Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
சூரிய பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த ஒரு மாதம் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டமான காலமா இருக்கும்..
துலாம் செல்லும் சூரியனால் எந்தெந்த ராசிக்காரர்கள் நிறைய நல்ல பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வார். சூரியன் இதுவரை கன்னி ராசியில் பயணித்து வந்த நிலையில், 2022 அக்டோபர் 17 ஆம் தேதி, அதாவது இன்று கன்னியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார். சூரியனின் ராசி மாற்றத்தின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. சூரியன் துலாம் ராசிக்கு செல்லும் போது ஐப்பசி மாதம் பிறக்கிறது.

சூரியனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளையும் பாதித்தாலும், சில ராசிக்காரர்களுக்கு நிறைய நற்பலன்கள் கிடைக்கவுள்ளன. இப்போது துலாம் செல்லும் சூரியனால் எந்தெந்த ராசிக்காரர்கள் நிறைய நல்ல பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்திகள் தேடி வரும். வணிகம் செய்பவர்களுக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது. இக்காலத்தில் உங்களின் அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடிக்கப்படும். பணம் அதிகம் சம்பாதிப்பதற்கு வாய்ப்புள்ளது. மொத்தத்தில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

மீனம்
மீன ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை சந்தித்த நிதி பிரச்சனைகள் நீங்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்களுடன் பதவி உயர்வைப் பெறுவீர்கள். அரசு வேலை செய்பவர்களுக்கு இந்த காலம் அற்புதமாக இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். முதலீடுகளால் நற்பலன்கள் கிடைக்கும். தந்தையிடம் இருந்து நிதி உதவியைப் பெறுவீர்கள்.

தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த காலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இக்காலத்தில் வருமானம் சிறப்பாக இருக்கும். வணிகத்தில் பொருளாதார முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மொத்தத்தில் இக்காலத்தில் சாதனைகளைப் புரிவீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். எனவே இந்த சூரிய பெயர்ச்சி காலம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். புதிய வணிகத்தில் இருந்து லாபத்தைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் நிலுவையில் உள்ள வேலைகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. திடீரென்று உங்களைத் தேடி பணம் வர வாய்ப்புள்ளது.

மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் நிறைய பொறுப்புகளுடன் பதவி உயர்வைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்களின் வேலைகள் மிகச்சிறப்பாக பாராட்டப்படும். நிதி உதவியும் உங்களுக்கு கிடைக்கும். இக்காலத்தில் வணிகத்தில் பணத்தை முதலீடு செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications