை மற்றும் அந்தஸ்தைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சியை தினமும் செய்து வாருங்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வணிகத்தில் ஈடுபடுபவர்கள் இக்காலத்தில் பெரும் லாபத்தை ஈட்டுவார்கள். இந்த நேரத்தில், சில ஆன்மீக நடவடிக்கைகளிலும் பங்கேற்க வாய்ப்புள்ளது. நிதி அடிப்படையில், இந்த காலக்கட்டம் சராசரியாக இருக்கும். ஏனென்றால், இந்த காலகட்டத்தில் உங்களிடம் பெரிய நிதி ஆதாயங்களைப் பெற எதுவும் இல்லை. வேலைகளில் இருப்பவர்கள் தங்கள் பணியிடத்தில் மிகவும் வசதியாக இருப்பார்கள். அவர்கள் புதிய நபர்களைச் சந்தித்து அவர்களுடன் நல்ல தொடர்புகளை உருவாக்குவார்கள். இந்த காலக்கட்டத்தில், உங்கள் தந்தையுடனான உறவு கசப்பாக இருக்கலாம். இருப்பினும், உங்கள் தந்தையின் உடல்நிலை குறித்து நீங்கள் நிறைய கவலைப்படக்கூடும். இக்காலத்தில் உங்கள் அன்பானவர்கள் உங்களுக்கு தங்கள் ஆதரவை வழங்குவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் சில நாட்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பீர்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இந்த வீடு ஆராய்ச்சி, அறிவியல், மாற்றங்கள், ஆதாயங்கள் மற்றும் திடீர் இழப்புகளைக் குறிக்கிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இக்காலத்தில் நீங்கள் சிறிய தோல் பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். மேலும் வைரஸ் தொற்று மற்றும் பாலியல் பிரச்சினைகளையும் பெறலாம். இந்த பெயர்ச்சியின் போது நீங்கள் உங்களை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த காலக்கட்டத்தில் பணம் சம்பாதிக்க சில நல்ல வாய்ப்புகளை நீங்கள் இழக்க நேரிடும். இந்த பெயர்ச்சியின் போது நிதி ஆதாயங்கள் எதுவும் இருக்காது. இருப்பினும், உங்கள் பரம்பரை மற்றும் மூதாதையர் சொத்திலிருந்து சில நன்மைகளைப் பெறலாம். இது தவிர, கூட்டு முயற்சிகள் மற்றும் பகிரப்பட்ட நிதிகளும் உங்களுக்கு உதவக்கூடும். இந்த பெயர்ச்சியின் போது உங்கள் வாழ்க்கைத் துணை உங்களை முழுமையாக ஆதரிப்பார். திருமணமானவர்களுக்கு, இது ஒரு சிறந்த காலமாக இருக்கும். உங்களின் சில மறைமுக எதிரிகளால் நீங்கள் கலக்கமடையக்கூடும். எனவே, இக்காலத்தில் எந்தவொரு சாத்தியமான சச்சரவுகளிலிருந்தும் விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இந்த வீடு திருமணம், வர்த்தகம் மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றைக் குறிக்கிறது. இக்காலத்தில் வணிகர்கள் பெரும் லாபத்தை எதிர்பார்க்கலாம். இக்காலம் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் தரும். இருப்பினும், இந்த ராசிக்காரர்கள் தங்கள் ஈகோவை ஒதுக்கி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் இது கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். மேலும் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடனோ அல்லது உயர் அதிகாரிகளுடனோ தங்கள் பணியிடத்தில் சில கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருக்கலாம். எனவே முடிந்தவரை அமைதியாக இருப்பது நல்லது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த ராசிக்காரர்கள் சற்று எரிச்சலையும் பலவீனத்தையும் உணரக்கூடும். மேலும் லேசான காய்ச்சலும் இருக்கலாம். எனவே இக்காலத்தில் சரியான ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தனுசு

