For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காமாக்யா தேவி கோவிலில் ஆண்களுக்கு தடை ஏன் தெரியுமா?

ஒவ்வொரு மாதமும் காமாக்யா தேவியின் மாதவிலக்கு நாட்களில் மட்டும் கருவறையை சிவப்பு நிற வஸ்திரத்தால் மூடி மறைத்துவிடுகின்றனர். மேலும் ஆண்டுக்கு மூன்று நாட்கள் அதாவது ஆனி மாதத்தில் வரும் மாதவிலக்கு நாட்களி

|

ஒவ்வொரு மாதமும் காமாக்யா தேவியின் மாதவிலக்கு நாட்களில் மட்டும் கருவறையை சிவப்பு நிற வஸ்திரத்தால் மூடி மறைத்துவிடுகின்றனர். மேலும் ஆண்டுக்கு மூன்று நாட்கள் அதாவது ஆனி மாதத்தில் வரும் மாதவிலக்கு நாட்களில் மட்டும் கருவறையை மூடிவிடுகிறார்கள். அந்த மூன்று நாட்களில் மட்டும் ஆண்களை கோவிலுக்குள் அனுமதிப்பது கிடையாது. இதே போல பீஹார் மாநிலத்தில் முசாபர்பூர் மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற துர்கா மா மந்திர் கோவிலில் அம்மனின் மாதவிடாய் நாட்களில் ஆண் பூசாரிகளைக் கூட கோவிலுக்குள் நுழைவதற்கு கோவில் நிர்வாகம் அனுமதிப்பதில்லை. அதிசயமான இந்த கோவில்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

Special Features of Goddess Kamakhya Temple

கோவில்கள் என்பது உடல் தூய்மைக்கும் மனத்தூய்மை பெறவும் முன்னோர்களால் உருவாக்கப்பட்டதாகும். நாம் என்னதான் மனக் கஷ்டத்திலோ, குழப்பத்திலோ இருந்தால், கோவிலுக்குள் நுழைந்து சாமியை தரிசனம் செய்துவிட்டு, அங்கேயே சற்று நேரம் அமர்ந்து தியானத்தில் இருந்துவிட்டு வெளியில் வந்தால், மனதோடு உடலும் சுத்தமாகும்.

கோவிலுக்கும், மற்ற வழிபாட்டு தலங்களுக்கும் அந்தந்த மதத்தை சேர்ந்தவர்கள் சென்று வழிபடுவதோடு, பிற மதத்தை சேர்ந்தவர்களும் சென்று வருவது வாடிக்கையானது தான். ஆனால், சில கோவில்களிலும், பிற மத வழிபாட்டுத் தலங்களிலும் ஆகம விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேல் சட்டைக்கு தடா

மேல் சட்டைக்கு தடா

இந்தியாவில் உள்ள சில கோவில்களில் நுழைவதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக ஆகம விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. சில கோவில்களில் ஆண்கள் மேல் சட்டை அணிந்து வர தடை உள்ளது. திருவனந்தபுரம் பத்மநாதசுவாமி கோவில், குருவாயூர் குருவாயூரப்பன் கோவில், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் போன்ற கோவில்களில் நுழையயும் போது ஆண்கள் மேல் சட்டை கழற்றிவிட்டு தான் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

திருப்பதி சபரிமலை

திருப்பதி சபரிமலை

திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு ஆண்கள் அனைவரும் வேஷ்டி உடுத்திக் கொண்டு தான் செல்ல வேண்டும். அதே போல் சில கோவில்களில் பெண்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமான கோவில் சபரிமலை ஐயப்பன் கோவில். இங்கு 10 வயது முதல் 60 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மாதிரி, இந்தியாவில் சில கோவில்களில் ஆண்கள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

