Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சூரிய பெயர்ச்சியால் நவம்பர் 16 முதல் அடுத்த ஒரு மாதம் இந்த 6 ராசிக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்...
சூரியன் 2022 நவம்பர் 16 ஆம் தேதி சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார். சூரியனின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் இருக்கும்.
ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் சூரியன் 2022 நவம்பர் 16 ஆம் தேதி சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார். சூரியனின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் இருக்கும்.

ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலுவான நிலையில் இருந்தால், அவர் தன்னம்பிக்கை நிறைந்தவராக இருப்பதோடு, அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார் மற்றும் சிறந்த தலைமைத்துவ பண்புகளை கொண்டிருப்பார். இந்நிலையில் விருச்சிக ராசிக்கு சூரியன் செல்வதால் ஆறு ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களைப் பெறப் போகிறார்கள். இப்போது அந்த அதிர்ஷ்டசாலிகள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். எனவே இக்காலம் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இக்காலத்தை முழுமையாக பயன்படுத்தினால் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் நல்ல தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிதி ரீதியாக இக்காலம் மிகவும் அற்புதமாக இருக்கும். பணியிடத்தில் கடினமாக உழைத்தால் அதற்கேற்ற நல்ல பலனைப் பெறுவீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நல்ல பொருள் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் முதலீட்டு மூலதனத்தை அதிகரியுங்கள். இக்காலம் முதலீடு செய்ய சிறந்த காலம். ஏனெனில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு மேம்படும். நிதி விஷயத்தில் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும்.

துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி காலம் சாதகமாக இருக்கும். நிதி தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்களின் பணத்தை சேமிக்க பல வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். இக்காலத்தில் உங்கள் குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். எனவே இந்த சூரிய பெயர்ச்சியானது விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியுடன், லாபமும் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் புகழ் மற்றும் மரியாதை அதிகரிக்கும். முக்கியமாக உங்களின் ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம்
கும்ப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். எனவே இந்த சூரிய பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களின் வருமானம் சிறப்பாக இருக்கும். அனைத்து துறைகளிலும் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். முக்கியமாக நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். பணியிடத்தில் உங்களின் தலைமைத்துவ பண்புகள் பாராட்டப்படும். உங்கள் தாயின் ஆதரவை இக்கால கட்டத்தில் பெறுவீர்கள்.

மீனம்
மீன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். எனவே மீன ராசிக்காரர்கள் இக்காலத்தில் அபரிமிதமான பலன்களைப் பெறுவார்கள். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களின் ஆசை நிறைவேறும். இக்காலகட்டத்தில் உங்கள் தந்தை மற்றும் ஆசிரியரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை உங்கள் தந்தை உங்களை கண்டுகொள்ளாமல் இருந்தால், இப்பெயர்ச்சிக்கு பின் உங்கள் மீது அதிக அக்கறை காட்டுவார். இக்காலத்தில் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications