Surya Gochar 2022: சூரிய பெயர்ச்சியால் அடுத்த ஒருமாதம் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

சூரியன் தற்போது துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இவர் 2022 நவம்பர் 16 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார். சூரியன் விருச்சிக ராசிக்கு செல்லும் போது தான் கார்த்திகை மாதம் பிறக்கிறது.

நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் சூரியன் தற்போது துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இவர் 2022 நவம்பர் 16 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார். சூரியன் விருச்சிக ராசிக்கு செல்லும் போது தான் கார்த்திகை மாதம் பிறக்கிறது.

Surya Rashi Parivartan Sun Transit in Scorpio on 16 November 2022 Effects And Remedies On 12 Zodiac Signs In Tamil

சூரியனின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இந்நிலையில் விருச்சிகம் செல்லும் சூரியன் இந்த ராசியில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை இருந்து பின் தனுசு ராசிக்கு மாறுவார். இப்போது 2022 நவம்பர் 16 ஆம் விருச்சிக ராசிக்கு செல்லும் சூரியனால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்கள் என்னவென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வாழ்வில் எதிர்பாராத பல ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். இருப்பினும் மரியாதை அதிகரிக்கும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற அதிக முயற்சி செய்ய வேண்டும். திருமணமானவர்களுக்கு குழந்தைகள் தொடர்பான கவலை அதிகரிக்கு. காதல் விஷயங்களில் சற்று அலட்சியமாக இருப்பீர்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். திருமணமான புது தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வேலை மற்றும் வியாபார ரீதியாக நன்றாக இருக்கும். ஆனால் திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் தாமதம் ஏற்படும். அரசின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். திருமண வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும். உங்கள் மாமியார்-மாமனாருடனான உறவை கெட்டுப் போக விட்டுவிடாதீர்கள்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் மிதுன ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பயணங்களால் நல்ல பலன் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகள் ஏதேனும் நடந்து கொண்டிருந்தால், அதில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் வரும். வெளிநாடு செய்ய முயற்சிப்பவர்களுக்கு, இக்காலத்தில் நல்ல முடிவுகள் கிடைக்கும்.

கடகம்

கடகம்

கடக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் பணிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். நீண்ட நாட்களாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். புதிய தொழில் தொடங்க சிறந்த காலம். வணிகர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்பினால், அதற்கு இக்காலம் நல்ல காலம். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உடன்பிறப்புகளின் முழு ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் எதிர்பாராத பல ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நண்பர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் இருந்து விரும்பத்தகாத சில செய்திகளை இக்காலத்தில் பெறுவீர்கள். பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இக்காலத்தில் உங்கள் பொருள் திருட்டுப் போக வாய்ப்புள்ளது. சொத்து அல்லது வாகனங்களை வாங்க விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

கன்னி

கன்னி

கன்னி ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் தைரியமாக இருப்பீர்கள். உங்களின் தைரியம் மற்றும் வீரத்தால், கடினமான சூழ்நிலைகளையும் எளிதில் சமாளிப்பீர்கள். உங்களின ஆற்றலையும், உத்திகளையும் சரியாக பயன்படுத்தினால் வெற்றி பெறுவீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல முயற்சித்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். இக்காலத்தில் உங்களின் திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். எனவே இக்காலத்தில் உங்கள் கண் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். திடீரென்று பணம் வரும். நீண்ட நாட்களாக சிக்கிய பணம் இக்காலத்தில் கிடைக்கும். வியாபாரிகள் புதிய ஒப்பந்தத்தைப் பெற வாய்ப்புள்ளது. பணியிடத்தில் சதியால் பலியாவதைத் தவிர்த்திடுங்கள். அதற்கு வேலை முடிந்ததும் வீட்டிற்கு செல்லுங்கள். குடும்பத்தில் பிரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். ஆனால் ஆரோக்கிய பிரச்சனையை மட்டும் சந்திக்க வேண்டியிருக்கும். ஆராய்ச்சி வேலைகளை செய்பவர்கள் வெற்றி பெறுவார்கள். சமூகத்தில் மரியாதை மற்றும் அந்தஸ்து அதிகரிக்கும். அரசின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகள் தொடர்பான கவலைகள் குறையும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தனுசு

தனுசு

தனுசு ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் நன்றாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அதுவும் கண் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் சற்று கடினமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். மேலும் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து விரும்பத்தகாத செய்திகளை பெறுவதற்கான வாய்ப்புள்ளது. நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். இல்லாவிட்டால் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.

மகரம்

மகரம்

மகர ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். எனவே நீங்கள் புதிய வேலையைத் தொடங்க விரும்பினால் அல்லது புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்பினால், அதற்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும். காதல் விஷயங்களில் அலட்சியமாக இருக்காதீர்கள். உங்கள் துணையுடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். மேலும் குழந்தைகள் தொடர்பான கவலைகள் நீங்கும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் கும்ப ராசிக்காரர்கள் தங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் வணிகர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து விரும்பத்தகாத செய்திகளைப் பெறுவீர்கள். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் இக்காலத்தில் தீரும். வீடு, வாகனம் வாங்க நினைத்தால், அதில் வெற்றி கிடைக்கும்.

மீனம்

மீனம்

மீன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பல எதிர்பாராத இனிமையான பலன்களைப் பெறுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் வேலைகள் பாராட்டப்படும். உங்களை வீழ்த்த நினைப்பவர்கள் இக்காலத்தில் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். அதிக தொண்டுகளை செய்வீர்கள். அரசு தொடர்பான வேலைகளில் வெற்றி கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, November 15, 2022, 17:43 [IST]
Desktop Bottom Promotion