துர்கா மா மந்திர்

துர்கா மா மந்திர்

அவற்றில் முக்கியமானது ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில், மற்றும் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புஷ்கர் பிரம்மர் கோவில் ஆகியவை. இவற்றைப் போலவே, பீஹார் மாநிலத்திலுள்ள ஒரு கோவிலில் ஆண்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பீஹார் மாநிலத்தில் முசாபர்பூர் மாவட்டத்திலுள்ள கருணா என்னும் ஊரில் உள்ளது புகழ்பெற்ற துர்கா மா மந்திர் கோவில். இந்த கோவிலுக்குள் சில குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

அம்மனுக்கு மாதவிலக்கு

அம்மனுக்கு மாதவிலக்கு

குறிப்பாக துர்கா மா பெண் தெய்வம் என்பதால், அன்னை துர்கா தேவியின் மாதவிடாய் நாட்களில் ஆண் பூசாரிகளைக் கூட கோவிலுக்குள் நுழைவதற்கு கோவில் நிர்வாகம் அனுமதிப்பதில்லை. அதே போல் ஆண் பக்தர்களையும் அந்த கோவிலுக்குள் நுழைவதற்கு கோவில் நிர்வாகம் அனுமதிப்பதில்லை.

முசாபர்பூர் மாவட்ட சுற்று வட்டார மக்கள் அனைவரும் இங்கு வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இங்கு வந்து வழிபட்டால் துர்கா மா அன்னையின் பூரண அருள் தங்களுக்கு கிட்டும் என்று நம்புகின்றனர். மேலும் இந்த மாவட்டத்தில் பிரம்மா ஸ்தலம், ஹனுமான் மந்திர், சிவா மந்திர் என புகழ்பெற்ற கோவில்களும், சுற்றுலா தலங்களும் உள்ளன.

காமாக்யா ஆலயம், அஸ்ஸாம்

காமாக்யா ஆலயம், அஸ்ஸாம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள காமாக்யா கோவிலில் சில குறிப்பிட்ட நாட்களுக்கு ஆண்கள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. அஸ்ஸாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரின் நீல் பர்வதம் என்னும் மலை மீது அமைந்துள்ளது இந்த காமாக்யா ஆலயம். இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதி வணங்கப்படுகிறது. இந்தக் கோவிலில் இருக்கும் அம்பிகைக்கு உருவம் கிடையாது. அதற்கு பதிலாக அங்குள்ள ஒரு பாறையில் பெண்ணுறுப்பான யோனியை உருவமாக செய்து அதனை வழிபட்டு வருகின்றனர். இந்த யோனியில் இருந்து எப்போதும் நீர் கசிந்துகொண்டே இருக்கும்.

தட்சனை அழித்த வீரபத்திரர்

தட்சனை அழித்த வீரபத்திரர்

தட்சன் தன்னுடைய மகளான தாட்சாயினிக்கும் மருமகனான சிவபெருமானுக்கும் அழைப்பு விடுக்காமல், யாகத்தை நடத்தியதால் கோபமடைந்த தாட்சாயினி தட்சனை சபித்ததோடு, தானும் அந்த யாகத்தீயில் விழுந்து விடுகிறாள். இதைக் கேள்விப்பட்ட ஈசன், தட்சணின் ஆணவத்தை அடக்கி, யாகத்தை அழிப்பதற்காக வீரபத்திரரை அனுப்புகிறார்.

சிவனின் ஊழித்தாண்டவம்

சிவனின் ஊழித்தாண்டவம்

வீரபத்திரர் தட்சணின் யாகத்தை அழித்து, தட்சணின் தலையை துண்டித்துவிடுகிறார். பின்னர் சிவபெருமான், பார்வதியான தாட்சாயினியின் உடலை தன் தோளில் தூக்கிக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடுகிறார். தாட்சாயினியின் உடல் சிவனின் தோளில் இருக்கும் வரை அவரின் ஊழித்தாண்டவம் நிற்காது என்பதை அறிந்த விஷ்ணு, தனது சக்ராயுதத்தை ஏவி தாட்சாயினியின் உடலை துண்டாக்குகிறார்.

