Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
செயின் ஸ்மோக்கராக இருந்து புகைப்பழக்கத்தைக் கைவிட்ட தென்னிந்திய நடிகர்கள்!
சில நடிகர்கள் தங்களின் நிஜ வாழ்க்கையிலும் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். அதில் பல ரசிகர்களைக் கொண்ட பிரபல நடிகர்கள் சிலர் புகைப்பழக்கத்திற்கே அடிமையாக இருந்து கைவிட்டுள்ளனர்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முன்மாதிரி இருப்பர். சிலருக்கு தங்கள் அப்பா, அம்மா, இன்னும் சிலருக்கு திரை நட்சத்திரங்கள். குறிப்பாக இளைஞர்களை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு சில நடிகர்கள் முன்மாதிரியாக இருப்பர். நடிப்பு, ஸ்டைல் மூலமே பல ரசிகர்களைப் பெற்ற நடிகர்கள் ஏராளம். அப்படி நடிகருக்கு ரசிகர்களாக இருப்பவர்கள், அந்த நடிகர்களின் ஸ்டைல், பேச்சு, பாவணை போன்றவற்றை பின்பற்ற நினைப்பார்கள்.
அந்த வகையில் சினிமாவில் சிகரெட் பிடிப்பது ஒரு ஸ்டைலாகிவிட்டது. அந்த ஸ்டைலை தற்போது பல இளைஞர்கள் பின்பற்றி வருகின்றனர். என்ன தான் திரைப்படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளின் போது, புகைப்பிடிப்பது உடல்நலத்திற்கு தீங்கானது என்று கூறினாலும், அப்படத்தை பார்ப்பவர்கள் தனக்கு விருப்பமான நடிகர் ஸ்டைலாக சிகரெட்டைப் பிடித்தால், செய்யத் தானே தோன்றும்.

மேலும் சில நடிகர்கள் திரைப்படத்தில் மட்டும் நடிப்பிற்காக சிகரெட்டைப் பிடிப்பதில்லை. தங்களின் நிஜ வாழ்க்கையிலும் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். அதில் பல ரசிகர்களைக் கொண்ட பிரபல நடிகர்கள் சிலர் புகைப்பழக்கத்திற்கே அடிமையாக இருந்து, தற்போது அப்பழக்கத்தில் இருந்து வெற்றிகரமாக மீண்டுள்ளனர். உங்கள் விருப்பமான நடிகர்களே புகைப்பழக்கத்தை கைவிட்டிருக்கும் போது, நீங்கள் அந்த கெட்ட பழக்கத்தை ஏன் கைவிட முயற்சிக்கக்கூடாது.
இக்கட்டுரையில் செயின் ஸ்மோக்கராக இருந்து புகைப்பழக்கத்தைக் கைவிட்ட பிரபல தென்னிந்திய நடிகர்கள் யார் யார் என்று பார்ப்போமா!!!

ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளான 12 டிசம்பர் 2012 அன்று தனது ரசிகர்களிடம் புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற கெட்ட பழக்கங்களைக் கைவிடுமாறு ஒரு அறிவுறுத்தினார். இதற்கு முன்னர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவால் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்தவுடன், இளமைப் பருவத்தில் அதிக அளவில் மது அருந்தியதும், புகைப் பிடித்ததும் தான், அவரது ஆரோக்கிய பிரச்சனைக்கான காரணங்களாக தனது ரசிகர்களிடம் கூறினார். பின்னர், அவர் புகைப்பிடிப்பதையே முற்றிலும் விட்டுவிட்டதாக அறிவித்தார்.

கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசனின் தாயார் எப்போதும் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொள்ள வேண்டாம் என்று அறிவுரைக் கூறிய போது, அவர் அப்பழக்கத்தைத் தொடங்குவார் என்றே அவருக்கு தெரியாதாம். இவர் 11 வயதில் முதல் சிகரெட்டைப் புகைத்தாராம். அதன் பின் தன்னிடம் இருந்த அந்த கெட்ட பழக்கத்தைக் கைவிட்டதாக ஒப்புக் கொண்டாராம். அதுமட்டுமின்றி, நடிகர் கமல்ஹாசன் பல படங்களில் லிப் கிஸ் காட்சிகளை நடிக்க வேண்டியிருந்ததால், சிகரெட் பழக்கத்தைத் விட்டுவிட்டதாகவும் நகைச்சுவையாக ஒரு பேட்டியில் கூறினார்.

