Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...!
Surya Gochar 2022: சிம்மம் செல்லும் சூரியனால் அடுத்த ஒரு மாசம் 12 ராசிக்கும் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
2022 ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரியன் சிம்ம ராசிக்கு செல்வதால் 12 ராசிகளும் பெறும் பலன்கள், அதாவது 2022 ஆவணி மாத ராசிப்பலன்கள் என்னவென்பதைக் காண்போம்.
வேத ஜோதிடத்தில் சூரியன் தந்தை, மரியாதை, வெற்றி, முன்னேற்றம், பொது மற்றும் தனியார் துறைகளில் பணி, பதவி உயர்வு போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறார். சூரியன் நிலையை வைத்து தான் ஒருவருக்கு அரசாங்க வேலை கிடைக்குமா மற்றும் பதவி உயர்வு கிடைக்குமா என்பது பற்றி கூற முடியும். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக இருந்தால், அவர் வாழ்நாள் முழுவதும் பணியிடத்தில் முன்னேற்றத்தைக் காணமாட்டார்கள்.

இப்படிப்பட்ட சூரியன் தற்போது சந்திரன் ஆளும் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்கு 2022 ஆகஸ்ட் 17 ஆம் தேதி காலை 07.14 மணிக்கு செல்கிறார். சூரியனின் ராசிமாற்றம் அனைத்து ராசிகளிலும் நிச்சயம் இருக்கும். சொல்லப்போனால், சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதம் பிறக்கிறது. அதுவும் சிம்ம ராசிக்கு சூரியன் செல்லும் போது ஆவணி மாதம் பிறக்கிறது. இப்போது 2022 ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரியன் சிம்ம ராசிக்கு செல்வதால் 12 ராசிகளும் பெறும் பலன்கள், அதாவது 2022 ஆவணி மாத ராசிப்பலன்கள் என்னவென்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். உறவில் இருப்பவர்களுக்கு சிறந்த நேரம். கோபம் மற்றும் ஈகோவால் திருமண வாழ்க்கை சற்று பாதிக்கப்படும். நிதி ரீதியாக நன்றாக இருக்கும். உங்களின் கடின உழைப்பிற்காக எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். குறிப்பாக பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் வீட்டில் தாயார் அதிக ஆதிக்கம் செலுத்துவார். தேவையற்ற ஈகோ மோதல்கள் காரணமாக, உங்கள் வீட்டின் மகிழ்ச்சியான சூழ்நிலை பாதிக்கப்படலாம். எனவே உங்களை அமைதியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். சொத்து, வாகனம் வாங்க இது மிகவும் நல்ல நேரம். அதற்கான வாய்ப்பு கிடைத்தால் யோசிக்காமல் வாங்குங்கள். பணியிடத்தில் உங்களின் குழுவை சிறப்பாக வழிநடத்துவீர்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் உடன்பிறந்தவர்களுடன் ஒரு குறுகிய தூர பயணத்தை மேற்கொள்வீர்கள். இது உங்களின் பிணைப்பை வலுப்படுத்தும். சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்கள் போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் பிரகாசமாக இருக்கும். இக்காலத்தில் உங்களின் தகவல் தொடர்பு உங்களைச் சுற்றியுள்ளவர்கள் மீது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும். இக்காலத்தில் நீங்கள் தன்னம்பிக்கை மற்றும் நம்பிக்கையான நடத்தை காரணமாக பிரகாசிப்பீர்கள். இக்காலத்தில் உங்கள் தந்தையுடனான உறவு நன்றாக இருக்கும்.

கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் நிதி துறையில் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். உங்கள் குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆராய்ச்சிப் பணியில் உள்ளவர்கள், மாணவர்கள், ஜோதிடத்தின் மீது நாட்டம் உள்ளவர்களுக்கு இது சிறப்பான காலமாக இருக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். உங்களின் தலைமைத்துவமும், முடிவெடுக்கும் திறனும் அனைவரையும் கவரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களின் ஆதிக்க குணம், சில தேவையற்ற ஈகோ மோதல்கள், உங்கள் துணையுடனான உறவில் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தும். எனவே திருமண வாழ்க்கையில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி
கன்னி ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் வெளிநாட்டு நிலம், அரசு அல்லது உயர் அதிகாரிகளால் ஆதாயமடைவார்கள். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. எம்.என்.சி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அல்லது இறக்குமதி/ஏற்றுமதி தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. செலவுகளும், இழப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் குழந்தைகளால் பெருமை அடைவார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் தொழில் வாழ்க்கையில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அரசு அல்லது உயர் அதிகாரிகளால் ஆதாயம் அடைவீர்கள். பணியில் புதிய ஆற்றலைப் பெறுவீர்கள். உங்கள் தலைமைப் பண்புகள் அனைவராலும் பாராட்டப்படும். இக்காலத்தில் உங்களைப் பற்றிய விமர்சனத்தை நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், உங்கள் ஈகோ அதிகரித்து, எதிர்காலத்தில் சிக்கல்களை உருவாக்கும். இக்காலத்தில் உங்கள் தாயின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் ஈகோ மோதல்கள் மற்றும் கோபத்தால், குடும்ப மகிழ்ச்சி பாதிக்கப்படலாம். எனவே அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். ஆலோசகர்கள், வழிகாட்டிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு இது மிகவும் நல்ல நேரம். வெளிநாட்டில் உயர்கல்வி படிக்கத் திட்டமிடும் மாணவர்களுக்கு அதைத் தொடர நல்ல வாய்ப்பு உள்ளது. தனுசு ராசிக்காரர்களுக்கு தந்தை, குரு, வழிகாட்டிகளின் ஆதரவு கிடைக்கும். பயணங்களுக்கு இது மிகவும் ஏற்ற காலமாகும்.

மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு சவாலானதாக இருக்கும். திடீரென்று நடக்கும் பல விஷயங்கள் மன அமைதியின்மையைத் தரும். ஜோதிடம் அல்லது ஆராய்ச்சியில் நாட்டமுள்ளவர்கள், அதை கற்க இது சிறந்த காலம். உங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருங்கள். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். இல்லையெனில் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் உங்கள் வாழ்க்கைத் துளைக்கு இக்காலத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதே வேளையில், தேவையற்ற ஈகோ மோதல்கள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படலாம். இதன் காரணமாக உங்கள் துணையுடனான உங்கள் உறவில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். எனவே, உங்கள் திருமண வாழ்க்கையில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்திலும் சற்று கவனம் செலுத்த வேண்டும்.

மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். அரசாங்க பதவி அல்லது நிர்வாக பதவிகளில் பணிபுரிபவர்கள் வெற்றி பெறுவார்கள். உங்கள் எதிரிகள் அழிக்கப்படுவார்கள், அவர்கள் உங்களுக்கு எந்த வகையிலும் தீங்கு செய்ய முடியாது. இந்த காலத்தில் உங்கள் உள்ளுணர்வு சக்தி நன்றாக இருக்கும். இக்கால கட்டத்தில் உங்களால் மற்றவர்களை நன்றாக புரிந்து கொள்ள முடியும். இதனால் ஒரு பிரச்சனைக்கு உங்களால் சரியான தீர்வை வழங்க முடியும். முக்கியமாக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications











