சூரியன் விருச்சிக ராசிக்கு செல்வதால் இந்த ராசிக்குலாம் சூப்பரா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு நவம்பர் 16 ஆம் தேதிக்கு செல்கிறார். இதனால் தமிழ் மாதமான கார்த்திகை மாதம் பிறக்கிறது.

வேத ஜோதிடத்தில், சூரியனுடன் மற்ற கிரகங்களுக்கும் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சூரியன் மற்ற கிரகங்களைப் போலவே, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும். அதுவும் ஒவ்வொரு மாதமும் சூரிய பெயர்ச்சியானது நிகழும். அந்த வகையில் இந்த மாதம் சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு நவம்பர் 16 ஆம் தேதிக்கு செல்கிறார். இதனால் தமிழ் மாதமான கார்த்திகை மாதம் பிறக்கிறது. விருச்சிக ராசிக்கு செல்லும் சூரியன் அங்கிருந்து டிசம்பர் 16, 2021 அன்று தனுசு ராசிக்கு செல்வார்.

Sun Transit in Scorpio On 16 November 2021 Effects on Zodiac Signs in Tamil

நவகிரகங்களின் ஆட்சியாளராக கருதப்படும் சூரியன், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது, ஒவ்வொரு ராசியிலும் குறிப்பிட்ட தாக்கம் ஏற்படும். இப்போது விருச்சிக ராசிக்கு செல்லும் சூரியனால் ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும், கார்த்திகை மாதம் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் கிசுகிசுக்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் அல்லது யாரையும் இழிவுப்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது. உங்கள் நிதி நிலையை கவனித்துக் கொள்ளுங்கள். ஒழுங்கற்ற செலவுகள் காரணமாக பணம் அதிகம் கரையும். இக்காலத்தில் நீங்கள் உங்களின் உணவுகள் மற்றும் உடற்பயிற்சி வழக்கத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தை தீவிரமாக கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அரசு பணிபுரிபவர்கள் வலுவாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியைச் சேர்ந்த வேலை செய்யும் பெண்களுக்கு இது சாதகமான காலமாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கை அன்பு நிறைந்ததாக இருக்கும். இக்காலத்தில் ஆன்மீக சுற்றுலாக்களை மேற்கொள்ள திட்டமிட்டால் நற்பலன்கள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இக்காலத்தில் குழந்தைகள் உங்களுக்கு மிகவும் தேவைப்படுவார்கள். திருமணம் செய்ய நினைப்பவர்களுக்கு இது சாதகமான காலம்.

