Latest Updates
-
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்!
Dhanu Sankranti 2022: சூரிய பெயர்ச்சியால் டிசம்பர் 16 முதல் இந்த 6 ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கணும்...
2022 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் உள்ளோம். இந்த டிசம்பர் மாதத்தில் சூரியன் தனுசு ராசிக்கு செல்லவுள்ளார். அதுவும் சூரியன் டிசம்பர் 16 ஆம் தேதி விருச்சிகத்தில் இருந்து குரு ஆளும் தனுசு ராசிக்குப் போகிறார்.
நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் உள்ளோம். இந்த டிசம்பர் மாதத்தில் சூரியன் தனுசு ராசிக்கு செல்லவுள்ளார். அதுவும் சூரியன் டிசம்பர் 16 ஆம் தேதி விருச்சிகத்தில் இருந்து குரு ஆளும் தனுசு ராசிக்குப் போகிறார்.

தனுசு ராசிக்கு சூரியன் செல்லும் போது தான் தமிழ் மாதமான மார்கழி மாதம் பிறக்கும். இந்த சூரிய பெயர்ச்சியின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களும், சிலருக்கு மோசமான பலன்களும் கிடைக்கலாம். இப்போது சூரியன் தனுசு ராசிக்கு செல்வதால், 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு இக்காலமானது ஓரளவாக இருக்கும். இதுவரை வேலையில் இருந்த தடைகள் நீங்கும். ரகசிய எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். உங்களின் ஆற்றல் மற்றும் தைரியத்தால் எப்பேற்பட்ட கடினமான சூழ்நிலைகளையும் இக்காலத்தில் எளிதில் சமாளிப்பீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலமானது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்திருக்கும். ஆரோக்கியம் சற்று மோசமாக இருக்கும். பணியிடத்தில் சதியால் பலியாவதைத் தவிர்த்திடுங்கள். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். இல்லாவிட்டால் விபத்துக்கள் ஏற்படும். பேச்சைக் கட்டுப்படுத்துங்கள். இல்லையெனில் உறவுகளில் விரிசல் ஏற்படும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துங்கள். இக்காலத்தில் இதயம் மற்றும் எலும்பு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இது திருமணம் மற்றும் கூட்டாண்மையின் வீடாகும். எனவே இக்காலத்தில் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துங்கள். ஈகோ மற்றும் வாக்குவாதங்களை தவிர்த்திடுங்கள். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு சற்று மோசமாகும்.

கடகம்
கடக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் கடக ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் ரகசிய எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். அரசு அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மோசமான செய்தியைப் பெற வாய்ப்புள்ளது.

சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் எதிர்பாராத ஏற்றத்தாழ்வுகளை சந்திப்பீர்கள். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். காதல் விஷயங்களில் ஆதாயம் கிடைக்கும். உங்கள் குழந்தைகளின் பொறுப்பை நிறைவேற்றுவீர்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் தொழில் வாழ்க்கையில் நல்ல பலன்கள் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள் இக்காலத்தில் நிறைய லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் இக்காலத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணை இக்காலத்தில் பணியிடத்தில் பெரிய வெற்றியைப் பெறுவார்கள்.

துலாம்
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு இக்காலம் நல்ல லாபகரமானதாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வேலைகள் நிறைவேறும். தைரியத்தால் கடினமான சூழ்நிலைகளையும் எளிதில் சமாளிப்பீர்கள். உங்களின் முடிவுகள் இக்காலத்தில் நல்ல பாராட்டைப் பெறும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகள் தொடர்பான கவலைகள் நீங்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் பேச்சு மேம்படும். மிகவும் இனிமையாக பேசுவீர்கள். உங்கள் குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணியிடத்தில் மிகவும் சிறப்பாக செயல்படுவீர்கள். அரசு வேலை செய்பவர்களுக்கு இக்காலத்தில் இட மாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் தனுசு ராசிக்காரர்கள் இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். உங்களின் மதிப்பும், மரியாதையும் இக்காலத்தில் அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் வேலையால் மகிழ்ச்சி அடைவார்கள். உங்களின் வேலை இக்காலத்தில் நல்ல பாராட்டுக்களைப் பெறும். மேலும் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன.

மகரம்
மகர ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் மகர ராசிக்காரர்களுக்கு சற்று சாதகமற்றதாக இருக்கம். இக்காலத்தில் எந்த ஒரு முதலீடு செய்யும் முன்பும் நன்கு சிந்திக்க வேண்டும். இல்லாவிட்டால் நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வேலைகளில் சில தடைகள் வரலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டு. ஏனெனில் இக்காலத்தில் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

கும்பம்
கும்ப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் கும்ப ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல லாபம் கிடைக்கும். தொழில் வாழ்க்கை பயனுள்ளதாக இருக்கும். கடந்த காலத்தில் செய்த கடின உழைப்பின் பலனை இக்காலத்தில் பெறுவீர்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் இக்காலத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும்.

மீனம்
மீன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் தொழில் ரீதியாக பயனுள்ளதாக இருக்கும். இக்காலத்தில் தொழிலில் புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் பணி பாராட்டைப் பெறும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு சூரியனின் அருளால் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











