Just In
- 5 hrs ago
Today Rasi Palan 23 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் பண பிரச்சனை நீங்கிடும்...
- 14 hrs ago
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் பிப்ரவரி 15 வரை இந்த 5 ராசிக்கு அட்டகாசமா இருக்கும்...
- 23 hrs ago
கேரளா ஸ்பெஷல் இறால் ரோஸ்ட்
- 1 day ago
வார ராசிபலன் (22.01.2023-28.01.2023) - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்...
Don't Miss
- Movies
இது சமத்துவ அறத்தின் வெற்றி... விக்ரமனுக்கு ஆதரவாக ட்வீட் செய்த இயக்குநர் நவீன்...
- News
சுதீஷ்ஷா? அங்கேயா? அதை விடுங்க.. கிட்ட நெருங்கும் விஜயகாந்த்தின் தேமுதிக.. கோயம்பேடே பிஸியாயிடுச்சே
- Automobiles
காரில் நம்பர் பிளேட்டிற்கு பதிலாக ஜாதி பெயருடன் வலம் வந்த இளைஞர்! போலீசார் போட்ட ஹெவியான அபராதம்!
- Finance
அமெரிக்கா செல்ல திட்டமிடுவோருக்கு நல்ல விஷயம்.. விசா நடைமுறையில் தளர்வுகளா?
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
சூரிய பெயர்ச்சியால் டிசம்பர் 16 முதல் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகுது...
ஜோதிடத்தில் நவகிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் தான் சூரியன். இந்த சூரியன் மாதந்தோறும் ராசியை மாற்றுவார். அப்படி மாற்றும் போது தான் தமிழ் பிறக்கின்றன. அந்த வகையில் தற்போது 2022 ஆம் ஆண்டின் கடைசி சூரிய பெயர்ச்சி 2022 டிசம்பர் 16 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த சூரிய பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி காலம் பொற்காலமாக இருக்கப் போகிறது. இப்போது தனுசு ராசிக்கு செல்லும் சூரியனால் ஆண்டின் கடைசி இரண்டு வாரங்கள் எந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களைத் தரப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பினால், அந்த ஆசை நிறைவேறும். காதலிப்பவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும். வணிகத்தை விரிவுப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் செய்த முதலீடுகள் நல்ல பலனைத் தரும்.

கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் பணிபுரிபவர்கள் இக்காலத்தில் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் இக்காலத்தில் பெரும் வெற்றியைப் பெறுவார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் பேச்சு மேம்படும். நீங்கள் மிகவும் இனிமையாக பேசுவீர்கள். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைககும். அவர்களின் ஒத்துழைப்பால் பணியில் மிகவும் சிறப்பாக செயல்படுவீர்கள். அரசு வேலை செய்பவர்களுக்கு இக்காலத்தில் இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அதிர்ஷ்டம் முழுமையான ஆதரிக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் வேலையால் மகிழ்ச்சி அடைவார்கள். உங்களின் படைப்புகள் பாராட்டுக்களைப் பெறும். இக்காலத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

கும்பம்
கும்ப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் பொருளாதார ரீதியாக இக்காலம் லாபகரமாக இருக்கும். குறிப்பாக தொழில் செய்பவர்களுக்கு இக்காலம் பயனுள்ளதாக இருக்கும். கடந்த காலத்தில் செய்த கடின உழைப்பின் பலனை இக்காலத்தில் பெறுவீர்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் இக்காலத்தில் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.

மீனம்
மீன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இது தொழில் ரீதியாக நல்ல பலனை அளிக்கும் காலமாக இருக்கும். இக்காலத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் பணி இக்காலத்தில் சிறப்பாக பாராட்டப்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)