51 சக்தி பீடங்கள்

51 சக்தி பீடங்கள்

தாட்சாயினியின் உடல் 51 துண்டுகளாக சிதறி இப்பூமியில் வந்து விழுகிறது. இவ்வாறு தாட்சாயினியின் உடல் துண்டுகள் விழுந்த இடங்களே 51 சக்தி பீடங்களாக வழிபட்டு வரப்படுகின்றன. அதில் தாட்சாயினியின் யோனி விழுந்த இடமே இந்த காமாக்யா தேவி கோவில் என்று தலபுராணம் கூறகிறது.

கலர் மாறிய மலை

கலர் மாறிய மலை

தாட்சாயினியின் யோனி விழுந்த மலை நீல நிறமாக மாறிவிட்டதாம். இதன் காரணமாகவே இந்த மலைக்கு நீலாச்சல் மலை என்ற பெயர் ஏற்பட்டதாம். இந்தக் கோவில் கருவறையானது இயற்கையிலேயே அமைந்த மலைக் குகையில் அமைந்துள்ளது. அதன் காரணமாகவே இந்த கோவிலின் கருவறையில் எப்போதும் நீர் வழிந்தபடியே இருக்கிறது. ஊற்று நீரில் மூழ்கியபடியே யோனி பாகம் அமைந்துள்ளது.

யோனி பூஜை

யோனி பூஜை

காமாக்யா தேவியை வணங்குபவர்கள் 108 செம்பருத்தி மலர்களால் ஆன மாலையை யோனிக்கு அணிவித்து வழிபடுகிறார்கள். யோனியை மனதில் நினைத்து வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்று நம்புகின்றனர். திருமணமாகதவர்கள் இங்கு வந்து யோனி பீடத்தை வணங்கி செல்கின்றனர். குறிப்பிட்ட வயதை எட்டியும் பூப்பெய்தாமல் இருக்கும் பெண்களை இங்கு அழைத்து வந்து சிறப்பு யோனி பூஜை செய்து வழிபடுகின்றனர். மேலும், வருடத்தில் மூன்று நாட்கள் காமாக்யா அம்மன் மாதவிலக்கு அடைவதாக கூறி கோவில் நடையை மூடிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சிவப்பு நிற பிரம்மபுத்திரா

சிவப்பு நிற பிரம்மபுத்திரா

அந்த சமயங்களில் அங்கு ஓடும் பிரம்மபுத்திரா ஆறு சிவப்பு நிறத்தில் ஓடுவதாக சிலர் குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு மாதமும் காமாக்யா தேவியின் மாதவிலக்கு நாட்களில் மட்டும் கருவறையை சிவப்பு நிற வஸ்திரத்தால் மூடி மறைத்துவிடுகின்றனர். மேலும் ஆண்டுக்கு மூன்று நாட்கள் அதாவது ஆனி மாதத்தில் வரும் மாதவிலக்கு நாட்களில் மட்டும் கருவறையை மூடிவிடுகிறார்கள். அந்த நாட்களில் மட்டும் ஆண்களை கோவிலுக்குள் அனுமதிப்பது கிடையாது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் அம்புபச்சி மேளா என்ற திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த நாட்களில் நிர்வாண நாகா சாதுக்கள் ஆயிரக்கணக்கில் அம்புபச்சி மேளா திருவிழாவில் கலந்துகொண்டு காமாக்யா தேவியை வழிபட்டு செல்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Special Features of Goddess Kamakhya Temple

Every month during the menstrual days of Goddess Kamakhya, the embryo is covered with a red cloth. They cover the embryo only three days of the year, the menstrual days of the month. In those days only men were not allowed into the temple.
Story first published: Wednesday, November 27, 2019, 14:21 [IST]
Desktop Bottom Promotion