For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹிட்லரை பழிவாங்க 60 லட்சம் ஜெர்மனியர்களை கொல்ல முயன்ற அவெஞ்சர் குழு...வரலாற்றின் சுவாரஸ்ய நிகழ்வுகள்...!

நமது வரலாறு விசித்திரமான கட்டுக்கதைகள், கதைகள் மற்றும் சம்வங்களால் நிறைந்துள்ளது. நாம் படிக்கும் வரலாறு என்பது வேறு உண்மையில் நடந்த வரலாறு என்பது வேறு.

|

நமது வரலாறு விசித்திரமான கட்டுக்கதைகள், கதைகள் மற்றும் சம்வங்களால் நிறைந்துள்ளது. நாம் படிக்கும் வரலாறு என்பது வேறு உண்மையில் நடந்த வரலாறு என்பது வேறு. நமது வரலாறு நாம் நினைத்துக் கூட பார்க்க இயலாத பல சுவாரஸ்ய சம்பவங்கள் நிறைந்தது. இந்த சம்பவங்கள் சிலசமயம் ஆபத்தானதாகவும், சிலசமயம் வேடிக்கையானதாகவும் இருக்கும்.

Strange Historical Events in Tamil

வரலாற்றில் பலரும் அறியாத அல்லது கவனம் செலுத்தாத சில சுவாரஸ்ய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த சம்பவங்கள் நிச்சயம் நமக்கு புதிதாக இருக்கும். ஆனால் அவை ஆபத்தானதா அல்லது வேடிக்கையானதா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அப்படிப்பட்ட சில சம்பவங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹோலோகாஸ்ட் அவென்ஜர்ஸ் - நகாம்

ஹோலோகாஸ்ட் அவென்ஜர்ஸ் - நகாம்

இரண்டாம் உலகப்போரின் 1941 முதல் 1945 வரலாற்றின் மிகவும் மோசமான காலமாகும். இது ஹோலோகாஸ்ட் காலம் என்று அழைக்கப்படுகிறது. ஐரோப்பிய யூதர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், ரோமானியர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட மில்லியன் கணக்கான மக்களைக் கொலை செய்ததற்கு நாஜி தலைவர் அடோல்ஃப் ஹிட்லர் பொறுப்பேற்றார்."நகாம்" அல்லது அவென்ஜர்ஸ் என்பது 1946 ஆம் ஆண்டில் தப்பிப்பிழைத்த சில யூதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு குழுவாகும். குறைந்தது ஆறு மில்லியன் ஜெர்மனியர்களைக் கொல்ல வேண்டும் என்ற நம்பிக்கையில் அவர்கள் ஒரு திட்டத்தை உருவாக்கினர். அவர்கள் நாட்டிற்கு வழங்கப்பட்ட தண்ணீர் மற்றும் நாஜிகளின் முக்கிய பிரிவான SS யூனிட் அதிகாரிகளின் உணவிலும் விஷம் கலக்க முடிவெடுத்தனர்.

திட்டத்தின் தோல்வி

திட்டத்தின் தோல்வி

இந்த அவெஞ்சர்ஸ் குழு தங்கள் திட்டத்தை செயல்படுத்தத் தவறிவிட்டனர், அது இறுதியில் தோல்வியடைந்தது. இந்த குழுவின் உறுப்பினர்கள் ஒருபோதும் திட்டத்தை வகுத்ததற்கு வருத்தப்படவில்லை, மேலும் அவர்களின் திட்டம் செயல்பட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். ஏனென்றால் பழிவாங்குவது மட்டுமே தங்களுக்கு அமைதியைத் தரும் என்று அவர்கள் நம்பினார்கள்.

தக்காளி சோதனை

தக்காளி சோதனை

நியூ ஜெர்சியில் 1800 களின் முற்பகுதியில் தக்காளி விஷம் என்று மக்கள் நம்பியதால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து மக்கள் தக்காளியை மிகவும் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். பாலியல் ஆசையை அதிகரிக்கும் பழமாக இருப்பதால் தக்காளியை பாவப்பொருள் என்று மக்கள் நினைத்தார்கள். 1820 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இருக்கும் சேலத்தில் ஒரு நபர் பழம் விஷம் என்று நம்ப மறுத்தபோது விசாரணை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

MOST READ: உடலுறவின் போது பெண்களை இந்த இடங்களில் தெரியாமக்கூட தொட்றாதீங்க... இல்லனா வம்பாகிரும்...!

