Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
2022 அக்டோபர் மாத சூரிய கிரகணத்தின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தின் போது சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தின் போது கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
பொதுவாக ஒரு ஆண்டில் 2 சூரிய கிரகணங்கள் மற்றும் 2 சந்திர கிரகணங்கள் நிகழும். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ஆம் தேதி நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 25 ஆம் தேதி நிகழவுள்ளது. தீபாவளிக்கு அடுத்த நாள் இந்த சூரிய கிரகணம் நிகழ்கிறது.

ஜோதிடத்தின் படி, கிரகணங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் இந்த சூரிய கிரகணத்தின் போது, சூரியன் துலாம் ராசியில் பயணித்து வருவார். இதனால் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தின் போது சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தின் போது கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
இந்த சூரிய கிரகணம் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் சற்று அதிக கவனமாக இருக்க வேண்டும். அதற்கு உண்ணும் உணவு மற்றும் பானங்களில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் ஒருசில விஷயங்களால் அதிகம் வருத்தப்பட நேரிடும்.

மிதுனம்
சூரிய கிரகணத்தின் தாக்கம் மிதுன ராசிக்காரர்களிடம் அதிகம் இருக்கும். எந்த ஒரு செயலுக்கும் கடினமாக உழைத்தால் தான் வெற்றி கிடைக்கும். வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும். எனவே பண விஷயத்தில் கவனமாக இருங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கை சூரிய கிரகணத்தால் அதிகம் பாதிக்கப்படும். பண விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. ஏனென்றால் தேவையற்ற செலவுகள் அதிகம் செய்ய நேரிடும். முதலீடு செய்ய நினைத்தால், சற்று யோசித்து செய்யுங்கள். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும்.

துலாம்
சூரிய கிரகணத்தின் போது துலாம் ராசியின் முதல் வீட்டில் சூரியன் இருப்பதால், துலாம் ராசிக்காரர்கள் சற்று அதிகம் கஷ்டப்பட வேண்டியிருக்கும். நிதி நிலை பலவீனமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம்
சூரிய கிரகணத்தால் விருச்சி ராசிக்காரர்களின் நிதி நிலை மோசமாக பாதிக்கப்படும். பணப் பிரச்சனையை சந்திக்க நேரிடும். தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. முதலீடு செய்வதாக இருந்தால், அதை இக்காலத்தில் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் இழப்பு ஏற்படும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் சற்று சிரமம் தருவதாக இருக்கும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக பேசும் போது கவனமாக இருங்கள். இல்லாவிட்டால் உங்கள் பேச்சால் பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும். எந்த வேலையிலும் அவசரப்படாதீர்கள். இல்லாவிட்டால், அந்த வேலை பாழாகிவிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications