For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு கேக் ரொம்ப பிடிக்குமா? அப்போ இத பார்த்து என்ஜாய் பண்ணுங்க...

ஃபேஷன் பிரியர்களே, நிச்சயமாக நீங்கள் இந்த வாய் பிளக்க வைக்கும் கேக்குகளைப் பார்த்து திகைத்துப் போவீர்கள். நீங்களே பார்த்து என்ஜாய் செய்யுங்கள்.

|

ஃபேஷன் என்பது, பார்த்தல், கேட்பதைவிட முழுதுமாக நமக்குக் கிடைத்தவுடன் மேலும் சுவையானதாக இருக்கும். சரி, இந்த நொண்டி வரிக்கு மன்னிக்கவும், ஆனால் இந்த கேக்குகளைப் பார்த்த பிறகு, மேற்கூறிய வரி நிறைய அர்த்தத்தைத் தரும். ஃபேஷன் மற்றும் கேக்குகள் தோழமையின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள், இந்த சமீபத்திய couture (உடை வடிவமைத்தல்) கேக்குகள் அதை நமக்கு நன்கு உணர்த்துகிறது.

Fashion Designers

இந்த இணக்கமான தோழமை கிரீமி, பஞ்சுபோன்ற, வீங்கிய, சாக்லேட்டி, சிவப்பு வெல்வெட்டி மற்றும் இன்னும் பலவித மகிழ்ச்சியையும் வழங்கியுள்ளது. எனவே, உலகெங்கிலும் ரொட்டி விற்பவர்கள் வடிவமைத்த பிரமிக்க வைக்கும் couture கேக்குகளைப் பற்றி பேசலாம் இங்கே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சபியாசாச்சி கேக்

ஆமாம், ஆமாம், நம்மில் பெரும்பாலோரால் ஒரு சபியாசாச்சி என்செம்பலைக்கூட வாங்க முடியாது என்பதை எல்லோரும் அறிவோம், ஆனால் அவருடைய வடிவமைப்பை உயிருடன் கொண்டுவரும் ஒரு மிகவும் சுவையான கேக்கை நாம்மால் எப்போதும் வாங்க முடியும் (மிகவும் எளிமையாக). பெங்களூரைச் சேர்ந்த கேக் வடிவமைப்பாளரான ஜூனி டானின் மாணவி செஃப் ராதிகா ஓபராய், இந்த முற்றிலும் அழகான கேக்கை உருவாக்கி சபியாசாச்சி படைப்பை தத்ரூபமாகக் கொண்டு வந்துள்ளார். அவர் அடித்தளத்துடன் கூடிய நான்கடுக்கு கேக்கை செய்துள்ளார்.

அடித்தளம் நீல நிறத்தில் அமைந்தது மற்றும் கீழ்-அடுக்கு அசல் கண்ணாடி வேலையைப் பிரதிபலித்தது. ஆஹா! இரண்டாவது கடைசி அடுக்கு நீல மற்றும் பச்சை மலர் அச்சிட்டுகளால் அலங்கரிக்கப்பட்டது. இரண்டாவது அடுக்கு இருட்டாகவும், ரவிக்கை போலவும் இருந்தது, இறுதியாக மேல் அடுக்கு மிகச்சிறந்த தங்க நெக்லஸைக் கொண்டிருந்தது. அது தவிர, இரண்டு அடுக்குகளுக்கும் நேர்த்தியான தங்க எல்லையும், நீல மற்றும் வெள்ளை பூக்களும் கேக்கின் ஒரு பகுதியாக இருந்தன. போட்டோவைப் பார்த்தவுடன் இப்போதே சாப்பிடச் செல்லலாம் எனத் தோன்றுமே !!!.

MOST READ: கஷ்டம் மட்டும்தான் வருதா? உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுகு தெரியுமா?