மிதுனம்

மிதுனம்

நீங்கள் அரசு துறையில் பணிபுரிந்தால், மிகப்பெரிய வெற்றியைக் காண்பீர்கள். தொழில் ரீதியான நல்ல லாபத்தையும், வெற்றியையும் காண்பீர்கள். புதிய வீடு அல்லது வாகனம் வாங்க நினைத்தால், உங்களின் விருப்பம் இக்காலத்தில் நிறைவேறும். இக்காலத்தில் எதிலும் வெள்ளை நிறத்தை தேர்வு செய்யுங்கள். உங்களின் அந்தஸ்து உயரலாம் மற்றும் நீங்கள் பதவி உயர்வை பெற வாய்ப்புள்ளது.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் தங்கள் துணையுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நீங்கள் தரமான நேரத்தை செலவிட வேண்டும். இக்காலத்தில் உங்கள் துணையுடன் நீங்கள் சரியான உரையாடலை நடத்துவது முக்கியம். தொழில் செய்பவர்கள் இக்காலத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடும். ஆன்மீக பணிகளில் ஈடுபடுபவர்களுக்கும், சமய பணிகளில் ஈடுபடுபவர்களுக்கும் வெற்றி கிடைக்கும். இக்காலத்தில் அமைதியாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மேம்படும். தொழிலதிபர்கள் லாபத்தையும், நஷ்டத்தையும் அடைவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சில தோமல்கள் காரணமாக உங்களின் சில முக்கிய வேலைகள் தடைபடலாம். உங்கள் துணையை அவமதிக்காதீர்கள். வருமானத்தில் சிறு குறைவு ஏற்படும். இந்நேரத்தில் உங்கள் அணுகுமுறையைக் கட்டுக்குள் வைத்திருங்கள். உங்கள் ஆன்மாவின் ஆரோக்கியத்திற்காக ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களின் நிதி நிலை நன்றாக இருக்கும். விரைவில் வெற்றி பெறுவீர்கள். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்ல பலன் கிடக்கும். இக்காலத்தில் உங்களின் தன்னம்பிக்கையுடன், தைரியமும் அதிகரிக்கும். உங்கள் இளைய சகோதரர் உங்கள் அன்பை நன்கு உணர்வார்கள். எதிர்காலத்திற்காக முதலீடு செய்யுங்கள். இக்காலத்தில் நீங்கள் எதிர்பாராத மூலங்களில் இருந்து செல்வத்தைப் பெறுவீர்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்கார தொழிலதிபர்கள் வெற்றியைப் பெறுவார்கள். எனவே புதிய முயற்சிகளில் முதலீடு செய்ய இது சிறந்த நேரம். உங்களை நீங்களே கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. உங்களின் நடத்தை உங்கள் உறவில் சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே அணுகுமுறையை சரிபாருங்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். ங்கள் செலவுகள் மற்றும் சேமிப்புகளை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள். இந்த காலத்தில் நீங்கள் உங்கள் சொத்துக்களை வாடகைக்கு விடலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

உங்களின் ஆக்ரோஷ குணம் காரணமாக உங்கள் மனைவியுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இந்த நேரத்தில் உங்கள் தந்தையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். உங்கள் பணியிடத்தில், உங்களுக்கு சங்கடமான சூழ்நிலைகள் இருக்கும். காய்ச்சல் அல்லது ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்படலாம். எனவே நோயின்றி வாழ ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் வயிறு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படலாம். இக்காலத்தில் அதிக செலவுகள் இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்யும் தொழிலதிபர்கள் லாபத்தைக் காண்பார்கள். இக்காலம் சிலருக்கு மன அழுத்தமாக இருக்கும். நீண்ட நேரம் உங்களுக்காக தநேரத்தை செலவழித்து, உங்களை நீங்களே உணர வேண்டும். உங்களின் தன்னம்பிக்கை குறையலாம். ஆனால் உங்கள் தொழில் நிலையாக இருக்கும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் விஷயங்கள் சரியாக நடப்பதாக தெரியாது. ஆனால் கொஞ்சம் கவனம் செலுத்தினால், அனைத்தும் சரியாகிவிடும். மேற்படிப்பைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் வெற்றி பெறுவார்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கும். இந்த காலத்தில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பலனளிக்கும். உங்கள் குழந்தையின் வெற்றியை நினைத்து நீங்கள் பெருமைப்படுவீர்கள், அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். இந்த நேரத்தில் சமூகத்தில் உங்கள் மரியாதை கூடும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, நீங்கள் புதிய வேலை அல்லது பதவி உயர்வை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், இக்காலத்தில் வெற்றி கிடைக்கும். தற்போது பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது உயர் பதவிகள் கிடைக்கும். உங்கள் சக ஊழியர்கள் எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் பணியிடத்தில் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. மேலதிகாரிகளுடனான உறவும் மேம்படும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறது.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே, அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. எனவே உங்களின் வேலையை முடிக்க மிகவும் கடினமாக இருக்கும். வீட்டில் மன அழுத்தம் ஏற்படும். இதனால் உங்கள் ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம். எனவே இக்காலத்தில் மருத்துவரை சந்திக்க வேண்டியிருக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் வருமானம் முன்பை விட சற்று குறையலாம். இக்காலத்தில் ஆன்மீக பயணங்களுக்கும் வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, November 15, 2021, 14:40 [IST]
Desktop Bottom Promotion