கர்னலின் சோதனை

கர்னலின் சோதனை

விவசாயியும் வரலாற்றாசிரியருமான கர்னல் ராபர்ட் கிப்பன் ஜான்சன் தக்காளி வளரும் போட்டிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் குடியிருப்பாளர்களை பழத்தைப் பற்றி பயப்படாமல் இருக்க வைக்க முயன்றார். பழத்தில் தவறில்லை என்று நிரூபிக்க முயன்ற அவர் வழக்கமாக பழத்தை சாப்பிட்டார், ஆனால் அவர் பைத்தியம் என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால் கர்னல் விடவில்லை. அவர் தனது நம்பிக்கையை நிரூபிக்க விரும்பினார். அவர் ஒரு கூடை தக்காளியை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று தக்காளியை ஒவ்வொன்றாக சாப்பிட ஆரம்பித்தார். ஒரு பெரிய கூட்டம் கூடி, கர்னல் பழம் சாப்பிடுவதைக் கண்டார்கள். அப்போதுதான் பழத்தை உட்கொள்வது சரிதான் என்று மக்கள் நம்ப ஆரம்பித்தார்கள். வழக்கு திரும்பப் பெறப்பட்டது. மக்கள் தங்கள் தோட்டங்களில் இதை வளர்க்கத் தொடங்கினர்.

தி பீஜி மெர்மெய்ட்

தி பீஜி மெர்மெய்ட்

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பலர் தங்கள் கண்காட்சிகளை அமைத்து கடல்கன்னி உட்பட பல்வேறு உயிரினங்களை காட்சிக்கு வைத்திருந்தனர். கடல்கன்னிகள் உண்மையானவை என்று மக்கள் உண்மையில் நம்பிய காலம் அது. அமெரிக்க ஷோமேன், பி.டி. பர்னூம் ஒரு கண்காட்சியை உருவாக்கினார். அவரது கண்காட்சியில் ஒரு பீஜி கடல்கன்னி இருந்தது, அவர் தனது நண்பர் மோசஸ் கிம்பாலிடமிருந்து அதனை வாடகைக்கு எடுத்தார்.

எப்படி செய்யப்பட்டது?

எப்படி செய்யப்பட்டது?

ஒரு குரங்கின் உடலின் மேல் பாதியில் இருந்து தேவதை தயாரிக்கப்பட்டது, பின்னர் அது ஒரு மீனின் வாலுடன் சேர்த்து தைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இது உண்மையில் ஒரு சால்மன் மற்றும் ஒராங்குட்டான் என்று சிலர் நம்புகிறார்கள். ப்ரூமன் ஒரு சுயசரிதை எழுதினார், மேலும் அந்த உயிரினம் காய்ந்து அசிங்கமாக இருப்பதாக அவர் எழுதினார். அவர் அதை பயமுறுத்தும்படி வடிவமைத்து இருந்தார். அந்த உயிரினத்தின் வாய் திறந்த நிலையில் அலறும்படி உறைந்தும் அதன் கைகள் காற்றில் பறந்து கொண்டிருந்தன. இருப்பினும் இது அவரது கண்காட்சியை மிகவும் பிரபலமாக்கியது மற்றும் பர்னத்தை மிகப்பெரிய பணக்காரராக்கியது. மக்களுக்கு கடல்கன்னியை பார்க்க ஆசை இருந்தது, அது ஒரு உண்மையான உயிரினம் என்று அவர்கள் உண்மையில் நினைத்தார்கள். 1859 ஆம் ஆண்டில் காணாமல் போவதற்கு முன்னர் இது உலகம் முழுவதும் பயணித்தது. இது திருடப்பட்டு பின்னர் கறுப்பு சந்தையில் விற்கப்பட்டது என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர்.

MOST READ: நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த கால கொடூரமான மரண தண்டனைகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...!