மம்மூட்டி
மம்மூட்டியின் மேக்கப் மேன், இத்தனைய வருடங்களில் அவர் புகைப்பிடித்ததையே பார்த்ததில்லை என்று கூறினார். ஆனால் மம்மூட்டி தன்னிடம் இருந்த புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டு ஏழு வருடங்கள் ஆகிவிட்டதாகவும், அதன் பின் ஒருமுறை கூட தொட்டதில்லை என்றும் கூறினார்.

மகேஷ் பாபு
சில வருடங்களுக்கு முன், மகேஷ் பாபு ஒரு செயின் ஸ்மோக்கராக இருந்தார். இருப்பினும், புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பதற்கான வழிகள் குறித்து ஆசிரியர் ஆலன் கார் எழுதிய புத்தகத்தைப் படிக்குமாறு அவரது நண்பர் வற்புறுத்திய பின்னர் தான், இப்பழக்கத்தைக் கைவிட முடிவு எடுத்தாராம். தற்போது இவர் தனது ரசிகர்களை தவறாக வழிநடத்த விரும்பாததால், திரையில் கூட சிகரெட் பிடிப்பதில்லை என்பது தெரியுமா?

ராணா டகுபதி
நடிகர் ராணா டகுபதி ஒரு திரைப்படத்திற்காக சிகரெட் பிடிக்க ஆரம்பித்தாராம். அதன் பின் அது அப்படியே பல வருடங்களுக்கு பழக்கமாகிவிட்டதாம். இவரது படம் ஒன்றிற்கு டப்பிங் செய்ய போகும் போது, அவரால் சரியாக டப்பிங் செய்ய முடியவில்லையாம். இதுக்குறித்து மருத்துவரிடம் கேட்ட போது, மருத்துவர் புகைப்பதை கைவிட அறிவுறுத்தியுள்ளார். அதன் பின் ராணா கஷ்டப்பட்டு இந்த கெட்ட பழக்கத்தைக் கைவிட்டாராம்.

விவேக் ஓபராய்
விவேகம் திரைப்பட நடிகரான விவேக் ஓபராய், மும்பையில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளை காணச் செல்லும் போது, சிகரெட் பழக்கத்தைக் கைவிட முடிவு செய்தாராம். அதன் பின் அவர் உலக சுகாதார அமைப்பால் புகைப்பிடிப்பிற்கு எதிரான முயற்சிகளின் பிராண்ட் அம்பாஸிடராக கையெழுத்திட்டார்.

விஜய் தேவரகொண்டா
அர்ஜுன் ரெட்டிக்காக நடிகர் விஜய் தேவரகொண்டாவை அணுகியபோது, அவர் ஒருபோதும் புகைபிடித்ததில்லை. இருப்பினும், திரைப்படத்தில் உள்ள சில காட்சிகளுக்காக இவர் புகைப்பிடிக்க ஆரம்பித்தார். அதன் பின் திரைப்பட சூட்டிங் முடிந்த பின், அந்த பழக்கத்தை அப்போதே கைவிட்டதாக நடிகர் கூறினார்.

ஜெயசூர்யா
நடிகர் ஜெயசூர்யா தனது உடல்நலம் பாதிக்கப்படும் முன் ஒரு நாளைக்கு 10 சிகரெட் வரை பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தாராம். மிமிக்ரி கலைஞராக இருந்த நாட்களில் அவர் தனது நண்பர்களால் புகைப்பிடிக்க ஆரம்பித்தார். அதுவும் அவரது நண்பர்கள் புகைப்பிடித்தால் குரல் மேம்படும் என்று கூறினர். ஆனால் அது எதிர்மாறாக இருந்ததால், அவர் அந்த கெட்டப் பழக்கத்தை கைவிட்டு விலகினாராம்.



Click it and Unblock the Notifications