அக்டோபர் மாத சூரிய கிரகணத்தால் அதிகம் கஷ்டப்படப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரிய கிரகணத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இப்போது 2022 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

2022 ஆம் ஆண்டின் கடைசி மற்றும் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 25 ஆம் தேதி நிகழ்கிறது. பொதுவாக கிரகணங்கள் மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. ஜோதிடத்தின் படி, இந்த சூரிய கிரகணத்தின் போது சூரியன் துலாம் ராசியில் இருப்பார். மேலும் சூரிய கிரகணமானது தீபாவளிக்கு அடுத்த நாள் செய்யப்படும் கோவர்த்தன பூஜை நாளில் நிகழ்கிறது. இந்த சூரிய கிரகணம் ஒரு பகுதி சூரிய கிரகணமாகும்.

Solar Eclipse October 2022 Astrology: Surya Grahan Effects on All Zodiac Signs in Tamil

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரிய கிரகணத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அந்த தாக்கம் நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம். இப்போது 2022 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியின் 7 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நடக்கிறது. இதனால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். முதலீடு செய்பவர்கள் புத்திசாலித்தனமாக புதிய முதலீட்டை செய்ய வேண்டும். வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் தங்கள் சக ஊழியர்களிடம் சில கருத்து வேறுபாடுகளை சந்திக்கலாம். எனவே யாருடனும் விவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்திடுங்கள். திருமணமானவர்கள் மற்றும் காதலிப்பவர்கள் தங்கள் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆனால் நல்ல புரிதலுடன் உங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. எனவே இக்காலத்தில் வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளதால், ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நிதி விஷயத்தில் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் கடன் வாங்க நேரிடும். வணிகர்கள் மற்றும் பணிபுரிபவர்கள் தங்கள் பணியிடத்தில் சவாலான சூழ்நிலைகளை சந்திக்கலாம். திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். காதலிப்பவர்களுக்கும் இதே நிலை தான்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் 5 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. எனவே இக்காலத்தில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் நிதி நிலை பற்றி கவலைப்பட வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் மற்றும் வணிகர்கள் தங்களின் செயல்திறனில் சரிவைக் காணக்கூடும். எனவே வேலையில் முழு கவனத்தை செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. திருமணமான தம்பதிகளுக்கு இடையே சிறுசிறு பிரச்சனைகள் வரும்.

கடகம்

கடகம்

கடக ராசியின் 4 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. எனவே ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். நிதி ரீதியாக, திட்டமிட்டு நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும். வேலை செய்பவர்கள் அல்லது வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எந்த ஒரு பெரிய திட்டமும் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. திருமணமானவர்கள் மற்றும் உறவில் உள்ளவர்கள், பரஸ்பர புரிதலுடன் உறவைக் காப்பாற்ற அறிவுறுத்தப்படுகிறது.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. ஆகவே ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். பெரிய முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பணிபுரிபவர்கள் மற்றும் வணிகர்கள் இக்காலத்தில் புதிய ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. திருமணமானவர்கள் மற்றும் உறவில் இருப்பவர்கள் தங்கள் உறவை வலுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

கன்னி

கன்னி

கன்னி ராசியின் 2 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் ஆரோக்கியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இக்காலத்தில் நிதியை சரியாக நிர்வகிக்க அறிவுறுத்தப்டுகிறது. முதலீடுகள் செய்வதை தள்ளிப் போடுவது நல்லது. வேலையில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. புதிய வேலைகளைத் தொடங்குவதைத் தவிர்க்கவும். உறவில் கவனமாக இருங்கள். இல்லாவிட்டால், சிறு பிரச்சனைகள் பெரிய சிக்கல்களை உருவாக்கும்.

துலாம்

துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. எனவே இக்காலத்தில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் சில சிரமங்கள் ஏற்படலாம். நிதி ரீதியாக சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலையில் சில சவால்களை சந்திக்க நேரிடும். புதிய வேலைகளைத் தவிர்க்கவும். திருமணமானவர்களின் உறவுகளில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 12 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. ஆகவே ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நிதி ரீதியாக அதிக செலவுகளை சந்திக்கலாம். தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்களுக்கு சவாலான காலமாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் சண்டையிடலாம்.

தனுசு

தனுசு

தனுசு ராசியின் 11 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. ஆகவே இக்காலத்தில் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், சில பிரச்சனைகளை சந்தக்க நேரிடும். நிதி ரீதியாக சில சவால்களை சந்திக்கக்கூடும். எனவே கவனமாக இருங்கள். தொழில் செய்பவர்கள் தங்களின் வருமானத்தை அதிகரிக்க புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். திருமணமானவர்கள் இக்காலத்தில் சந்தோஷத்தை அனுபவிப்பார்கள்.

மகரம்

மகரம்

மகர ராசியின் 10 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. எனவே ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இக்காலம் சற்று சுமாராகவே இருக்கும். நிதி நிலைமையும் பிரகாசமாக இருக்காது. வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். வியாபாரம் மற்றும் வேலை செய்பவர்கள் இக்காலத்தில் சற்று சிரமங்களை சந்திப்பார்கள். திருமணமான தம்பதிகளுக்கு இக்காலமானது சராசரியாக இருக்கும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. ஆகவே ஆரோக்கியத்தில் சிறு பிரச்சனைகளை சந்திக்கலாம். நிதி ரீதியாக, சராசரியாக இருக்கும். வேலை மற்றும் தொழில் செய்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். திருமணமானவர்கள் தங்கள் உறவைப் பேண பரிந்துரைக்கப்படுகிறது.

மீனம்

மீனம்

மீன ராசியின் 8 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. எனவே இந்த காலத்தில் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால், சற்று கவனமாக இருக்க வேண்டும். நிதி ரீதியாக, எந்தவிதமான முதலீடுகளையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் தொழில் செய்பவர்கள், தங்கள் வேலையில் சில சவால்களை சந்திக்க நேரிடும். ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. திருமணமானவர்கள் வாழ்வில் சிறுசிறு மனக்கசப்புகள் ஏற்படக்கூடும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion