Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சூரிய-சுக்கிர சேர்க்கையால் செப்டம்பர் 24 முதல் 12 ராசிக்கும் எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
சூரிய சுக்கிர சேர்க்கையால் உருவாகும் யோகம் தான் யுதி யோகம். இப்போது கன்னி ராசியில் சூரிய சுக்கிர சேர்க்கையால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்களைக் காண்போம்.

செப்டம்பர் மாதத்தில் பல கிரகங்களின் இயக்கங்களின் சேர்க்கை நிகழ்கிறது. அதில் இம்மாதத்தின் தொடக்கத்திலேயே சூரியனும், சுக்கிரனும் சிம்ம ராசியில் ஒன்றாக பயணித்தனர். அதன் பின் கன்னி ராசியில் பல கிரகங்களின் சேர்க்கை நிகழ்கிறது. அதில் புதன் கன்னி ராசியில் செப்டம்பர் 10 ஆம் தேதி வக்ரமானார். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 17 ஆம் தேதி சூரியன் கன்னி ராசிக்கு செல்வார். இதனால் கன்னி ராசியில் புதனும், சூரியனும் இணைவதால் புதாதித்ய யோகம் உருவாகும். அதன் பின்பு செப்டம்பர் 24 ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்கு செல்கிறார். இதனால் சூரிய சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. கன்னி ராசியில் சூரியனும் சுக்கிரனும் இணைவதால் சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளும், சில ராசிக்காரர்களுக்கு நஷ்டமும் ஏற்படலாம்.

கன்னியில் சூரிய சுக்கிர சேர்க்கை
ஜோதிடத்தில் சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகிய இரண்டும் சுப கிரகங்களாகும். ஆனால் இந்த இரண்டு கிரகங்களும் ஒரு ராசியில் இணையும் போது, அது அசுப பலன்களைத் தரும். குறிப்பாக திருமண வாழ்க்கை பாதிக்கப்படும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரியனுக்கு அருகில் எந்த கிரகம் வந்தாலும், அந்த கிரகம் பலவீனமடையும். அதனால் சூரியனுடன் சுக்கிரன் இணையும் போது சுக்கிரன் வழங்கும் நற்பலன்களின் அளவு குறையும். சூரிய சுக்கிர சேர்க்கையால் உருவாகும் யோகம் தான் யுதி யோகம். இப்போது கன்னி ராசியில் சூரிய சுக்கிர சேர்க்கையால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்களைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 6 ஆவது வீட்டில் சூரிய சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. எனவே மேஷ ராசிக்காரர்களுக்கு சூரிய சுக்கிர சேர்க்கை காலமானது அற்புதமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரகமாக முடிக்கப்படும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 5 ஆவது வீட்டில் சூரிய சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. ஆகவே ரிஷப ராசிக்காரர்கள் சூரிய சுக்கிர சேர்க்கை காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் உங்கள் வாழ்வில் ஒரு பெரிய சோகச் செய்தியைப் பெற நேரிடும்.

மிதுனம்
மிதுன ராசியின் 4 ஆவது வீட்டில் சூரிய சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. எனவே இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். அதிர்ஷ்டம் இந்த ராசிக்காரர்களுக்கு உடன் இருக்கும். திடீரென்று பண ஆதாயம் கிடைக்கும்.

கடகம்
கடக ராசியின் 3 ஆவது வீட்டில் சூரிய சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் கௌரவம் அதிகரிக்கும். இக்காலத்தில் சமூகத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த நபர்களை சந்திப்பீர்கள். இது எதிர்காலத்தில் உங்களுக்கு நன்மை பயக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டில் சூரிய சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. எனவே சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். நல்ல பண வரவிற்கான வாய்ப்புக்கள் உண்டு. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தத்தைப் பெறலாம்.

கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டில் சூரிய சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் நல்ல லாபகரமான காலமாக இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உண்டு. ஆனால் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

துலாம்
துலாம் ராசியின் 12 ஆவது வீட்டில் சூரிய சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. ஆகவே இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். வேலை செய்பவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும். வியாபாரிகளுக்கு பொன்னான காலமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டில் சூரிய சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலமானது எதிரிகளை வெல்வதற்கு மிகவும் சாதகமாக இருக்கும். உங்களின் காரியங்கள் கெட தொடங்கும். பண இழப்பிற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டில் சூரிய சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. எனவே இக்காலத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நெருக்கடியான காலம் முடிவுக்கு வரும். பணிபுரிபவர்கள் எதிர்பார்த்த பலனைப் பெறுவார்கள். திட்டமிட்ட வேலைகளை சிறப்பாக செய்ய முடியும்.

மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டில் சூரிய சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. எனவே திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும். வாக்குவாதங்கள் ஏற்படலாம். பண இழப்பிற்கான அறிகுறிகள் உள்ளன. எனவே கவனமாக இருங்கள்.

கும்பம்
கும்ப ராசியின் 8 ஆவது வீட்டில் சூரிய சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் பணியில் முன்னேற்றம் ஏற்படும். சட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

மீனம்
மீன ராசியின் 7 ஆவது வீட்டில் சூரிய சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலகட்டத்தில் விரும்பிய முடிவுகள் கிடைக்கும். வணிகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு நல்ல லாபகரமான காலமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications