Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
கடகத்தில் உள்ள சூரியனால் அடுத்த ஒரு மாசத்துக்கு இந்த 5 ராசிக்காரங்க எது செஞ்சாலும் வெற்றி கிடைக்குமாம்..
வேத ஜோதிடத்தில், ஆத்மா காரக கிரமாக சூரியன் கருதப்படுகிறது. நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஜூலை 16 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழைந்து, அந்த ராசியில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை இருக்கப் போகிறார்
வேத ஜோதிடத்தில், ஆத்மா காரக கிரமாக சூரியன் கருதப்படுகிறது. நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஜூலை 16 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழைந்து, அந்த ராசியில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை இருக்கப் போகிறார்.

ஜோதிடத்தின் படி, சூரியனின் இந்த பெயர்ச்சியால் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். மீதமுள்ள ராசிகளுக்கு கலவையான முடிவுகளைத் தருவதாக இருக்கும். இப்போது கடக ராசிக்கு சென்றுள்ள சூரியனால் எந்த 5 ராசிக்கு கைமேல் பலன் கிடைக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதையும் பாருங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சியால் மூதாதையர் சொத்தில் இருந்து நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. சமுதாயத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்த காலம் மிகவும் சாதகமாக இருக்கும். நீங்கள் அரசு வேலைக்காக காத்திருப்பவரானால், அந்த வேலை இக்கால கட்டத்தில் கிடைக்கும். இருப்பினும், ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த காலம் சிறந்ததாக இல்லை.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சியால், ஒவ்வொரு பணியையும் முழு பலத்துடன் வெற்றிரமாக முடிப்பீர்கள். பணியிடத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். இடமாற்றத்திற்காக காத்திருப்பவர்களுக்கு, இக்காலத்தில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. கூட்டாண்மை தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

மிதுனம்
சூரிய பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயங்களைப் பொறுத்தவரை மிகவும் அற்புதமாக இருக்கும். உங்கள் உடன்பிறப்புக்களின் ஆதரவை இக்காலத்தில் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புள்ளது. வணிகம் தொடர்பான ஒரு பெரிய ஒப்பந்தம் இக்காலத்தில் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி கைமேல் பலனளிக்கும். இக்கால கட்டத்தில் உங்களுக்கு எந்தவொரு பண பற்றாக்குறையும் இருக்காது. என்ன தான் பணம் அதிகமாக செலவானாலும், வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புக்களும் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் சமூகத்தில் உங்களின் அந்தஸ்தும் கௌரவமும் அதிகரிக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நிரூபிக்கும். பணியிடத்தில் உங்கள் பெயர் மற்றும் புகழ் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அரசாங்க வேலையை எதிர்பார்ப்பவர்களுக்கு இக்காலத்தில் அதிர்ஷ்டம் கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வைப் பெறுவீர்கள். உங்களின் பணி அலுவலகத்தில் பாராட்டப்படும். இந்த காலக்கட்டத்தில் பொருள் வசதிகளால் நிறைந்திருப்பீர்கள்.



Click it and Unblock the Notifications
