7000 கார்கள் முதல் தனி தங்க விமானம் வரை தலைசுற்ற வைக்கும் ஆடம்பர வாழ்க்கை வாழும் இவர் யார் தெரியுமா?

உலகின் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வது யாரென்று கேட்டால் அனைவரும் பில் கேட்ஸ், எலான் மஸ்க் போன்று பிரபலமான உலக பணக்காரர்களின் பெயரைத்தான் கூறுவார்கள்.

உலகின் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வது யாரென்று கேட்டால் அனைவரும் பில் கேட்ஸ், எலான் மஸ்க் போன்று பிரபலமான உலக பணக்காரர்களின் பெயரைத்தான் கூறுவார்கள். ஆனால் வரலாற்றில் யாருமே கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவிற்கு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர் நம் அனைத்து யூகங்களுக்கும் அப்பாற்பட்டவர், அவர்தான் புருனே சுல்தான்.

Sultan of Brunei: Things to Know About His Lavish Life in Tamil

ஹசனல் போல்கியா இப்னி உமர் அலி சைஃபுடியன் III அல்லது புருனேயின் சுல்தான் கிட்டதட்ட 40பில்லியன் சொத்து மதிப்புடன் உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் ஆடம்பரமான மனிதராக விளங்கினார். சுல்தான் அக்டோபர் 5, 1967 இல் ஆட்சிக்கு வந்தார், நாட்டின் 29 வது ஆட்சியாளராக அவரது தந்தை உமர் அலி சைபுதீனிடம் இருந்து பொறுப்பேற்றார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யார் இந்த புருனே சுல்தான்?

யார் இந்த புருனே சுல்தான்?

ஹசனல் போல்கியா 1946 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி சுல்தான் உமர் அலி சைபுதியன் III இன் மகனாகப் பிறந்தார். சுல்தான் உமர் அலி சைபுதீனுக்கு ஆறு மகள்கள் மற்றும் நான்கு மகன்கள் என மொத்தம் 10 குழந்தைகளும், பல மனைவிகளும் இருந்தனர், ஆனால் சிறு வயதிலேயே அவருக்கு அடுத்த ஆட்சியாளராக அவர் போல்கியாவைத் தேர்ந்தெடுத்தார். அவர்தான் புருனேயின் பிரதமராகவும் இருக்கிறார்.

எங்கு படித்தார்?

எங்கு படித்தார்?

சுல்தான் சாண்ட்ஹர்ஸ்டில் உள்ள இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோர் படித்த ராயல் மிலிட்டரி அகாடமியில் பட்டம் பெற்றார். தங்கத்தின் மீதான அளவற்ற காதலில் இருந்து இருந்து, தனக்கு முடிதிருந்த இங்கிலாந்தில் இருந்து தனது முடிதிருத்தும் நபரை புருனேக்கு விமானத்தில் அழைத்து வருவது வரை, அடிப்படைத் தேவைகளுக்குக் கூட மிகப்பெரிய அளவிலான பணத்தை செலவிட்டு ஆடம்பரத்தின் உச்சத்தைத் தொட்டார். அவரின் வியக்க வைக்கும் ஆடம்பர வாழ்க்கை பற்றி விரிவாக மேற்கொண்டு பார்க்கலாம்.

தங்க ரோல்ஸ் ராய்ஸ் கார்

தங்க ரோல்ஸ் ராய்ஸ் கார்

உலகின் மிகவும் தனித்துவமான மற்றும் விலையுயர்ந்த கார் கலெக்ஷன் இவரிடம்தான் உள்ளது. இந்த கலெக்ஷனில் தங்கம் பூசப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்ளது, அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்த தனித்துவமான சொகுசு காரில் திறந்த மேற்புறம் மற்றும் குடைக்கான தளம் உள்ளது. இந்த கார் கிரில்ஸ் முதல் டயர்கள் வரை தங்கத்தால் பூசப்பட்டுள்ளது. அவரிடம் மொத்தம் 500-க்கும் மேற்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உள்ளது.

