Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
Surya Gochar 2022: சூரிய பெயர்ச்சியால் அக்டோபர் 17 முதல் 12 ராசிக்கும் எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
2022 அக்டோபர் 17 ஆம் தேதி சூரியன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்லவிருக்கிறார். துலாம் ராசிக்கு சூரியன் செல்லும் போது தமிழ் மாதமான ஐப்பசி மாதம் பிறக்கிறது.

நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார். ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் 12 ராசிகளையும் பாதிக்கும். ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். அதில் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில் 2022 அக்டோபர் 17 ஆம் தேதி சூரியன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்லவிருக்கிறார். துலாம் ராசிக்கு சூரியன் செல்லும் போது தமிழ் மாதமான ஐப்பசி மாதம் பிறக்கிறது. சூரியனின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளையும் நிச்சயம் பாதிக்கும். இப்போது சூரியன் துலாம் ராசிக்கு செல்வதால் 12 ராசிக்காரர்களுக்கும் ஐப்பசி மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். எனவே திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகளை சந்திக்கலாம். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நிலைமை மோசமாகாமல் இருக்க சிந்தித்து செயல்படுவது நல்லது. வணிகம் மற்றும் கூட்டு வணிகம் செய்பவர்கள் இக்காலத்தில் முக்கிய முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது. பணிபுரிபவர்கள் தங்களின் முயற்சியால் வெற்றி பெறுவார்கள். மொத்தத்தில், எதை செய்வதற்கு முன்பும் சிந்தித்து செயல்பட வேண்டும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இப்பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். இருப்பினும், ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உங்கள் தாயாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் எதிரிகளை வெல்வீர்கள். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். கவனமாக இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் சற்று மன அழுத்தத்தை உணர்வீர்கள். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வரும்.

மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். எனவே இக்காலம் சற்று கடினமாக இருக்கும். குறிப்பாக ஆக்கப்பூர்வமான துறைகள் மற்றும் விளையாட்டுக்களில் இருப்பவர்களுக்கு கடினமாக இருக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திக்க இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் நல்ல தரமான நேரத்தை செலவிட முயற்சிக்க வேண்டும். இக்காலகட்டத்தில் எந்த விஷயமும் சரியான திசையில் செல்லாது. இருந்தாலும், நல்ல முயற்சிகளைப் பெற தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். வணிகம் அல்லது வேலைக்காக பயணம் செய்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றியைப் பெற அதிக முயற்சி எடுக்க வேண்டும்

கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சொத்துக்களை வாங்கும் முன் யோசிக்க வேண்டும். ஏதாவது சொத்து வாங்க நினைத்தால், அனைத்து தகவல்களையும் சரியாக சோதித்த பின்னரே வாங்க வேண்டும். தாயின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறத. வீட்டுச் சூழல் சற்று மோசமாக இருக்கும். இருப்பினும், வீட்டுச் சூழலை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். வீட்டில் உள்ளோருடன் போதுமான நேரத்தை செலவிட அறிவுறுத்தப்படுகிறது. பணப் பிரச்சனைகள் தீரும். புதிய விஷயங்களைத் தொடங்க சிறந்த காலம். ஆனால் சற்று கவனமாக இருக்க வேண்டும். மொத்தத்தில் இக்காலம் நல்லது, கெட்டது கலந்திருக்கும். கவனமாக இருந்தால், பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் வேலை தொடர்பான பயணங்கள் அதிகரித்தாலும், வெற்றி பெறுவீர்கள். ஆனால் பயணங்கள் உங்கள் ஆரோக்கியத்தை சற்று பாதிக்கும் என்பதால் உணவில் சற்று கவனமாக இருங்கள். மறைமுக எதிரிகள் உங்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்பார்கள். எனவே யாருடனும் எந்த ஒரு முக்கியமான விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஒரு நற்செய்தி என்றால், இக்காலத்தில் எந்த ஒரு விஷயத்தாலும் உங்களுக்கு தீங்கு நேராது.

கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இக்காலத்தில் உங்கள் வேலை மிகவும் முக்கியம். பண விஷயங்கள் சாதகமற்றதாக இருக்கும். எனவே இக்காலத்தில் யாரிடமும் கடனாக பணத்தை வாங்கிவிடாதீர்கள். இல்லாவிட்டால் அதை திருப்பி செலுத்துவதில் சிரமத்தை சந்திப்பீர்கள். பணத்தை முதலீடு செய்வதற்கு முன் யோசியுங்கள். குடும்பத்தில் சில தவறான புரிதல்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே பொறுமையாக இருங்கள். ஆனால் உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இக்காலத்தில் பொறுமையைக் கையாண்டால், விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வியாபாரிகள் இக்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாகவே பணத்தைப் பெறுவார்கள். இக்காலமானது புதிதாக எதையும் தொடங்க சாதகமான காலமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு அதில் வெற்றி கிடைக்கும். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். இதனால் உங்களின் நம்பிக்கையும் நேர்மறையான எண்ணமும் அதிகரிக்கும். ஆனால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதில் சிரமப்படுவார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். இக்காலத்தில் புதிய வாடிக்கையாளர்களை தவிர்ப்பது நல்லது. காதலிப்பவர்கள் தவறான புரிதலால் உறவை முறித்துக் கொள்ள வாய்ப்புள்ளதால், கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறத. வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் குறைந்த முயற்சியில் வெற்றி பெறுவார்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் அரசு துறையில் இருப்பவர்கள் அல்லது அரசு வேலை பெற விரும்புபவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வணிகம் அல்லது தனிப்பட்ட வேலை காரணமாக நீண்ட தூர பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ளது மற்றும் அந்த பயணம் லாபகரமாகவும் வெற்றிகரமாகவும் இருக்கும். மிகுந்த கவனத்துடன் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் நன்றாக இருக்கும். இக்காலத்தில் பெயரும், புகழும் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது.

மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வணிகர்கள் புதிய தொடர்புகளைப் பெறுவார்கள் மற்றும் அதனால் வணிகம் செழித்து வளரும். ஆனால் இக்காலத்தில் உங்களின் எந்த ஒரு தகவலையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இல்லாவிட்டால் உங்களின் போட்டியாளர்கள் உங்களை வெல்வதற்கான வாய்ப்புள்ளது. இக்காலத்தில் உங்களின் தந்தையின் ஆதரவைப் பெறுவீர்கள். எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும், உங்கள் தந்தையின் ஆலோசித்து பின் எடுங்கள். அதே சமயம் உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். பணியிடத்தில் இடமாற்றத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு அது கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் காதலிப்பவர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் மற்றும் தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல சாதகமான காலம். வியாபாரிகள் தங்கள் கூட்டாளருடன் சிறந்த முறையில் செயல்படுவார்கள். வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு இது சிறந்த காலம். இக்காலகட்டத்தில் உங்கள் முடிவுகளில் உறுதியாக இருந்தால், வெற்றி உங்களுக்கு கிடைக்கும்.

மீனம்
மீன ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வேலையை மாற்ற விரும்புபவர்கள் சற்று காத்திருக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் வேலை மாற்றமானது சாதகமற்ற முடிவுகளைத் தரலாம். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். யாருக்கும் பணத்தை கடனாக கொடுத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் அந்த பணம் திரும்ப கிடைக்காது. பண விஷயத்தில் சற்று கவனமாக இருங்கள். மறைமுக எதிரிகளால் சற்று மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். எனவே யாருடனும் உங்கள் தகவலை பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications