Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சூரியன் துலாம் ராசிக்கு செல்வதால் பிரச்சனைகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
துலாம் ராசியில் சூரியன் இருப்பதால் சில ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், வேலைகளில் தோல்வியைக் காண நேரிடும் மற்றும் வீட்டில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
ஜோதிடத்தில் சூரியன் கிரகங்களின் தலைவனாக கருதப்படுகிறார். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுவார். அந்த வகையில் 2022 அக்டோபர் 17 ஆம் தேதி சூரியன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு சென்றார். துலாம் ராசியில் சூரியன் பலவீனமாக இருப்பார் என்பதால் சில ராசிக்காரர்கள் எதிர்மறையான பலன்களைப் பெறுவார்கள். சூரியன் துலாம் ராசிக்கு செல்லும் போது தான் ஐப்பசி மாதம் பிறக்கிறது.

துலாம் ராசியில் சூரியன் இருப்பதால் சில ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், வேலைகளில் தோல்வியைக் காண நேரிடும் மற்றும் வீட்டில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இப்போது துலாம் ராசியில் இருக்கும் சூரியனால் எந்த ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இக்காலத்தில் குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வீட்டில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். இதனால் மனநலம் பாதிக்கப்படும். பணியிடத்தில் சூழ்நிலைகள் கடினமாக இருக்கும். இக்காலத்தில் எந்த ஒரு பிரச்சனையையும் பேசித் தீர்க்க முயற்சி செய்யுங்கள். இக்காலத்தில் எந்த பயணத்தையும் மேற்கொள்ளாதீர்கள். இல்லாவிட்டால் இழப்பை சந்திக்க நேரிடும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் உங்களின் பேச்சு சற்று கடுமையாக இருக்கும். எனவே மற்றவர்களுடன் எளிதில் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். உங்களுக்கு கொடுத்த பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் போகும். உங்களின் பணிகளில் தாமதம் ஏற்படும். வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் வீட்டு பெரியோர்களின் ஆசியைப் பெற மறவாதீர்கள். வாகனம், சொத்து போன்றவற்றை வாங்க நினைத்தால், வீட்டு பெரியோர்களின் ஆலோசனையைப் பெற்ற பின்னர் முடிவெடுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்காது. எந்த ஒரு புதிய வியாபாரத்தை தொடங்கும் முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து பின் முடிவெடுங்கள். உங்களின் இமேஜ் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருங்கள். பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள். திருமணமான தம்பதிகளுக்கு இடையே சண்டை வர வாய்ப்புள்ளது. எனவே இக்காலத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியால் வருமானத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். குறித்த நேரத்தில் வேலைகளை முடிக்க முடியாமல் போகும். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் சண்டை வரலாம். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. எவ்வளவு கடினமாக உழைத்தாலும் நற்பலன் கிடைக்காது. உங்களின் கோபம் இக்காலத்தில் அதிகரிக்கும். பணியிடத்திலும், குடும்பத்திலும் சற்று உங்களின் நடத்தையை கவனிக்க வேண்டும். ஏனெனில் அதிக கோபமானது உங்கள் இமேஜை பாழாக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications