Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
சூரியன் சிம்ம ராசிக்கு செல்வதால் ஆகஸ்ட் 17 முதல் இந்த ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்..
2022 ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரியன் கடக ராசியில் இருந்து தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்கு செல்கிறார். சூரியன் சொந்த ராசிக்குள் செல்வதால் சில ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டியிருக்கும்.
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அது மனித வாழ்க்கையை பாதிக்கிறது. நவகிரகங்களில் சூரியன் தலைவனாக கருதப்படுகிறார். இவர் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி மாற்றும் போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.

அந்த வகையில் 2022 ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரியன் கடக ராசியில் இருந்து தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்கு செல்கிறார். சூரியன் சொந்த ராசிக்குள் செல்வதால் அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கம் சிறப்பாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டியிருக்கும். இப்போது சூரியன் சிம்ம ராசிக்கு செல்வதால் 2022 ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.

மகரம்
சூரியன் சிம்ம ராசியில் இருக்கும் காலத்தில் மகர ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சூரியன் மகர ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இந்த வீடு நோய் வீடு. எனவே இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் சற்று அதிக கவனமாக இருக்க வேண்டும். தொழில் விஷயத்தில் எந்த ஒரு பெரிய முடிவுகளையும் எடுக்காதீர்கள். சொத்துக்களில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

கும்பம்
கும்ப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த சூரிய பெயர்ச்சி காலமானது சற்று தொல்லைகள் நிறைந்த காலமாக இருக்கும். இக்காலத்தில் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். கூட்டு வேலை செய்து வந்தால், சில இழப்புக்களை சந்திக்க நேரிடும். கூட்டாண்மை வேலையை தொடங்க நினைத்தால், அதற்கு இது சிறந்த காலம் அல்ல. எனவே சற்று அதை நிறுத்தி வையுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உங்களின் முக்கியமான வேலை இக்காலத்தில் நிறுத்தப்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களுடனான உறவுகள் மோசமடையக்கூடும்.

தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் தனுசு ராசிக்காரர்களுக்கு சற்று வேதனை நிறைந்த காலமாக இருக்கும். இக்கால கட்டத்தில் ரகசிய எதிரிகளால் தொல்லைகளை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் வாக்குவாதங்களை தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் கௌரவம் பாதிக்கப்படலாம். நீண்ட தூர பயணங்களைத் தவிர்த்திடுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மோசமடைய வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications