For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தால் கட்டுக்கடங்காத கோபமும் கட்டுப்படும் - காரணம் தெரியுமா?

ஒவ்வொரு ஏகாதசி விரதமும் தவறான செயல்பாடுகளால் ஏற்பட்ட இன்னல்களை போக்குவதாக ஐதீகம். ஏகாதசி விரதம் இருந்தால், நம்முடைய கோபம் கட்டுக்குள் வரும்.

|

Vaikunta Ekadasi 2023: விரதம் இருப்பது என்பது நம் மனதையும் உடலையும் ஒரு நிலைப்படுத்தி கட்டுப்படுத்துவதற்காகவும், எந்திரமாகிய உடம்பை சுத்தப்படுத்துவதற்காகவும் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட ஆன்மீகத்தோடு கூடிய அறிவியல் விதிமுறையாகும். ஏகாதசி விரதம் இருந்தால், நம்முடைய கோபம் கட்டுக்குள் வரும். அதோடு மற்றவர்களின் கோபத்திலிருந்தும் நம்மை காப்பாற்றும். ஏகாதசி விரதம் இருந்த அம்பரீச சக்ரவர்த்தி துர்வாச மகரிஷியின் கடும் கோபத்தில் இருந்து மஹாவிஷ்ணுவால் காப்பாற்றப்பட்டார் என புராணங்கள் சொல்கின்றன.

Spiritual Significance In The Vaikunta Ekadashi

ஒவ்வொரு ஏகாதசி விரதமும் ஒவ்வொரு விதமான பலனைக் கொடுக்கக் கூடியாதாகும். ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசியானது அந்த மாதத்திற்கான பொதுவான பலனைக் கொடுக்கும் என்பதோடு தனிப்பட்ட பயனையும் அளிக்கும் என்பதை விரதம் இருப்பவர்கள் உணரவேண்டும். மேலும் ஒவ்வொரு ஏகாதசி விரதமும் தவறான செயல்பாடுகளால் ஏற்பட்ட இன்னல்களை போக்குவதாக ஐதீகம்.

மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு
உணவை விடுத்தேனுஞ் சுருக்கியேனும்
மனம் வாக்கு காயம் என்னும் மூன்றினாலும்
கடவுளை மெய்யன்போடு விதிப்படி வழிபடுதல்

MOST READ: வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறக்கப்படுவது ஏன் தெரியுமா?

என்பதே விரதம் இருப்பதன் அர்த்தமாகும். அதனால் தான் குறைந்த பட்சம் வாரத்திற்கு ஒரு முறையாவது ஒருவேளை மட்டும் உணவருந்தி விரதமிருக்க வேண்டும் என்று பெரியோர்கள் வழிமுறைகளை சொல்லியிருக்கிறார்கள். இதையே அறிவியல் விஞ்ஞானிகளும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் விரதமிருந்தால் உடம்பில் உள்ள பழைய செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாவதோடு, புற்று நோய் வராமலும் தடுக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால் தான் பெரியோர்கள் குறைந்தது மாதத்திற்கு ஒரு நாளாவது விரதம் இருக்கவேண்டும் என்பதை சொல்லியிருக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏகாதசி விரதம்

ஏகாதசி விரதம்

விரதத்திலேயே மிகச்சிறந்த விரதமாக ஏகாதசி விரதத்தை குறிப்பிட்டு சொல்லியிருக்கின்றனர். ஏகாதசி விரதம் இருப்பதற்கு வயது வித்தியாசம் கிடையாது. நம்முடைய வாழ்க்கையானது நான்கு நிலைகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என நான்கு நிலைகளில் இருப்பவர்களும் ஏகாதசி விரதம் மேற்கொள்ளலாம். ஜாதி வித்தியாசம் பார்க்காமல், அனைத்து பிரிவினிரும் ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளலாம்.

பலன் தரும் விரதம்

பலன் தரும் விரதம்

நெருங்கிய உறவுகளில் ஏற்படும் பிறப்பு-இறப்பு, பெண்களின் மாதவிடாய் காலத்திலும் கூட ஏகாதசி விரதத்தை கடைபிடிக்கலாம். தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு மாதத்திலும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில் வரும் ஏகாதசி விரத தன்மையும் ஒவ்வொது விதமான பலனை தரும். ஒவ்வொரு ஏகாதசியும் பொதுப்பயனையும் நற்பலன்களையும் அளிப்பதோடு, தனிப்பட்ட பயன்களையும் விரதமிருப்போருக்கு தரக்கூடியது.

