Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
விருச்சிகத்தில் உருவாகியுள்ள புதாதித்ய யோகத்தால் அடுத்த 17 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
விருச்சிக ராசியில் சூரியன் மற்றும் புதன் சேர்க்கையால் உருவான புதாதித்ய யோகத்தால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
தற்போது விருச்சிக ராசியில் நவகிரங்களின் தலைவனாக கருதப்படும் சூரியனும், புத்திகாரகனான புதனும் ஒன்றாக பயணித்து வருகிறார்கள். ஜோதிடத்தில் சூரியனும், புதனும் ஒரே ராசியில் பயணிக்கும் போது புதாதித்ய யோகம் உருவாகிறது. ஜோதிடத்தின் படி, "புத" என்ற வார்த்தை புதனையும், "ஆதித்யா" என்ற வார்த்தை சூரியனையும் குறிக்கிறது. இந்த இரண்டு சொற்களும் இணைந்து உருவானது தான் புதாதித்ய யோகம். இந்த யோகம் மிகவும் மங்களகரமான யோகங்களில் ஒன்றாகும். இது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

புதாதித்ய யோகம் ஒருவருக்கு செல்வம், கௌரவம் மற்றும் பெருமையை வழங்குகிறது. இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எவ்வளவு ஏழ்மையில் பிறந்திருந்தாலும், நல்ல பணத்தை சம்பாதிப்பார்கள். இப்போது விருச்சிக ராசியில் சூரியன் மற்றும் புதன் சேர்க்கையால் உருவான புதாதித்ய யோகத்தால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டில் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. எனவே இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். இரண்டாவது வீடு பேச்சாற்றல் மற்றும் செல்வத்தின் வீடு. ஆகவே இந்த ராசிக்காரர்கள் நிறைய செல்வத்தைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். சூரியனின் செல்வாக்கினால் தொழிலில் வெற்றி கிடைத்தாலும், புதனின் செல்வாக்கினால் அதிர்ஷ்டத்தின் ஆதரவாறு நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். ஊடகம் மற்றும் மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.

மகரம்
மகர ராசியின் 11 ஆவது வீட்டில் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. எனவே இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு இக்காலம் நல்ல யோகமான காலமாக இருக்கும்.

மீனம்
மீன ராசியின் 9 ஆவது வீட்டில் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டின் வீடாக கருதப்படுகிறது. எனவே இக்காலத்தில் எந்த விஷயத்தை செய்வதாக இருந்தாலும் அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். வணிகர்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதுவரை சொத்து பிரச்சனையை சந்தித்து வந்தால், அதற்கு இக்காலத்தில் நல்ல தீர்வு கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல பதவி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications