Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கடகம் செல்லும் சூரியனால் அடுத்த ஒரு மாதம் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டமான காலமா இருக்கப் போகுது...
சூரிய பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி நிலைமைகள் சாதகமாக இருக்கும். இப்போது கடகம் செல்லும் சூரியனால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ராசியை மாற்றுகிறது. கிரகங்கள் ராசியை மாற்றும் போது சிலருக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு துரதிர்ஷ்டமாகவும் இருக்கும். அதுவும் கிரகங்களின் ராஜாவான சூரியன் ஜூலை 16 ஆம் தேதி மிதுன ராசியின் இருந்து கடக ராசிக்கு மாறுகிறார். ஜோதிடத்தில் சூரியன் தலைமை, ஆட்சி நிலை, கௌரவம் ஆகியவற்றுடன் தொடர்புடையவர். எனவே சூரிய பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.

இந்த சூரிய பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி நிலைமைகள் சாதகமாக இருக்கும். இப்போது கடகம் செல்லும் சூரியனால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் ஆற்றல் நிறைந்தவர்களாக இருப்பார்கள். வணிகர்களுக்கு பெரிய லாபம் கிடைக்கும். மேலும் இக்காலத்தில் உடல் ரீதியாக சில சாதகமான மாற்றங்களை காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் சில மாற்றங்களும், சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கும். இக்காலத்தில் உடன்பிறந்தவர்களிடம் சற்று கவனமாக பேசுங்கள்.

கடகம்
கடக ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் உங்கள் வேலையை இக்காலத்தில் ஆற்றலுடன் செய்வீர்கள். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். வேலையில் நல்ல லாபம் கிடைக்கும். இக்காலத்தில் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். சிலருக்கு இக்காலத்தில் பண பலன்களும் கிடைக்கும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள், அதிலிருந்து பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. இருப்பினும், திருமண வாழ்க்கையில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் பல கனவுகள் நிறைவேறும். நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணத்தை முறையாக முதலீடு செய்வதன் மூலம் எதிர்கால லாபத்தையும் பெறலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்கள் சகோதர சகோதரிகளுடன் சில வேலைகளைத் தொடங்க விரும்பினால், அதற்கான நல்ல நேரம் இது. சூரியபகவானின் அருளால், இந்த காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்களின் மரியாதை கூடும்.

துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பணிபுரிபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்தினால் முன்னேறுவீர்கள். நிலுவையில் உள்ள பணிகள் சிலரின் உதவியால் முடியும். எது சரி எது தவறு என்பதை தெளிவாக புரிந்து கொள்வீர்கள். மாணவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். பண விஷயத்திலும் வெற்றி பெறுவீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் மதம் மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும். இக்காலத்தில் உங்களின் வழிகாட்டுதல்களால், வீட்டில் உள்ள இளையவர்களின் வாழ்க்கையில் சில சாதகமான மாற்றங்கள் ஏற்படக்கூடும். உயர்கல்வி பெறும் விருச்சிக ராசிக்காரர்களுக்கும் கல்வியில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். சமூகத்ல் உங்கள் மரியாதை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications