Just In
- 8 min ago Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- 44 min ago 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- 2 hrs ago சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
Don't Miss
- Movies இழுத்தடித்த த.செ.ஞானவேல்?.. உச்சக்கட்ட டென்ஷனான ரஜினிகாத்?.. வேட்டையன் நிலைமை இதுவா?
- News இந்திய பணக்காரர்களில் ஒரு முஸ்லிம்கூட இல்லையே ஏன்? மோடிக்கு காங். கேள்வி
- Automobiles கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சூரியன் துலாம் ராசிக்கு செல்வதால் ஒரு மாதம் இந்த ராசிக்காரங்க ஏகப்பட்ட பிரச்சனையை சந்திப்பாங்க..
சூரியன் கன்னியில் இருந்து துலாம் ராசிக்கு அக்டோபர் 17 ஆம் தேதிக்கு செல்கிறார். இதனால் தமிழ் மாதமான ஐப்பசி மாதம் பிறக்கிறது. துலாம் ராசிக்கு செல்லும் சூரியன் அங்கிருந்து நவம்பர் 16, 2021 அன்று விருச்சிக ராசிக்கு செல்வார்.
வேத ஜோதிடத்தில், சூரிய மண்டலத்தில் இருக்கும் சூரியனுடன் மற்ற கிரகங்களுக்கும் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சூரியன் மற்ற கிரகங்களைப் போலவே, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும். அதுவும் ஒவ்வொரு மாதமும் சூரிய பெயர்ச்சியானது நிகழும். அந்த வகையில் இந்த மாதம் சூரியன் கன்னியில் இருந்து துலாம் ராசிக்கு அக்டோபர் 17 ஆம் தேதிக்கு செல்கிறார். இதனால் தமிழ் மாதமான ஐப்பசி மாதம் பிறக்கிறது. துலாம் ராசிக்கு செல்லும் சூரியன் அங்கிருந்து நவம்பர் 16, 2021 அன்று விருச்சிக ராசிக்கு செல்வார்.
நவகிரகங்களின் ஆட்சியாளராக கருதப்படும் சூரியன், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது, ஒவ்வொரு ராசியிலும் குறிப்பிட்ட தாக்கத்தை உண்டாக்கும். இப்போது துலா ராசிக்கு செல்லும் சூரியனால் ஒவ்வொரு ராசியிலும் எந்த மாதிரியான தாக்கம் இருக்கும், ஜப்பசி மாதம் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காணலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு, இப்பெயர்ச்சி காலத்தில் ஈகோவால் வேலையிலும், உறவுகளிலும் பிரச்சனைகள் உருவாகலாம். உடன் பணிபுரிபவர்களுடனான மோதல்கள் வாக்குவாதங்களாகவும், சண்டைகளாகவும் மாறும். அரசு பணியாளர்களுக்கு இது சாதகமான காலமாக இருக்காது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில செரிமான பிரச்சனைகளை சந்திக்கலாம். மாணவர்கள் சில பாதுகாப்பின்மையை எதிர்கொள்வார்கள். ஆனால் அதை அவர்கள் வெல்வார்கள். உறவில் இருப்பவர்களுக்கு இது கடினமான காலமாக இருக்கும். ஏனெனில் இக்காலத்தில் நம்பிக்கை தொடர்பான பிரச்சனைகள் உருவாகக்கூடும். ஆனால் அது விரைவில் தீர்க்கப்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இக்காலத்தில் எதிரிகள், போட்டி மற்றும் கடன்களை சமாளிக்க வேண்டியிருக்கும். நீங்கள் ஒரு புதிய வீடு வாங்க திட்டமிட்டிருந்தால், பொறுமையாக காத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனைக்குரிய சொத்துக்களை வாங்கி அவதிப்படக்கூடும். மாணவர்களுக்கு செறிவு பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் மன உறுதியுடன் அதை வெல்வார்கள். இடமாற்றத்தை எதிர்பார்க்கும் அரசு பணியாளர்கள் இக்காலத்தில் அதிர்ஷ்டசாலிகள். பிபி மற்றும் கொழுப்பு பிரச்சனை இருப்பவர்கள், கவனமாக இருக்க வேண்டும். உடன் பணிபுரிபவர்களுடன் வாக்குவாதம் செய்யாதீர்கள். இக்காலத்தில் கடன்களை அடைப்பது கடினமாக இருக்கும்.
