Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
சூரியன் சிம்ம ராசிக்கு செல்வதால் ஆகஸ்ட் 17 முதல் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
சிம்மம் செல்லும் சூரியனால் பல ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கவுள்ளன. இப்போது ஆகஸ்ட் 17 ஆம் தேதி சிம்மம் செல்லும் சூரியனால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவராக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி மாற்றும் போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. தற்போது சூரியன் கடக ராசியில் உள்ளார். இவர் 2022 ஆகஸ்ட் 17 ஆம் தேதி சிம்ம ராசிக்கு செல்கிறார். சிம்ம ராசிக்கு சூரியன் நுழையும் போது ஆவணி மாதம் பிறக்கிறது. சிம்மம் செல்லும் சூரியனால் பல ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கவுள்ளன. இப்போது ஆகஸ்ட் 17 ஆம் தேதி சிம்மம் செல்லும் சூரியனால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இது உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களைக் கொண்டுவரும். இக்காலத்தில் மாணவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். அவர்களால் படிப்பில் முழு கவனத்தை செலுத்த முடிவதால் சிறப்பாக செயல்பட முடியும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கூடுதலாக நிதி ரீதியாக கையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். பணியிடத்தில், உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடனான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படலாம். நிதி நிலைமை மேம்படும். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவதற்கான வாய்ப்புள்ளது. இக்காலகட்டத்தில் உங்கள் குடும்பத்தினரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்கள் தங்கள் துறையில் சிறப்பாக செயல்படுவார்கள். நிதி வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நல்ல ஆற்றலுடன் இருப்பீர்கள். சமூகத்தில் அந்தஸ்து மேம்படும். வாழ்க்கையில் பல நேர்மறையான விஷயங்கள் நடக்கும். சட்ட விஷங்களில் வெற்றி கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கூடுதலாக தன்னம்பிக்கை அதிகம் நிறைந்து இருப்பதால், வேலையில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். இக்காலத்தில் நிதி நிலை வலுவாக இருக்கும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். இக்காலத்தில் வணிகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும். அரசு வேலைக்கு தயாராகுபவர்களுக்கு நற்செய்திகள் கிடைக்கும்.

மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் கணிசமாக மேம்படும். சூரியனின் உதவியால் நோயெதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும். கூடுதலாக, மாணவர்களுக்கு இது நல்ல காலம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இக்காலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு நல்ல காலமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications