Latest Updates
-
புதனின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் வேர்க்கடலை குடைமிளகாய் குருமா - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க -
செஃப் தீனா ஸ்டைல் இட்லி பொடியின் ஸ்பெஷலே கடைசியாக சேர்க்கும் இந்த ஒரு பொருள் தாங்க.. அது என்னன்னு பாருங்களேன். -
இந்த 3 மாதத்தில் பிறந்தவர்களுக்கு கெட்டவர்களை பார்த்தவுடனேயே கண்டறியும் அதிசய சக்தி இருக்குமாம் -
முகம் கருப்பா இருக்கா? பலாப்பழம் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. வெள்ளையாவீங்க.. -
இந்தியாவில் ஆண் நதி என்று அழைக்கப்படும் ஒரே நதி எது தெரியுமா? இந்தியாவின் மிகப்பெரிய நதியும் இதுதானாம் -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
கோயம்பத்தூர் ஸ்டைல் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
உருளைக்கிழங்கை ஒருவாட்டி இந்த பக்குவத்துல வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் கோடிகளில் புரளப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தால் இந்த 4 ராசிக்கு அற்புதமா இருக்கப் போகுது..
சூரிய கிரகணத்தின் போது சில ராசிக்காரர்கள் நற்பலன்களையும், சிலர் கெடு பலன்களையும் பெறுகிறார்கள். இப்போது ஏப்ரல் 30-ம் தேதி சூரிய கிரகணம் எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் மிகவும் முக்கியமானது என்றே கூற வேண்டும். ஏனெனில் இந்த மாதத்தில் பல முக்கியமான கிரக பெயர்ச்சிகள் மற்றும் வானியல் நிகழ்வான முதல் சூரிய கிரகணம் போன்றவை நிகழ்கின்றன. ஏற்கனவே ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி போன்றவை முடிந்துள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் மாதத்தில் இறுதியில், அதாவது ஏப்ரல் 30 ஆம் தேதி நிகழ்கிறது. இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் மாதத்தில் நிகழவுள்ளது.

ஜோதிடத்தைப் பொறுத்தவரை, கிரகங்களின் ராசி மாற்றத்தைப் போலவே, கிரகணங்களும் அனைத்து மக்களையும் பாதிக்கிறது. இப்போது 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணம் மேஷ ராசியில் நிகழ்கிறது. இந்த சூரிய கிரகணம் பகுதி கிரகணமாக இருக்கும். இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. ஆனால் இந்த கிரகணத்தை பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக், அண்டார்டிக்கா மற்றும் தென் அமெரிக்க பகுதிகளில் காணலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகணம் மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. சூரியன் அனைத்து கிரகங்கள் மற்றும் முழு பிரபஞ்சத்தின் மையப் புள்ளியாகும். சூரிய கிரகணத்தின் போது சூரிய பகவான் துன்ப நிலையில் இருப்பார். ஆகவே தான் சூரிய கிரகணத்தின் போது சில ராசிக்காரர்கள் நற்பலன்களையும், சிலர் கெடு பலன்களையும் பெறுகிறார்கள். இப்போது ஏப்ரல் 30-ம் தேதி சூரிய கிரகணம் எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணமானது, ரிஷப ராசிக்காரர்களுக்கு நற்பலன்களைத் தரும். காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பணம் சம்பாதிக்க நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களால் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் சாதகமாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம். இக்காலத்தில் தீட்டும் திட்டங்களில் வெற்றி கிடைக்கும். கௌரவம் உயரும். பயணங்களால் நன்மைகளைப் பெறுவீர்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கிறது. சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் ஒரு வரப்பிரசாதம். ஏனெனில் இக்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும். அரசு வேலைகளில் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்பை விட முன்னேற்றம் ஏற்படும்.



Click it and Unblock the Notifications