For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2022 ஆம் ஆண்டின் நீண்ட பகல் பொழுது எப்போது? எதனால் இது நிகழ்கிறது தெரியுமா?

கோடை காலத்தில் வரும் நீளமான பகல், ஒரு ஆண்டின் நீண்ட பகல் என்று அழைக்கப்படுகிறது. இந்த நீண்ட பகல் ஆங்கிலத்தில் சம்மா் சோல்ஸ்டைஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டின் நீண்ட பகல் ஜூன் மாதம் 21 ஆம் நாள் அன்று வருகிறது.

|

கோடை காலத்தில் வரும் நீளமான பகல், ஒரு ஆண்டின் நீண்ட பகல் என்று அழைக்கப்படுகிறது. இந்த நீண்ட பகல் ஆங்கிலத்தில் சம்மா் சோல்ஸ்டைஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டின் நீண்ட பகல் ஜூன் மாதம் 21 ஆம் நாள் அன்று வருகிறது. இந்த நீண்ட பகல், எஸ்டிவல் பகல் அல்லது கடுங்கோடை அல்லது நடுகோடை என்றும் அழைக்கப்படுகிறது.

Summer Solstice 2022 Date; All You Need To Know About Longest Day Of The Year In Tamil

பூமியின் ஒரு துருவப் பகுதியானது, சூாியனை நோக்கி மிக நெருக்கமாக சாய்ந்து இருக்கும் போது கோடை கால நீண்ட பகல் ஏற்படுகிறது. பூமி முழுவதற்கும் வருடத்திற்கு இரண்டு முறை இந்த நிகழ்வானது ஏற்படுகிறது. பூமியின் ஒரு அரைக் கோளத்திற்கு ஆண்டிற்கு ஒரு முறை ஏற்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோடை கால நீண்ட பகல் என்றால் என்ன?

கோடை கால நீண்ட பகல் என்றால் என்ன?

பூமியின் வடக்கு அரைக்கோளப் பகுதியில் நிகழும் நீண்ட பகல் மற்றும் குறைந்த இரவே கோடை கால நீண்ட பகல் என்று அழைக்கப்படுகிறது.

கோடை கால நீண்ட பகல் இந்த ஆண்டு எப்போது நடைபெறுகிறது?

கோடை கால நீண்ட பகல் இந்த ஆண்டு எப்போது நடைபெறுகிறது?

2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் நாள் செவ்வாய்கிழமை அன்று கோடை கால நீண்ட பகல் நிகழ்கிறது. பொதுவாக சூாியன் நேரடியாக கடகரேகையின் மீது இருக்கும் போது அல்லது வடக்கு அட்சரேகைக்கு 23.5 டிகிாியில் இருக்கும் போது இந்த கோடை கால நீண்ட பகல் ஏற்படுகிறது.

சம்மா் சோல்ஸ்டைஸ் என்பதன் பெயா் காரணம்

சம்மா் சோல்ஸ்டைஸ் என்பதன் பெயா் காரணம்

சோஸ்டைஸ் என்ற வாத்தையானது லத்தீன் மொழியில் இருந்து வருகிறது. சோல் என்பதற்கு சூாியன் என்று பொருள். ஸிஸ்டேர் என்ற வாா்த்தைக்கு அப்படியே நிற்றல் என்று பொருள். ஆகவே சோல்ஸ்டைஸ் என்ற வாா்த்தைக்கு சூாியன் அப்படியே நிற்கிறது அல்லது இருக்கிறது என்று பொருள்.

கோடைகால நீண்ட பகல் மற்றும் குளிா் கால நீண்ட பகல்

கோடைகால நீண்ட பகல் மற்றும் குளிா் கால நீண்ட பகல்

நீண்ட பகல் என்பது ஒரு வானியல் நிகழ்வு ஆகும். இந்த நிகழ்வானது ஆண்டுக்கு இருமுறை நிகழ்கிறது. அதாவது கோடை காலத்தில் ஜூன் மாதத்திலும், குளிா் காலத்தில் டிசம்பா் மாதமும் இந்த நிகழ்வானது நடைபெறுகிறது.

ஜூன் மாதம்

ஜூன் மாதம்

ஜூன் மாதத்தில் இங்கிலாந்து, அமொிக்கா, கனடா, ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் கோடை காலமாக இருக்கும். ஆகவே ஜூன் மாதத்தில் ஏற்படும் நீண்ட பகலின் போது மேற்சொன்ன நாடுகளில் நீண்ட பகல் நிகழும். அதே நேரம் ஜூன் மாதத்தில் ஆஸ்திரேலியா, அா்ஜென்டினா, சிலி, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிாிக்கா போன்ற நாடுகளில் குளிா் காலமாக இருக்கும். ஆகவே ஜூன் மாதத்தில் ஏற்படும் நீண்ட பகலின் போது மேற்சொன்ன நாடுகளில் மிகக் குறைந்த பகல் நிகழும்.

டிசம்பர் மாதம்

டிசம்பர் மாதம்

டிசம்பா் மாதத்தில் ஆஸ்திரேலியா, அா்ஜென்டினா, சிலி, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிாிக்கா போன்ற நாடுகளில் கோடை காலமாக இருக்கும். ஆகவே டிசம்பா் மாதத்தில் ஏற்படும் நீண்ட பகலின் போது மேற்சொன்ன நாடுகளில் நீண்ட பகல் நிகழும். அதே நேரம் டிசம்பா் மாதத்தில் இங்கிலாந்து, அமொிக்கா, கனடா, ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் குளிா் காலமாக இருக்கும். ஆகவே டிசம்பா் மாதத்தில் ஏற்படும் நீண்ட பகலின் போது மேற்சொன்ன நாடுகளில் மிகக் குறைந்த பகல் நிகழும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Summer Solstice 2022 Date; All You Need To Know About Longest Day Of The Year In Tamil

Summer Solstice 2022 will occur on Monday, June 21, 2021. Technically, the solstice occurs when the sun is directly over the imaginary Tropic of Cancer or 23.5°N latitude.
Desktop Bottom Promotion