Just In
- 2 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்த்திட வேண்டும்...
- 17 hrs ago
உங்க கணவன் அல்லது காதலனுக்கு இந்த விஷயங்கள் மட்டும் தெரிஞ்சிருந்தா நீங்க கொடுத்து வச்சவங்களாம்!
- 19 hrs ago
உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க இரத்தத்தில் சர்க்கரை ஆபத்தான அளவில் இருக்குனு அர்த்தம்... உஷார்!
- 22 hrs ago
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று மகாத்மா காந்தி அவா்கள் எங்கு இருந்தாா் தெரியுமா?
Don't Miss
- Movies
எனக்கு இந்த நடிகை தான் பிடிக்கும்.. மனைவி பெயரை மறந்த பிரசன்னா..செம ரியாக்ஷன் கொடுத்த சினேகா!
- News
87 ஆவது நாள் இன்று.. பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமுண்டா? சென்னை நிலவரம் என்ன?
- Finance
இந்த ஒரு செயலி இருந்தால் போதும்.. விமான நிலையத்தில் செக்-இன் ரொம்ப ஈஸி!
- Automobiles
சுதந்திர தினத்தில் இந்தியர்களுக்கு விருந்து வைத்த மஹிந்திரா... டாடாவுக்கு இனிமேல் செம போட்டி காத்திருக்கு!
- Sports
டி20 உலகக்கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்புள்ளதா??.. ஆகாஷ் சோப்ரா கூறிய விளக்கம்.. அட இதுவும் சரிதானே?
- Technology
ஜியோக்கு போட்டியாக Airtel அறிமுகம் செய்த 2 புது திட்டம்.! இன்றே ரீசார்ஜ் செய்யுங்க.!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
மிதுனம் செல்லும் சூரியனால் இந்த 4 ராசிக்காரர்களின் பிரச்சனை அதிகரிக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றுகின்றன. கிரகங்களின் ராசி மாற்றங்களால் சிலருக்கு நற்பலன்களும், சிலருக்கு தீய பலன்களும் கிடைக்கும். அதுவும் கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அந்த வகையில் சூரியன் 2022 ஜூன் 15 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு மாறியுள்ளார்.
ஜோதிடத்தில் சூரியன் ஆட்சி ஸ்தானம், தந்தை மற்றும் சமூகத்தில் மரியாதை போன்றவற்றுடன் தொடர்புடையது. ஆகவே சூரியனின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இந்த சூரிய மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். மிதுனம் செல்லும் சூரியனால் எந்த ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
சூரிய பெயர்ச்சியால், மேஷ ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கையில் சில சவால்களை சந்திக்க நேரிடும். தந்தையின் உடல்நிலை மோசமடையக்கூடும். எனவே இக்காலத்தில் உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். அதே வேளையில், உங்கள் இளைய உடன்பிறப்புகளுடனான உறவு மோசமடைய வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக, வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆனால் பணிபுரிபவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

துலாம்
சூரியனின் ராசி மாற்றத்தால், துலாம் ராசிக்காரர்கள் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். மாணவர்கள் விரும்பிய முடிவைப் பெற முடியாமல் போகலாம். மேலும் நிதி இழப்புகளும் ஏற்படலாம். எனவே கவனமாக இருங்கள். வியாபாரிகள் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும். இருப்பினும் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

விருச்சிகம்
சூரிய பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் உடல்நலத்தில் அக்கறை காண்பிக்க வேண்டும். ஏனெனில்இக்காலத்தில் எலும்புகள் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். இரவு நேரத்தில் ஜங்க் உணவுகள் உண்பதைத் தவிர்க்கவும். மேலும் இக்காலத்தில் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதிக பணம் சம்பாதிக்கும் போது கவனமாக இருங்கள். பணியிடத்தில் சக ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்வதைத் தவிர்த்திடுங்கள். சிலருக்கு இக்காலத்தில் சில இடங்களிலிருந்து நிதி ஆதாயம் கிடைக்கும்.

தனுசு
சூரிய பெயர்ச்சியால் திருமணமான தனுசு ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். சிறு சிறு விஷயங்களால் கூட வாழ்க்கைத் துணையுடன் சச்சரவுகள் ஏற்படலாம். கூட்டு தொழில் செய்பவர்கள் தங்கள் தொழில் கூட்டாளர் மீது சந்தேகம் கொள்ளலாம். காதலிப்பவர்கள், இக்காலத்தில் காதலன்/காதலியுடன் சில நல்ல நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும்.

சூரிய தோஷத்தைப் போக்கும் பரிகாரங்கள்
சூரியனுக்கு உகந்த நாள் ஞாயிற்றுக்கிழமை. இந்த ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் எழுந்தது நீராடி, சூரியனுக்கு சிவப்பு மலர்களை வழங்கி வணங்குங்கள். ஞாயிற்று கிழமைகளில் ஏழைகளுக்கு இனிப்புகளை வழங்குங்கள். மேலும் சூரிய உதயத்தில் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும் பயனுள்ளதாக இருக்கும். அதோடு துறவிகளுக்கும் பசுக்களுக்கும் தவறாமல் உணவளியுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருங்கள் மற்றும் இந்நாளில் வீட்டை விட்டு வெளியேறும் முன் இனிப்புகளை சாப்பிடுங்கள்.