கார் கலெக்ஷன்

கார் கலெக்ஷன்

சுல்தானுக்கு 600 ரோல்ஸ் ராய்ஸ், 450 ஃபெராரி மற்றும் 380 பென்ட்லிகள் இருப்பதாக கூறப்படுகிறத. அவரது மொத்த கார் கலெக்ஷனின் மதிப்பு US$5 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது, மேலும் மொத்தம் 7,000க்கும் அதிகமான வாகனங்கள் உள்ளன. மேலே குறிப்பிடப்பட்ட ரோல்ஸ் ராய்ஸைத் தவிர, பல அரிய கண்டுபிடிப்புகளும் இதில் அடங்கும். சாம்பல் நிற லம்போர்கினி உர்ராகோ, ஃபெராரி 456 ஜிடி வெனிஸ் (உலகின் ஏழு கார்களில் ஒன்று) மற்றும் போர்ஷே 959 ஆகியவை அடங்கும். உண்மையில், அவரது கார் கலெக்ஷன் அனைவரையும் பொறாமைப்பட வைக்கக்கூடியது.

பிரைவேட் ஜெட்

பிரைவேட் ஜெட்

உலகின் விலையுயர்ந்த காரை தங்கத்தில் வைத்திருக்கும் சுல்தான் தனிவிமானம் வைத்திருக்க மாட்டாரா? பிரபல ஆய்வு நிறுவனம் அவரிடம் சொந்தமாக போயிங் 747-400, போயிங் 767-200 மற்றும் ஏர்பஸ் ஏ340-200 ஜெட் விமானங்கள் இருப்பதாகக் கூறியது. அதில் போயிங் 747-400 தங்க முலாம் பூசப்பட்டது மற்றும் மிகவும் ஆடம்பரமானது, அது "பறக்கும் அரண்மனை" என்று செல்லப்பெயர் பெற்றது. பிரிட்டிஷ் ஊடகங்களின்படி, விமானத்தின் விலை 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அவர் தனது மகளின் பிறந்தநாளுக்கு ஏர்பஸ் ஏ340 விமானத்தையும் பரிசாக அளித்துள்ளார்.

1700 அறைகள் கொண்ட அரண்மனை

1700 அறைகள் கொண்ட அரண்மனை

இஸ்தானா நூருல் இமான் அரண்மனை, 1,700க்கும் மேற்பட்ட அறைகள், 257 குளியலறைகள் மற்றும் ஐந்து நீச்சல் குளங்களுடன் பூலோக சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. அவரது கார் கலெக்ஷனை வைக்க சுல்தானுக்கு 110 கேரேஜ்கள் இருப்பதாக கூறப்படுகிறது, மேலும் அவர் குதிரைகளையும் நேசிக்கிறார். அவரது குதிரைகள் நன்கு பராமரிக்கப்படுவதையும் சிறந்த நிலையில் இருப்பதையும் உறுதிசெய்ய அவர் சிறப்பு குளிரூட்டப்பட்ட தொழுவங்களை உருவாக்கியுள்ளார். இஸ்தானா நூருல் இமான் அரண்மனை தற்போது கின்னஸ் புத்தகத்தில் உலகின் மிகப்பெரிய குடியிருப்பு அரண்மனை என்ற பட்டத்தை பெற்றுள்ளது, இது 200,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனை 1984 இல் கட்டி முடிக்கப்பட்டது, அந்த நேரத்தில், மொத்தமாக 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கட்ட செலவானது.

விலையுயர்ந்த ஹேர்கட்

விலையுயர்ந்த ஹேர்கட்

சுல்தான் ஒவ்வொரு முறை முடிவெட்டுவதற்கும் 20,000 டாலர்கள் செலவு செய்தார். லண்டனின் மேஃபேரில் உள்ள டார்செஸ்டர் ஹோட்டலில் இருந்து புருனேக்கு தனக்கு முடிதிருந்த, அவருக்குப் பிடித்த முடிதிருத்தும் நபரை அவர் விமானத்தில் வரவைத்தார்.

விலையுயர்ந்த ஓவியம்

விலையுயர்ந்த ஓவியம்

சுல்தானுக்கு கலையின் மீது அதிக ஆர்வம் இருந்தது. பிரெஞ்சு இம்ப்ரெஷனிஸ்ட் பியர்-அகஸ்டே ரெனோயர் வரைந்த, இரண்டு இளம் பெண்கள் பியானோ வாசிக்கும் ஒரு ஆயில் பெயிண்டிங்கை US$70 மில்லியன் கொடுத்து வாங்கினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, February 16, 2023, 12:53 [IST]
Desktop Bottom Promotion