தனுசு

தனுசு ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இந்த வீடு கடன்கள், தினசரி ஊதியங்கள் மற்றும் எதிரிகளை குறிக்கிறது. இக்காலத்தில் உங்கள் எதிரிகள் உங்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கமாட்டார்கள். இதனால் அவர்களை நீங்கள் வெல்ல முடியும். போட்டித் தேர்வுகளை எழுதிய மாணவர்கள், நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் இந்த பெயர்ச்சியின் போது பெரும் லாபத்தை ஈட்டுவார்கள். வேலைச் செய்கிறவர்கள் கடினமாக உழைப்பதன் மூலமும், அவர்கள் எதைச் செய்தாலும் அதிக முயற்சி செய்வதன் மூலமும் தங்கள் நிலையைப் பாதுகாக்க முடியும். நிதி முன்னணியில், பெரும் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இருப்பினும், இந்த ராசிக்காரர்கள் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் கடினமான நேரத்தை கடந்து செல்ல வேண்டியிருக்கும். ஏனெனில் எதிரிகள் அவர்களை வீழ்த்த முயற்சிப்பார்கள். உறவுகளைப் பொறுத்தவரை, இந்த ராசிக்காரர்கள் தங்கள் உறவில் சிரமங்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அமில ரிஃப்ளக்ஸ் காரணமாக சற்று எரிச்சலுணர்வை உணரலாம்.

மகரம்

மகரம்

மகர ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியம் தொடர்பான சில சிக்கல்களைக் கொண்டு வரக்கூடும். மாணவர்கள் தங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும். நிதியைப் பொறுத்தவரை, இந்த ராசிக்காரர்கள் தங்கள் பணத்தை எதிர்கால தேவைகளுக்காக சேமிக்க வேண்டும். மேலும் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதிலும், பாதகமான சூழ்நிலைகளில் தங்களை அமைதியாக வைத்திருப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். சிலரது திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். சிலர் புதியவற்றைக் கற்றுக்கொள்வதில் தங்கள் நேரத்தை முதலீடு செய்யலாம். ஏனெனில் இது அவர்களின் அறிவை மேம்படுத்துவதோடு நீண்ட காலத்திற்கு மிகவும் பயனளிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த ராசிக்காரர்கள் சில நோய்களை எதிர்கொள்ளக்கூடும். ஆனால் அவை நீண்ட காலம் இருக்காது.

கும்பம்

கும்பம்

கும்ப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இந்த காலகட்டத்தில், வீட்டு தேவைகள் தொடர்பாக குடும்ப உறுப்பினர்களிடையே சில உராய்வு ஏற்படக்கூடும் என்பதால், கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தொழில் ரீதியாக, வணிகம் மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றிலிருந்து இலாபம் சாத்தியமாகும். ஏனெனில் உங்கள் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும் மற்றும் உங்கள் பணி பாராட்டப்படும். பணிபுரிபவர்கள் தொழில்முறை உயரத்தையும் பெறக்கூடும். வீடு தொடர்பான விவகாரத்தில் உங்கள் தாயுடன் பழகும்போது பொறுமையாக இருங்கள். அதோடு சொத்து தொடர்பான சிக்கலை எதிர்கொண்டால், இந்த காலத்தில் எந்த முடிவையும் எடுக்காதது புத்திசாலித்தனமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இக்காலம் உங்களுக்கு ஓரளவாக இருக்கும். எனவே நீங்கள் யோகா மற்றும் தியானத்தை பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

மீனம்

மீனம்

மீன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இந்த காலத்தில் சூரியன் உங்களின் செறிவு மற்றும் அர்ப்பணிப்பை அதிகரிக்கும். மேலும் நீங்கள் உற்சாகமாகவும், புத்துணர்ச்சியுடனும், அனைத்து சவால்களையும் தைரியமாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பீர்கள். மேலும் இந்த காலகட்டத்தில் உங்கள் மனைவியுடனான உறவு சராசரியாக இருக்கும். மேலும் நீங்கள் மதச் செயல்களில் ஈடுபடுவீர்கள். அதோடு இந்த காலத்தில் குறுகிய பயணங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த காலக்கட்டத்தில் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மிகவும் ஆதரவாக இருப்பார்கள். இந்த காலத்தில், நீங்கள் யாருடனும் மோதமாட்டீர்கள், சிறப்பான முடிவுகளை வழங்குவதற்காக கூடுதல் ஆபத்தை எடுக்கவும் நீங்கள் தயங்கக்கூடாது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் உடல்நலத்தில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். எனவே சிக்கல்களைத் தவிர்க்க உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sun Transit in Taurus on 14 May 2021 Effects on Zodiac Signs In Tamil

Sun Transit in Taurus Effects on Zodiac Signs in Tamil: The sun transit in taurus will take place on 14 May 2021. Learn about remedies to perform in tamil.
Desktop Bottom Promotion