Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சிம்மத்தில் சூரியன், புதன், சுக்கிர சேர்க்கை - இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
ஜோதிடத்தைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் மாதம் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இம்மாதத்தில் சிம்ம ராசியில் சூரியனுடன் இரண்டு கிரகங்கள் சேர்ந்து பயணிக்கின்றன. இதில் ஆகஸ்ட் மாதத்தில் புதன் இரண்டு முறை ராசியை மாற்றுகிறார் மற்றும் சுக்கிரனும் தனது ராசியை மாற்றுகிறார். குறிப்பாக இம்மாதத்தில் ஒரே ராசியில் இரண்டு முறை இரண்டு கிரகங்களின் சேர்க்கை நிகழ்கிறது. அதில் முதலாவதாக சிம்ம ராசியில் சூரியனுடன் புதன் சேர்க்கை நிகழ்கிறது. சில நாட்கள் கழித்து சூரியனுடன் சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது.

பொதுவாக ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்களின் சேர்க்கையால் மக்களின் வாழ்க்கையில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதுவும் சூரியனுடன் புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சேர்ந்து பயணிப்பது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இப்போது சிம்ம ராசியில் இந்த மூன்று கிரகங்களும் எப்போது இணைந்திருக்கும் மற்றும் எந்தெந்த ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

சிம்மத்தில் புதன், சூரியன் சேர்க்கை
ஆகஸ்ட் மாதத்தில் முதன்முதலாக புதன் ஆகஸ்ட் 01 ஆம் தேதி சிம்ம ராசிக்கு சென்றார். ஜோதிடத்தி ல் புதன் பேச்சு, வியாபாரம், பகுத்தறிவு மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுறார். அதன் பின் சூரியன் ஆகஸ்ட் 17 ஆம் தேதி சிம்ம ராசிக்கு சென்றார். சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சூரியன் ஆற்றல், தலைமை மற்றும் ஆன்மாவின் காரணியாக கருதப்படுகிறார். இந்த ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 21 வரை சூரியனும், புதனும் சிம்ம ராசியில் சேர்ந்து பயணிப்பார்கள். ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு பிறகு புதன் கன்னி ராசிக்கு செல்வார்.

சிம்மத்தில் சூரியன் சுக்கிரன் சேர்க்கை
சுகம், அழகு, ஆடம்பரம் ஆகியவற்றின் காரணியாக சுக்கிரன் கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் ஆகஸ்ட் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு செல்கிறார். இதனால் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை சூரியனும், சுக்கிரனும் சிம்ம ராசியில் சேர்ந்து பயணிப்பார்கள்.

புதன்-சூரியன் சேர்க்கையால் உருவாகும் யோகம்
ஜோதிடத்தில் கிரகங்கள் இணையும் போது யோகங்கள் உருவாகும். அந்த வகையில் புதனும், சூரியனும் சிம்ம ராசியில் இணையும் போது புதாதித்ய யோகம் உருவாகிறது. இந்த யோகம் மிகவும் மங்களகரமான யோகமாக கருதப்படுகிறது. இந்த யோகத்தை ராஜயோகம் என்றும் அழைப்பார்கள்.

சூரியன்-சுக்கிரன் சேர்க்கை
சிம்ம ராசியில் உருவாகும் இரண்டாவது சேர்க்கை சூரிய-சுக்கிர சேர்க்கையாகும். சூரியனும், சுக்கிரனும் சுப கிரகங்களாக இருந்தாலும், இவை இரண்டும் எதிரி கிரகங்களாக இருப்பதால், இவற்றின் சேர்க்கை அசுபமாக இருக்கும். சூரிய-சுக்கிர சேர்க்கை காலத்தில் தம்பதிகள் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பார்கள். திருமணம் தாமதமாகும் மற்றும் நோய்கள் அதிகரிக்கும்.

சிம்மத்தில் புதன்-சூரியன் சேர்க்கையால் நற்பலன்களைப் பெறும் ராசிகள்
சிம்ம ராசியில் சூரியனும் புதனும் இணைவதால், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். அதுவும் மேஷம், மிதுனம், கடகம், துலாம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் நல்ல பலனைப் பெறவுள்ளார்கள். இந்த 5 ராசிக்காரர்களும் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். நிதி நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படும். பணம் அதிகம் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். முதலீடுகளுக்கு சாதகமான காலமாக இருக்கும். கௌரவமும், புகழும் உயரும்.

சிம்மத்தில் சூரியன்-சுக்கிரன் சேர்க்கையால் நற்பலன்களைப் பெறும் ராசிகள்
ரிஷபம், மிதுனம், கடகம், கும்பம், தனுசு போன்ற ராசிக்காரர்களுக்கு சூரிய சுக்கிர சேர்க்கையால் நல்ல பலன்கள் கிடைக்கும். வாழ்வில் மரியாதை, ஆடம்பரம், செல்வம் மற்றும் அனைத்து வகையான சுகங்களையும் பெறுவார்கள். பணம் கையில் அதிகம் சேரும். நிதி நிலை வலுவடையும். நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.



Click it and Unblock the Notifications