Surya Gochar 2022: கடகம் செல்லும் சூரியனால் அடுத்த ஒரு மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கப் போகுது தெரியுமா?

2022 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி இரவு 10:50 மணிக்கு சூரியன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார். இந்நாளில் தான் தமிழ் மாதமான ஆடி மாதம் பிறக்கிறது.

வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவராக புகழப்படுபவர் சூரியன். மற்ற கிரகங்களைப் போலவே சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு ஒவ்வொரு மாதமும் இடம் பெயர்வார். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி இரவு 10:50 மணிக்கு சூரியன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார். இந்நாளில் தான் தமிழ் மாதமான ஆடி மாதம் பிறக்கிறது.

Surya Rashi Parivartan Sun Transit in Cancer on 16 July 2022 Effects And Remedies On 12 Zodiac Signs In Tamil

சூரிய பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது சூரியன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்வதால், 12 ராசிக்காரரும் எந்த மாதியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என ஆடி மாத ராசிபலனைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் குடும்பத்தில் தகராறு மற்றும் மனக்குழப்பம் ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து விரும்பத்தகாத செய்திகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்கள் தாயின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். வாகனம் வாங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சிறந்ததாக இருக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் முன்னேற்றம் ஏற்படும் காலம் இது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பக்கவாதம், கொலஸ்ட்ரால் மற்றும் அசிடிட்டி பிரச்சனையை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் பணிபுரிபவர்கள் தங்களின் வேலையை மாற்றலாம் அல்லது இடமாற்றத்தைப் பெறலாம். வணிகர்கள் தங்கள் தயாரிப்புக்களை சந்தைப்படுத்துவதற்கான புதிய உத்திகளை முயற்சி செய்து, வெற்றி பெறுவார்கள். தைரியமும், வீரமும் கூடுவது மட்டுமின்றி, எடுக்கும் முடிவுகளிலும், செய்யும் பணியிலும் பாராட்டும் கூடும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். விளையாட்டு வீரர்களுக்கு இக்காலம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் தவறான தொடர்பால் சில நேரங்களில் அவர்களை நீங்கள் காயப்படுத்தலாம். இக்காலத்தில் உங்கள் நண்பர்களுடன் சிறு பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புக்கள் அமையும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் கலவையான பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் தொடர்பான பிரச்சனைகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்களின் ஆர்வத்தை சற்று கட்டுப்படுத்துங்கள். தகராறுகளில் இருந்து விலகி இருங்கள். சொத்து அல்லது நிலம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணியிடத்தில் சதியால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். அதற்கு வேலையை முடித்துவிட்டு நேராக வீட்டிற்கு வர வேண்டும். மன அழுத்தம் நிறைந்த குடும்ப சூழ்நிலையைத் தவிர்த்திடுங்கள்.

கடகம்

கடகம்

கடக ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் பணிபுரிபவர்கள் இக்காலத்தில் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது. சிலருக்கு அரசு வேலை கிடைக்கலாம். வணிகர்கள் குறிப்பாக குடும்ப வியாபாரம் செய்பவர்கள் இக்காலத்தில் நல்ல பலனைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக ஆக்ரோஷமாக இருப்பீர்கள். உங்களின் சிறந்த அணுகுமுறை உங்கள் இலக்குகுளை அடைய உதவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பிபி மற்றும் மனக்கவலை தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்படுவீர்கள்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் எம்.என்.சி-யில் பணிபுரிபவர்கள் வெளிநாட்டு திட்டங்களைப் பெறுவதோடு, நல்ல பாராட்டையும் பெறுவார்கள். தொழிலதிபர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏற்றுமதி தொழிலில் இருப்பவர்கள் இக்காலத்தில் சற்று லாபத்தைப் பெறுவார்கள். நீங்கள் மேற்கொள்ளும் பயணம் உடல் சோர்வை உண்டாக்கும். உங்களின் உடமைகள் திருட்டுப் போக வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இக்காலத்தில் நோயெதிர்ப்பு மண்டலம் மந்தமாக இருக்கும் என்பதால் உணவில் சற்று கவனம் செலுத்துங்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் பெரும் வெற்றி கிடைக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் செய்த வேலை பாராட்டப்படும். யாரேனும் மிகப்பெரிய வேலையைத் தொடங்க விரும்பினால் அல்லது புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்கள் மற்றும் மூத்த சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் வளர அனுமதிக்காதீர்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சூரியன் பெரும் வெற்றியைத் தருவார். நன்கு சிந்தித்து எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் பயனுள்ளதாக இருக்கும். இக்காலத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களை அவமானப்படுத்த நினைப்பவர்கள் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சூரியன் பல வழிகளில் வெற்றியைத் தருவார். அதிர்ஷ்டம் பெருகும். மதம் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீங்கள் ஏதாவது புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட முயற்சித்தால், இந்த சூரியப் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். உங்கள் வலிமையின் உதவியுடன், நீங்கள் மிகவும் கடினமான சூழ்நிலைகளைக் கூட எளிதாக வெல்வீர்கள். இக்காலத்தில் உங்கள் திட்டங்கள் மற்றும் உத்திகளை ரகசியமாக வைத்திருங்கள்.

தனுசு

தனுசு

தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சொத்து அல்லது மூதாதையர் சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். உங்கள் கௌரவம் அதிகரிக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். உங்களுக்கு எதிராக சதி செய்பவர்களிடம் கவனமாக இருங்கள். முக்கியமாக பணியிடத்தில் சதியால் பலியாவதைத் தவிர்த்திடுங்கள். அதற்கு தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டும்.

மகரம்

மகரம்

மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் கூட்டாண்மை வணிகத்தில் உள்ளவர்கள் தோல்விகளை சந்திக்க நேரிடும். மாமியார்-மாமனாருடன் கருத்து வேறுபாடுகளை வளர விடாதீர்கள். வியாபாரிகளுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். நீதிமன்றத்தில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வரும். பணியிடத்தில் உள்ள உயர் அதிகாரிகள் உங்களிடம் வழக்கத்திற்கு மாறாக அலட்சியமாக இருப்பார்கள். தனிப்பட்ட வாழ்க்கை மோதல்கள் நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் எதிர்காலத்திற்கான திட்டங்களை உருவாக்க சற்று காத்திருக்க வேண்டும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் நீதித்துறை மற்றும் வரித்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் கடன் வாங்குவதில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத்துணையின் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக உங்கள் துணையிடமிருந்து உணர்ச்சிப்பூர்வமான தூரத்தை நீங்கள் சந்திக்க நேரிடலாம். காதலில் இருப்பவர்கள் தங்கள் காதலருடன் அடிக்கடி சண்டையிடுவதால், இக்காலமானது சற்று கடினமாக இருக்கும்.

மீனம்

மீனம்

மீன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வியாபாரிகளுக்கு இக்காலத்தில் ஏற்ற இறக்கமான அதிர்ஷ்டம் இருக்கும். இக்காலத்தில் செய்யப்படும் எந்த முதலீடும் கடன்களுக்கு வழிவகுக்கும். மாணவர்களுக்கு ஆசைப்பட்ட வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு இது சிறந்த காலம். வேலை தேடுபவர்களுக்கு பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்காது. நீங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்வதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்க வேண்டியிருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, July 15, 2022, 15:41 [IST]
Desktop Bottom Promotion