நீலநிறத்தில் மாறிய கண்கள்

நீலநிறத்தில் மாறிய கண்கள்

ஏப்ரல் 26, 1986 அன்று, செர்னோபில் அணு உலை பேரழிவு ஏற்பட்டது. இது இன்றுவரை வரலாற்றில் மிக மோசமான அணுசக்தி பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அனுபவமற்ற ஊழியர்களால் இயக்கப்பட்ட இந்த குறைபாடுள்ள உலை காரணமாக ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. இந்த பேரழிவில் 31 பேர் உயிரிழந்தனர் மற்றும் கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் வெளியேற்றப்பட்டனர். 2005 ஆம் ஆண்டளவில் கதிர்வீச்சு 4000 பேரைக் கொல்லக்கூடும் என்று ஒரு அறிக்கை வெளிவந்தது. வெடித்த இடத்தில் நடந்த சம்பவங்கள் மேலும் திகிலூட்டுவதாக இருந்தது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் கதிரியக்கச் சிதைவுக்குள் சென்றன. அடுத்த சில வாரங்களில் தீயை அணைக்க முயன்ற 28 தீயணைப்பு வீரர்கள் உயிர் இழந்தனர். அணு கதிர்வீச்சின் வெளிப்பாடு அவர்களை மிகவும் பாதித்தது. அவர்களின் தோல் உரியத் தொடங்கியது. அவர்களின் கண்கள் பிரகாசமான நீல நிறமாக மாறத் தொடங்கின. அது கொடுமையாக இருந்தது. தீயணைப்பு வீரர்களில் ஒருவரான வோலோடிமிர் பாவ்லோவிச் பிராவிக் வெடிப்புக்கு 15 நாட்களுக்குப் பிறகு இறந்தார். அவரது அடர் பழுப்பு நிற கண்கள் பிரகாசமான நீல நிறமாக மாறியது, அவர் துத்தநாகத்தால் மூடப்பட்டிருந்த ஒரு சவப்பெட்டியில் புதைக்கப்பட்டார்.

ஹூபர்ட்டா தி ஹிப்போ

ஹூபர்ட்டா தி ஹிப்போ

தென்னாப்பிரிக்காவின் மிகவும் பிரபலமான நீர்யானையான ஹூபர்ட்டா தி ஹிப்போ, கிங் வில்லியம் டவுனில் உள்ள அமத்தோல் அருங்காட்சியகத்தில் இருந்தது. ஹூபர்ட்டா தி ஹிப்போ 1928 ஆம் ஆண்டில் செயின்ட் லூசியா தோட்டத்திலுள்ள தனது வீட்டிலிருந்து கிழக்கு லண்டனுக்கு தெற்கு நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது. ஏறக்குறைய 1600 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றது. பத்திரிகைகள் அதன் முழு பயணத்தையும் கண்காணித்தன, இதனால் அந்த பெண் நீர்யானை மிகவும் பிரபலமானது. அவள் சென்ற இடமெல்லாம் பெரிய கூட்டத்தை ஈர்த்தாள். இது பெரும் மனச்சோர்வு நிறைந்த காலமாக இருந்தது, ஆனால் ஹூபர்ட்டா ஹிப்போ அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவளது பயணத்தில் மக்கள் அவளுக்கு பழத்தையும் கரும்புகளையும் உணவளித்தனர்.

MOST READ: டீ குடிப்பதில் இவ்வளவு ரூல்ஸ் இருக்கா? டீயை இப்படி குடிக்கறதுதான் நல்லது... இல்லனா ஆபத்துதான்...!

ஹூபர்ட்டாவின் மரணம்

ஹூபர்ட்டாவின் மரணம்

ஹூபர்ட்டாவைக் பிடிப்பதற்கான முயற்சி தோல்வியுற்றப் பிறகு, அது அதிகாரப்பூர்வமாக "அரச விளையாட்டு" என்று அறிவிக்கப்பட்டது. யாரும் அவளுக்குத் தீங்கு ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவே இது செய்யப்பட்டது. இருப்பினும் கிழக்கு லண்டனுக்கு வந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, ஹிப்போ ஒரு சில விவசாயிகளால் சுடப்பட்டது. இதனால் பொதுமக்கள் கோபமடைந்து, ஹூபர்ட்டாவை சுட்டுக் கொன்ற விவசாயிகளை கைது செய்யக் கோரினர். விவசாயிகள் கைது செய்யப்பட்டு £ 25 அபராதம் விதிக்கப்பட்டனர். ஹிப்போவின் உடல் லண்டன் டாக்ஸிடெர்மிஸ்டுக்கு அனுப்பப்பட்டது. 1932 ஆம் ஆண்டில், உடல் தென்னாப்பிரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதன் உடலை வாங்கிக்கொள்ள ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Strange Historical Events in Tamil

Check out the weird historical events that sound too strange to be true.
Story first published: Wednesday, June 23, 2021, 18:19 [IST]
Desktop Bottom Promotion