Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
சூரிய பெயர்ச்சியால் ஆகஸ்ட் 17 வரை இந்த 5 ராசிக்காரங்க கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும்..
மிதுன ராசியில் பயணித்து வந்த சூரியன் 2022 ஜூலை 16 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்தார். ஜூலை 16 ஆம் தேதி கடகம் சென்றுள்ள சூரியனால் எந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்துக் காண்போம்.

சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். சூரியனின் ராசி மாற்றம் ஒவ்வொரு ராசியிலும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மிதுன ராசியில் பயணித்து வந்த சூரியன் 2022 ஜூலை 16 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்தார். கடக ராசிக்குள் நுழைந்த சூரியனால் 12 ராசிகளிலும் அதன் தாக்கம் இருந்தாலும், அதில் சில ராசிக்காரர்கள் நேர்மறையான பலன்களையும், சிலர் சிக்கலான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இப்போது ஜூலை 16 ஆம் தேதி கடகம் சென்றுள்ள சூரியனால் எந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்துக் காண்போம்.

சிம்மம்
சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் சிம்ம ராசிக்காரர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இக்காலத்தில் நீங்கள் செல்லும் செலவுகளில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. வெளிநாட்டு நிறுவனத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்தக் காலத்தில் பயணம் செய்வார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கவனமாக இருங்கள். பழைய சர்ச்சை மீண்டும் எழுந்து உங்களுக்கு பெரிய தொந்தரவு செய்யலாம்.

தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். என்ன தான் சூரியன் அதிர்ஷ்ட வீட்டிற்கு சென்றாலும், இக்காலத்தில் கொஞ்சம் போராட வேண்டியிருக்கும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பேசும் போது நிதானமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரிடமும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசாதீர்கள்.

மகரம்
மகர ராசியின் 8 ஆம் வீட்டின் அதிபதியான சூரியன் 7 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இக்காலத்தில் பலனின்றி இருப்பார். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் இக்காலத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் வாய்ப்புண்டு. இக்காலத்தில் உங்கள் மாமியார்-மாமனாருடன் தகராறு எதையும் செய்யாதீர்கள்.

கும்பம்
கும்ப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் எதிரிகளால் நிறைய தொந்தரவுகளை சந்திப்பீர்கள். கடன் தொல்லையால் அவதிப்படுவீர்கள். உங்களின் ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும்.

மீனம்
மீன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் நீங்கள் யாரையேனும் நேசித்தால், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். இக்காலத்தில் பங்குச் சந்தை மற்றும் யூக சந்தை ஆகியவற்றில் இருந்து சற்று விலகி இருப்பது நல்லது.



Click it and Unblock the Notifications