மிதுனம்
காதலிக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு இது நல்ல காலம். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு அழகான பிணைப்பு ஏற்படும். பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தி சிறந்த மதிப்பெண்களைப் பெறுவார்கள். இளைய சகோதரர்களுடன் உறவு நன்றாக இருக்காது. வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் மற்றும் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் தேவையில்லாத அறிக்கைகளைப் புறக்கணிக்க வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சி காலத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிறைந்து இருப்பார்கள். உங்கள் தாயின் ஆரோக்கியம் தொடர்பான கவலைகள் இருக்கலாம். எனவே மருத்துவரிடம் அவரை அழைத்துச் செல்லுங்கள். இக்காலத்தில் பேசும் போது பயன்படுத்தும் வார்த்தையை கவனித்து பேசுங்கள். புதிய முயற்சிகளில் ஈர்க்கப்படுவீர்கள். இக்கால கட்டத்தில் புதிய சவால்களை எதிர்கொள்வீர்கள். தொழிலதிபர்கள் தங்கள் வியாபாரத்தைத் தொடர அல்லது சாதகமான முடிவுகளைப் பெற கூடுதல் முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சி காலத்தில் ஆற்றலின்றி இருப்பார்கள். உங்கள் திட்டங்களை முடிப்பதில் தடைகளை சந்திக்க நேரிடும். உங்கள் பணியிடத்தில் மன அழுத்தம் நிறைந்த சூழல் இருக்கலாம். உங்கள் போட்டியாளர்கள் பிரச்சனைகளை உருவாக்கலாம். இது உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் தரும். கழுத்து அல்லது தோள்பட்டை தசைகளில் சில வலிகள் இருக்கலாம் என்பதால் உங்கள் ஆரோக்கியத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். ஈகோவால் எந்தவொரு விஷயத்தை கெடுத்துவிடாதீர்கள். உங்கள் உடன் பணிபுரிபவர்களுக்கு நீங்கள் உதவுவீர்கள் மற்றுத் ஆதரிப்பீர்கள். உங்களின் சகிப்புத்தன்மை மோசமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சி காலத்தில் நிறைய செலவு செய்வார்கள். இது சேமிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே பட்ஜெட்டை பராமரியுங்கள். உங்கள் நிதி விஷயங்களில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. MNC-களில் பணிபுரியும் அல்லது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் பழகுபவர்களுக்கு இது சிறந்த காலமாக இருக்கும். நீங்கள் சில உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே, நீங்கள் ஜங்க் உணவில் இருந்து விலகி இருக்க வேண்டும். நிதி அடிப்படையில் உங்கள் உறவினர்களிடமிருந்து நீங்கள் பயனடையலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இக்காலத்தில் தங்களின் தோற்றத்தின் மீது அதிக அக்கறை கொள்வார்கள். மனம் மற்றும் உடல் வலிமையை மேம்படுத்தும் கடுமையான உடற்பயிற்சி வழக்கத்தை மேற்கொள்வீர்கள். நிதி விஷயத்தில் சற்று பாதுகாப்பற்றதாக உணர்வீர்கள். உங்கள் நண்பர்கள் அல்லது அன்பானவர்களுடன் சில ஈகோ மோதல்கள் இருக்கும். புதிய திட்டங்களில் ஆர்வம் மற்றும் ஈடுபாடு இருக்கும். உங்கள் வீட்டின் பெரியவர்களின் மீது அக்கறையுடன் இருப்பீர்கள். வெளியாட்கள் உங்களை ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யலாம். எனவே கவனமாக இருங்கள்.
விருச்சிகம்
சூரிய பெயர்ச்சி காலத்தில் விருச்சிக ராசிக்காரர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை தைரியம் நிறைந்திருக்கும். எம்என்சியில் பணிபுரிபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்கத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் சில சவால்களை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் வேலையை இழக்கலாம். தொழிலதிபர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களின் வணிகம் நிறைய சிக்கல்களைச் சந்தித்து நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் நீங்கள் பயணத்தைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது பலனளிக்காது. நீங்கள் அதிகமாக செலவழிக்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி காலத்தில் நிதி நிலைமை நிலையற்றதாக இருக்கும். மேலும் உங்கள் தந்தையுடனான உறவு சற்று பிரச்சனை இருக்கும். நிதி அல்லது சொத்து தொடர்பான சில சர்ச்சைகள் அல்லது சண்டைகள் எழலாம். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு நல்ல நேரமாக இருக்காது. வணிகர்கள் புதிய வருமான ஆதாரங்களைத் தேடுவார்கள். முதலீட்டின் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் இல்லையெனில் பின்னர் பெரிய பின்னடைவு ஏற்படலாம். பணம் சம்பாதிப்பதற்கான நியாயமற்ற வழிகளில் நீங்கள் விழ வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சி காலத்தில் சில கஷ்டங்களை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் உங்கள் முதலாளியுடனான உறவு நன்றாக இருக்காது. எனவே, தேவையில்லாமல் கருத்துக்களை தெரிவிப்பதைத் தவிர்த்திடுங்கள். இக்காலத்தில் உங்களுக்கு என்ன தேவை மற்றும் என்ன வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள். திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் பிரச்சினைகளை சந்திக்கலாம். இந்த நேரத்தில் நீங்கள் நிதி இழப்புகளையும் சந்திக்க நேரிடும். கடினமாக உழைத்தால் வெற்றியை அடைய முடியும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இக்காலத்தில் தங்கள் உறவில் மகிழ்ச்சியாக இல்லாமல் இருக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மோசமடையக்கூடும். உங்கள் தந்தையுடனான உறவும் பாதிக்கப்படலாம். எனவே அனைத்து விஷயங்களையும் அமைதியான வழியில் தீர்க்க முயற்சி செய்யுங்கள். வீட்டின் சூழல் அவ்வளவு சிறப்பாக இருக்காது. தொடர்ந்து சவால்களை சந்திக்கலாம். இக்காலத்தில் கவனமாக இருங்கள். முக்கியமாக உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி காலம் அவ்வளவு சாதகமாக இருக்காது. உங்கள் பணிகளில் தடைகளை சந்திக்க நேரிடும். செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். அதோடு மன அழுத்தமும் இருக்கும் என்பதால், மன ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். இக்காலத்தில் நீங்கள் சில விஷயங்களுக்கு ஆடம்பரமாக செலவழிக்கலாம். இந்த காலகட்டத்தில் சூதாட்டத்தைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் செயல்களுக்காக மற்றவர்களை குற்றம் சாட்டாதீர்கள். நீங்களே பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்.