சாப்பிடக்கூடாது

சாப்பிடக்கூடாது

சில பேர் ஏகாதசி விரதம் இருப்பதை ஒட்டி, முதல் நாள் வயிறுமுட்டும் வரை சாப்பிடுவதுண்டு. அது பெரும் தவறு. ஏகாதசி விரதத்தின் முழுப்பயனையும் பெற வேண்டுமானால், விரத நாளில் முழுவதும் உண்ணாமலும், முதல் நாளான தசமி நாளில் ஒரு வேளை மட்டுமே உண்ண வேண்டியது அவசியம்.

அதோடு, விரதம் முடிந்த உடன் படிப்படியாகவே உணவு உண்ணும் அளவை கூட்ட வேண்டும். அப்படி இல்லாமல் மூன்று வேளை உண்ணும் உணவை ஒரே வேளையில் சாப்பிடக்கூடாது. அப்படி இருந்தால் விரதம் இருந்ததன் பலன் முழுமையாக கிடைக்காமல் போகக்கூடும்.

எப்போது சாப்பிடுவது?

எப்போது சாப்பிடுவது?

ஏகாதசி விரத நாளில், விரிவாக பூஜை செய்வது நல்லது. வீட்டு சூழ்நிலைகளால், பூஜை செய்ய முடியாமல், இறை சிந்தனை தடைபடும் நிலை வருமானால், அன்று முழுவதும் ஆலயத்திலேய தங்கியிருந்து வழிபாடு செய்வதும், இறைவனை தரிசிப்பதும் நன்மையை தரும். துவாதசி நாளில் விரதம் முடிக்கும் காலை வேளையில் துவாதசி திதி மிகக்குறுகிய நேரம் மட்டும் இருந்தால், மதியம் வரை செய்யவேண்டிய சந்தியாவந்தனம், உள்ளிட்ட முக்கிய பூஜைகளை சீக்கிரத்திலேயே முடித்துக் கொள்ளலாம்.

கோபம் கட்டுப்படும்

கோபம் கட்டுப்படும்

ஏகாதசி விரதம் இருந்தால், நம்முடைய கோபம் கட்டுக்குள் வரும். அதோடு மற்றவர்களின் கோபத்திலிருந்தும் நம்மை காப்பாற்றும். ஏகாதசி விரதம் இருந்த அம்பரீச சக்ரவர்த்தி துர்வாச மகரிஷியின் கடும் கோபத்தில் இருந்து மஹாவிஷ்ணுவால் காப்பாற்றப்பட்டார் என புராணங்கள் சொல்கின்றன.

என்ன சாப்பிடலாம்

என்ன சாப்பிடலாம்

ஏகாதசி மற்றும் துவாதசி நாட்களில் முழுமையாக விரதம் இருக்க முடியாவிட்டால் கூட, ஏகாதசி நாளன்று முன்னிரவில் சிறிதளவு இலகுவான உணவுகளை உண்ணலாம். ஆனால், சிரவண துவாதசி தினத்தில் கண்டிப்பாக விரதம் இருக்க வேண்டும். வளர்பிறை, தேய்பிறை துவாதசி நாட்களில் திருவோண நட்சத்திரம் வந்தால், அன்றைக்கும் விரதமிருந்து, திரயோதசி திதியில் தான் பாரணை செய்ய வேண்டும்.

கேட்டது கிடைக்கும் விரதம்

கேட்டது கிடைக்கும் விரதம்

பங்குனி மாதத்தில் வரும் விஜயா ஏகாதசி நாளில் விரதமிருந்தால், நாம் கேட்ட பலன்கள் கிடைக்கும். சீதா தேவியை பிரிந்த ஸ்ரீராமர் பக்தாப்யர் என்ற முனிவரின் ஆலோசனையின் படி பங்குனி மாதத்தில் விஜயா ஏகாதசி விரதத்தை கடைபிடித்ததால் தான், ஆஞ்சநேயரின் துணையுடன் கடலைக் கடந்து ராவணனை அழித்து சீதா தேவியை மீட்டார்.

சந்தான பாக்கியம் தரும்

சந்தான பாக்கியம் தரும்

ஏகாதசி நாளில் விரதமிருந்து, பகலிலும், இரவிலும் மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு நீடித்த புகழும், நோயற்ற வாழ்வும், சந்தான பாக்கியமும் கிடைப்பதோடு, வைகுண்டத்தில் வாசம் செய்வதற்கான பாக்கியம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vaikunta Ekadasi 2023: Spiritual Significance In The Vaikunta Ekadasi

There is great spiritual significance in the Vaikunta Ekadashi. The cosmic energies which flood the atmosphere on the day of Vaikunta Ekadashi are conducive to spiritual practices.
Desktop Bottom Promotion