தருண் தஹிலியானி கேக்:

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சமையல்காரர் அனுபம் அகர்வால், தருண் தஹிலியானியால் கவரப்பட்டு அதை கேக் வடிவில் கொண்டு வந்தார் . அவரது கேக் முறையான , நாகரீகமான இரவு உணவிற்கு மிகச் சரியானதாகப் பொருந்தியது. அவர் உருவாக்கிய இந்த கருப்பு-ஹூட் கேக் , தருண் தஹிலியானியின் படைப்பை முற்றிலும் ஒத்திருந்தது. கேக் இளஞ்சிவப்பு ரோஜாக்கள் மற்றும் பச்சை இலைகளால் அலங்கரிக்கப்பட்டது. இது தங்க சிக்கலான பர்டரால் மேம்படுத்தப்பட்டது. மலர் அலங்காரம் மட்டுமல்ல, கேக் வடிவமைப்பாளர் நகை வடிவமைப்புகளை எவ்வளவு தெளிவாக இணைத்துள்ளார் என்பதையும் பார்த்து நாங்கள் அசந்தோம். நுணுக்கமாக இழைக்கப்பட்ட நெக்லஸ், சோக்கர் மற்றும் மாங்-டிக்கா ஆகியவை கேக்கை முற்றிலும் உயர்த்தின. மொத்தத்தில் ,கேக் நம் கண்ணை விட்ட அகல மறுக்கும் படி அமைக்கப்பட்டிருந்தது.

அலெக்சாண்டர் மெக்-க்வீன் கேக்:

இந்த கேக்கைப் பார்த்தவுடன் எங்கள் கண்கள் விரிந்து வெளிவந்தன. தி புரோ- ஃப்ரோஸ்டர் எனப்படும் கேக் டிசைனிங் பிராண்ட் இந்த கேக்கை வடிவமைத்தது, இது அலெக்சாண்டர் மெக்வீனின் வடிவமைப்பை உள்ளடக்கியது. இது ஒரு வியத்தகு கருப்பு கேக் மற்றும் அந்த வியப்பை நம் கண்களில் கொண்டுவர அதன் பின்னால் செய்யப்பட்டிருக்க வேண்டிய சிக்கலான வேலைப்பாட்டைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்பட்டோம். ஆடையில் இருந்த பறவை இறகால் -ஈர்க்கப்பட்ட கண்கவர் (மெக்வீன் பறவைகளை மிகவும் நேசித்தார் மற்றும் அவற்றை தன் ஆடைகளில் தத்ரூபமாகக் கொண்டுவந்தார்) வடிவமைப்பு கேக் மீது சுவாரஸ்யமாக பொறிக்கப்பட்டிருந்தது. இது ஒரு அப்ஸ்ட்ராக்ட் பீஸ் மற்றும் முற்றிலும் சமச்சீரற்றதாக இருந்தது. நிறைந்த மகிழ்ச்சி! நிறைந்த மகிழ்ச்சி!

MOST READ: அடிக்கடி கால் வீங்கி சிவந்திருக்கிறதா? சிவப்பு வரிகள் தெரிகிறதா? அது சாதாரண விஷயமில்லங்க...

யெமி ஒசுங்கோயா கேக்:

சொகுசு திருமண கேக் பிராண்டான எலிசபெத்ஸ் கேக் எம்போரியம் இந்த சுவாரஸ்யமான மற்றும் விரிவான திருமண ஆடையால் -ஈர்க்கப்பட்ட கேக்கை வடிவமைத்துள்ளது. இது ஒரு மூன்று அடுக்கு கேக் போல் தோன்றியது.கேக்கின் மேற்புறத்தில் அமைக்கப்பட்ட நுண்ணிய விவரங்களால் (இது ஆடையின் வடிவத்தால் ஈர்க்கப்பட்டது) நாங்கள் முற்றிலும் கவரப்பட்டோம். கேக் மீது மெட்டாலிக் சிஞ்ச் இடுப்பு பெல்ட் மிகவும் சரியாக இணைக்கப்பட்டிருந்தது. இந்த கேக் முற்றிலும் மனதைக் கவரும் வடிவில் அமைக்கப்பட்டிருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Stunning Jaw-Dropping Couture Cakes inspired by Fashion Designers

This harmonious companionship has resulted in creamy, fluffy, puffy, chocolaty, red velvety, and more delights. So, let's talk about the stunning couture cakes designed by bakers across the globe.
Desktop Bottom Promotion