Latest Updates
-
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்!
கும்பம் செல்லும் சூரியனால் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது... உங்க ராசி இதுல இருக்கா?
சூரியன் கும்ப ராசிக்கு இடம் மாறினாலும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். ஆனால் அதில் 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டமான பலன்களைப் பெறவுள்ளார்கள்.
நவகிரகங்களின் தலைவராக கருதப்படுபவர் சூரியன். வேத ஜோதிடத்தின் படி, சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுவார். தற்போது சூரியன் மகர ராசியில் சஞ்சரித்துள்ளார். கிரகங்களின் ராசி பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் சுப வீட்டில் இருந்தால், வேலை, கௌரவம், பணம் ஆகியவை கிடைக்கும்.

இத்தகைய சூரியன் பிப்ரவரி 13 ஆம் தேதி மகர ராசியில் இருந்து சனி பகவானின் கும்ப ராசிக்கு செல்வார். சூரியன் கும்ப ராசிக்கு இடம் மாறினாலும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். ஆனால் அதில் 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டமான பலன்களைப் பெறவுள்ளார்கள். அந்த 4 ராசிக்காரர்கள் யார்யார், எந்த மாதிரியான பலன்களைப்பெறப் போகிறார்கள் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்வதால், மேஷ ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கு புதிய வழிகளைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் தங்களின் பணியிடத்தில் அதிக மரியாதையைப் பெறுவார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலம் நல்ல பலன்களைத் தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் பத்தாம் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இந்த பத்தாவது வீடு கர்மா மற்றும் தொழில் வீடு. ஆகவே வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. பணியிடத்தில் ஒரு புதிய பொறுப்பையும் பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நல்ல ஆதரவைப் பெறுவீர்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இந்த வீடு அதிர்ஷ்ட வீடு என்பதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அபரிமிதமாக அதிகரிக்கும். இக்காலத்தில் வேலை தொடர்பாக பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அந்த பயணங்கள் நன்மைகளை அளிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணம் அதிகம் சம்பாதிப்பதற்கான வழிகள் தென்படும். சொத்தில் ஆதாயம் பெறுவீர்கள். மேலும் பெரிய பதவியில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பணியிடத்தில் ஆதாயம் கிடைக்கும். பணம் அதிகம் சம்பாதிப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் உங்கள் திட்டங்கள் வெற்றி பெறும். மேலும் இது உங்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தை அளிக்கும்.



Click it and Unblock the Notifications