Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
அக்டோபரில் நிகழும் சூரிய கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப் போகுது.. உங்க ராசி என்ன?
2022 ஆம் ஆண்டின் அக்டோபர் மாத சூரிய கிரகணமானது மாலை 4.29 முதல் 5.42 வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இப்போது சூரிய கிரகணத்தின் போது எந்தெந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகிறது என்பதைக் காண்போம்.
2022 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி நிகழவுள்ளது. நம்பிக்கைகளின் படி கிரகணங்கள் ஒரு அசுப நிகழ்வாக கருதப்படுகிறது மற்றும் இக்காலத்தில் எந்த ஒரு நல்ல காரியங்களும் செய்யப்படுவதில்லை.

இந்த சூரிய கிரகணத்தின் போது, சூரியன் துலாம் ராசியில் பயணித்து வருவார். இதன் விளைவாக இந்த சூரிய கிரகணம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். மேலும் இது தீபாவளிக்கு மறுநாள் நிகழ்கிறது. இந்நாளில் தான் கோவர்த்தன பூஜை செய்யப்படுகிறது. சூரிய கிரகணமானது மாலை 4.29 முதல் 5.42 வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இப்போது சூரிய கிரகணத்தின் போது எந்தெந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் நிறைய பணத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் சூழ்நிலைகளானது சாதகமாக இருக்கும். தொழில் செய்பவர்கள் இந்நாளில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். கடகம்

கடகம்
கடக ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் நிறைய பண பலன்களைப் பெறுவார்கள். இந்நாளில் உங்களின் பணப் பிரச்சனைகள் குறையும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்நாள் லாபகரமான நாளாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் அற்புதமான நாளாக இருக்கும். இந்நாளில் பொருளாதார வளர்ச்சியுடன் பண ஆதாயமும் உண்டாகும். மேலும் நல்ல பண வரவைப் பெறுவீர்கள்.

எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்?
2022 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தின் போது மிதுனம், கன்னி, துலாம், ரிஷபம் ஆகிய ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இவர்கள் அதிக பிரச்சனைகளுடன், நிறைய சவால்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications