Latest Updates
-
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Surya Gochar 2022: மேஷம் செல்லும் சூரியனால் எந்த ராசிக்கெல்லாம் சூப்பரா இருக்கப் போகுது தெரியுமா?
சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி காலை 08.33 மணிக்கு இடம் பெயர்கிறார். இந்நாளில் தான் தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரையும், சுபகிருது வருடமும் பிறக்கிறது.
நவகிரகங்களின் ராஜாவாக புகழப்படுபவர் தான் சூரியன். இத்தகைய சூரியன் ஒருவரது ஆன்மா, தந்தை, ஈகோ, ஆரோக்கியம், உயிர், தலைமை குணங்கள், அதிகாரம் மற்றும் நிர்வாகத்தை பிரதிபலிக்கிறது. சூரியன் ஒருவரது ராசியின் நன்மை பயக்கும் இடத்தில் இருந்தால், நேர்மறையான முடிவுகளைத் தரும். அதுவே தவறான நிலையில் இருந்தால் எதிர்மறையான முடிவுகளைத் தரும்.

இப்படிப்பட்ட சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி காலை 08.33 மணிக்கு இடம் பெயர்கிறார். இந்நாளில் தான் தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரையும், சுபகிருது வருடமும் பிறக்கிறது. மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சூரியன் இடம் பெயர்வதால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என சித்திரை மாத ராசிபலன்களை இப்போது காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் சூரியன் பல ஏற்ற தாழ்வுகளையும் எதிர்பாராத பலன்களையும் தருவார். ராகுவும் முதல் வீட்டில் இருக்கிறார். ஆகவே இக்காலத்தில் உங்கள் பிடிவாதத்தையும் ஆர்வத்தையும் கட்டுப்படுத்துங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வணிகத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். உங்களின் திட்டங்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அலைச்சலையும், விரயத்தையும் சந்திக்க நேரிடும். உறவினர்கள் மூலம் கெட்ட செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் குழப்பம், மன உளைச்சல் போன்றவற்றை சந்திக்க நேரிடும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் அப்பயணத்தால் வரவு குறைவாகவும், செலவு அதிகமாகவும் இருக்கும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்.

மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் நல்ல காலமாக இருக்கும். உங்களின் உத்திகள் பயனுள்ளதாக இருக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களுக்கு முன் கொடுத்த பணமும் திரும்ப கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உடன்பிறப்புகளின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மற்றும் அவர்களுடனான உறவு மோசமடையவிடாதீர்கள். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். நீங்கள் வீடு அல்லது வாகனம் வாங்க விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். காதல் விஷயங்களில் சிறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் கூட உயர் அதிகாரிகளுடன் சச்சரவுகள் அதிகரிக்க அனுமதிக்காதீர்கள். சொத்து சம்பந்தமான விஷயங்கள் தீரும். சமூக அந்தஸ்து உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். நண்பர்களிடமிருந்தும் கெட்ட செய்திகள் வர வாய்ப்புள்ளது. சற்று கவனமாக இருங்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கலவையான முடிவுகளைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிக நன்கொடைகளை செய்வீர்கள். வெளிநாட்டு நிறுவனங்களில் சேவை மற்றும் குடியுரிமைக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். இக்காலத்தில் நீங்கள் ஆற்றலுடனும், தைரியத்துடனும் இருப்பதால், மிகவும் கடினமான சூழ்நிலைகளை கூட எளிதில் வெல்வீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் முடிவுகளும், செயல்களும் பாராட்டைப் பெறும். உங்கள் குழந்தைகள் தொடர்பான கவலைகள் அதிகரிக்கும். இக்காலத்தில் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்காதீர்கள். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதே வேளையில் உங்கள் தந்தை சில உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் நன்றாக இருக்கும் என்று கூற முடியாது. இக்காலத்தில் ஒவ்வொரு முடிவையும் மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். சதிக்கு பலியாகிவிடாதீர்கள். பணியிடத்தில் உங்கள் வேலையை முடித்துவிட்டு நேராக வீட்டிற்கு வாருங்கள். எந்த பிரச்சனையையும் புத்திசாலித்தனமாக தீர்த்து வையுங்கள். பயண செலவுகள் அதிகரிக்கும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். திருமண வாழ்க்கை அவ்வளவு நன்றாக இருக்காது. திருமணமாகாதவர்களுக்கு, திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தையில் தாமதம் ஏற்படும். மாமியார்-மாமனார் உடனான உறவில் கசப்பு ஏற்படலாம். கூட்டு வியாபாரம் செய்வதைத் தவிர்க்கவும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். காதல் தொடர்பான விஷயங்களில் சிறு பிரச்சனைகள் இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பெரிய வெற்றி கிடைக்கும். உங்களின் எதிரிகள் இக்காலத்தில் தோல்வியடைவார்கள். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். எந்த ஒரு அரசு தொடர்பான வேலை அல்லது ஒப்பந்தம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களை அவமானப்படுத்த நினைத்தவர்கள் இக்காலத்தில் உதவ முன்வருவார்கள். அரசு மற்றும் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு இருக்கும். சமூகப் பொறுப்பு அதிகரிக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரரின் வாழ்க்கைத் துணை நல்ல பலனைப் பெறுவார். மாணவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வேலை, வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும், ஆனால் குழந்தைகள் தொடர்பான கவலைகள் உங்களைத் தொந்தரவு செய்யும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. குடும்ப உறுப்பினர்களுடனான உறவை மோசமடையவிடாதீர்கள். உங்களின் திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொண்டால், வெற்றி காண்பீர்கள். காதல் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருக்கலாம்

மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் தொழில் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் இந்த காலகட்டத்தில் உங்கள் தொழில் வாழ்க்கையில் சில சிறந்த செய்திகளைப் பெறப் போகிறீர்கள். நிதி ரீதியாக, உங்கள் வழக்கமான வருமானம் பாதிக்கப்படாது, ஆனால் இந்த காலகட்டத்தில் பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம், ஏனெனில் இது நஷ்டத்தை உண்டாக்கும். இக்காலத்தில் உங்கள் தாயார் சில உடல்நல பிரச்சனைகளை சந்திக்கலாம். குடும்பச் சூழல் சராசரியாக இருக்கக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள். உங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் எல்லா இலக்குகளையும் அடைவீர்கள். தொழில் வாழ்க்கை நன்றாக இருக்கும். நிதி ரீதியாக, நீங்கள் கடந்த காலத்தில் செய்த முதலீடுகளில் இருந்து சில பணத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இக்காலத்தில் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு மகிழ்ச்சி, செல்வம் மற்றும் வலிமையைத் தரும். உடன்பிறந்தவர்களைத் தவிர அனைவருடனும் உங்கள் உறவு சுமுகமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்கலாம். ஆகவே எச்சரிக்கையாக இருங்கள்.

மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் நிதி தொடர்பான விஷயங்களை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். எந்தவொரு நிதி முடிவுகளையும் மிகவும் கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. குடும்ப செலவுகள் அதிகரிக்கும். இக்காலத்தில் உங்கள் பேச்சு சற்று கோபமாகவும், முரட்டுத்தனமாகவும் இருக்கும். இது உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான உறவை பாதிக்கும். எனவே பேசும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கை, சராசரியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பல் அல்லது காது, மூக்கு, தொண்டை பிரச்சனையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன; எனவே எச்சரிக்கையாக இருங்கள்.



Click it and Unblock the Notifications











