Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
மிதுனம் செல்லும் சூரியனால் அடுத்த ஒரு மாசம் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
சூரியன் மிதுன ராசிக்கு செல்வது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி மிகவும் நல்ல பலனை அளிக்கும்.
ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஒரு கிரகம் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறினால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். அந்த தாக்கம் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ இருக்கலாம். அதில் சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் சுப வீட்டில் இருந்தால், வேலை, கௌரவம், பணம் போன்றவை கிடைக்கும்.

இத்தகைய சூரியன் கிரகங்களின் அதிபதி. இவர் 2022 ஜூன் 15 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்லவிருக்கிறார். சூரியன் மிதுன ராசிக்கு செல்வது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி மிகவும் நல்ல பலனை அளிக்கும். இப்போது மிதுனம் செல்லும் சூரியனால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆம் வீட்டின் அதிபதியான சூரியன், இப்பெயர்ச்சியின் போது 2 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் நிதி ரீதியாக உங்கள் வருமானம் அதிகரிக்கும். இக்காலத்தில் ஏதேனும் சொத்து அல்லது நிலத்தில் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளிடம் இருந்து ஒத்துழைப்பும், நல்ல பலன்களும் கிடைக்கும்.

கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டின் அதிபதியான சூரியன், இப்பெயர்ச்சியின் போது 12 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். இது தவிர இக்காலத்தில் உங்கள் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஆனால் அவற்றை எளிதில் சமாளித்து வெற்றி காண்பீர்கள். நீதிமன்றத்தில் வழக்கு ஏதேனும் நடந்து கொண்டிருந்தால், இக்காலத்தில் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களின் லக்னத்தின் அதிபதி சூரியன். இப்பெயர்ச்சியின் போது சூரியன் 11 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் நிதி ரீதியாக பல்வேறு ஆதாரங்களில் இருந்து நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். அதுமட்டுன்றி, வருமானம் அதிகரிக்கும். இதன் விளைவாக உங்கள் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். அதோடு சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். காதல் உறவுகளும் நன்றாக இருக்கும். இக்காலத்தில் உங்கள் நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். மேலும் பணியிடத்தில் பதவி உயர்வால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

கன்னி
கன்னி ராசியின் 12 ஆவது வீட்டின் அதிபதியான சூரியன், இப்பெயர்ச்சியின் போது 10 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஏனெனில் இக்காலத்தில் வாழ்க்கையின் முன்னேறுவதற்கான வலுவான வாய்ப்பு உருவாகும். சம்பளம் பெறுபவர்கள் தங்கள் பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். இதன் விளைவாக உயர் அதிகாரிகளால் பதவி உயர்வு பெறுவார்கள்.

மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டின் அதிபதியான சூரியன், இப்பெயர்ச்சியின் போது 6 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இக்காலத்தில் முன்பை விட உற்சாகமாக இருப்பீர்கள். இதனால் உங்கள் வேலைகளை விரைவாக செய்வீர்கள். இக்காலத்தில் எந்த வகையான எதிர்மறை எண்ணங்களும் ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். அதற்கு நம்பிக்கையுடனும், தைரியமாகவும் இருக்க வேண்டும். நிதி வாழ்க்கையைப் பொறுத்தவரை, கடன் வாங்கியிருந்தால், இந்த காலகட்டத்தில் நீங்கள் அதை திருப்பிச் செலுத்திவிடுவீர்கள். நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக வரும்.

மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டின் அதிபதியான சூரியன், இப்பெயர்ச்சியின் போது 4 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் பணிபுரிபவர்கள் தங்களின் பணியிடத்தில் சில சிக்கல்களை சமாளிக்க வேண்டியிருக்கும். ஆனால் உங்களின் கடின உழைப்பு மற்றும் புரிதலால், இப்பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். மறுபுறம், தற்போதைய வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு, இந்த நேரம் குறிப்பாக அவர்களுக்கு சாதகமாக இருக்கும். முக்கியமாக நல்ல இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications