வரவிருக்கும் முழு சூரிய கிரகணத்தால் அதிகம் கஷ்டப்படப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

முழு சூரிய கிரகணம் இந்திய நேரப்படி டிசம்பர் 14 ஆம் தேதி இரவு 7.03 மணிக்கு ஆரம்பமாகி, டிசம்பர் 15 ஆம் தேதி மதியம் 12.23-க்கு முடிவடையும். அதிகபட்ச கிரகணம் டிசம்பர் 14 ஆம் தேதி இரவு 9:43 மணிக்கு இருக்கும்.

2020 ஆம் ஆண்டு இதுவரை 5 கிரகணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி நிகழவிருக்கிறது. இது முழு சூரிய கிரகணமாக இருக்கும். இந்த அரிய சூரிய கிரகணம் சிலி மற்றும் அர்ஜென்டினாவின் சில பகுதிகள், தென் அமெரிக்கா, தென் மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் அண்டார்டிகா போன்ற பகுதிகளை கடந்து செல்வதால், இப்பகுதியில் தெரியும். ஆனால் இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது.

Solar Eclipse December 2020: Effects On All Zodiac Signs

முழு சூரிய கிரகணம் இந்திய நேரப்படி டிசம்பர் 14 ஆம் தேதி இரவு 7.03 மணிக்கு ஆரம்பமாகி, டிசம்பர் 15 ஆம் தேதி மதியம் 12.23-க்கு முடிவடையும். அதிகபட்ச கிரகணம் டிசம்பர் 14 ஆம் தேதி இரவு 9:43 மணிக்கு இருக்கும். எனவே இந்த முழு சூரிய கிரகணம் ஒவ்வொது ராசிக்காரர்களையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை இப்போது பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியின் 9 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெற அதிகம் முயற்சி செய்ய வேண்டியிருக்கும். எதிலும் தடைகள், சிரமங்கள் மற்றும் தாமதங்கள் ஏற்படலாம். வணிகம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சிக்கல்களை மிகவும் எச்சரிக்கையுடன் எடுத்துக் கொள்வது நல்லது. இல்லையெனில், கூடுதல் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தொழில் அல்லது சொந்த விஷயத்திற்காக மேற்கொள்ளும் பயணத்தால் எதிர்பார்த்த முடிவு கிடைக்காமல் போகலாம் மற்றும் சிக்கல்களை உருவாக்கக்கூடும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டில் கிரகணம் நிகழ்கிறது. இதனால் நீங்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே ஆரோக்கியமற்ற உணவுகளை கட்டாயம் தவிர்ப்பது நல்லது. குடும்ப பிரச்சினைகள் மற்றும் நிதி தொடர்பான விஷயங்களில் ஏற்படும் ஏமாற்றம் உங்களை பதட்டமாக வைத்திருக்கக்கூடும். குறுகிய மற்றும் நீண்ட கால முதலீடுகள் செய்வதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். இந்த காலத்தில் பழைய நோய்கள் உங்களுக்கு சிக்கலைத் தரக்கூடும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் 7 ஆவது வீட்டில் கிரகணம் நடக்கிறது. இதன் காரணமாக ஆரோக்கியமாக இருக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்காது. அதற்காக அவ்வளவு தீவிரமாக இருக்காது. எதிர்பார்ப்பும், தவறான புரிதலும் உங்கள் மனைவியுடனான உறவை பதட்டமாக மாற்றக்கூடும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், தங்களின் கூட்டாளியுடன் பரஸ்பர புரிதலுடன் இருந்தால், சிக்கலைத் தீர்க்கலாம்.

கடகம்

கடகம்

கடக ராசியின் 6 ஆவது வீட்டில் கிரகணம் நிகழ்கிறது. ஆகவே இந்த காலம் வேலை மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் ஒரு நன்கு செயல்படக்கூடியவர் என்பதை நிரூபிப்பீர்கள். முக்கியமான முடிவுகளை எடுப்பது மற்றும் பணியிடத்திலும் சொந்த வாழ்க்கையிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க கற்றுக் கொள்வது என பலவற்றை தெரிந்து கொள்வீர்கள். இந்த காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகள் உங்களை கவலையடையச் செய்யலாம்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டில் கிரகணம் நிகழ்கிறது. உணர்ச்சிகளை கவனமாக கையாளாவிட்டால், உங்களின் உறவுகளில் விரோதத்தைக் கொண்டு வரக்கூடும். வருமான ஆதாரம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. ஆனால் பணப்புழக்கத்தில் எந்த தடையும் இருக்காது. இருப்பினும், நிதி ஸ்திரத்தன்மை குறித்து எந்தவொரு மோசமான முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்கவும்.

கன்னி

கன்னி

கன்னி ராசியின் 4 ஆவது வீட்டில் கிரகணம் நடக்கிறது. எனவே வீட்டு தொடர்பான விஷயம் உங்களின் முயற்சிகளை பாதிக்கலாம். வேலை முன்னணியில், உங்களின் கௌரவம் மற்றும் பணி நிலையை சிறப்பான நிலையில் வைத்திருக்க கடின உழைப்பு மற்றும் வலுவான முயற்சிகள் தேவைப்படலாம். இந்த காலத்தில் நீங்கள் எதிர்பார்த்த பலன்களையும், வெகுமதிகளையும் பெறமாட்டீர்கள். உங்களின் ஆரோக்கியம், உங்களை சிறப்பாக பணிபுரிய விடாது. இதனால் நீங்கள் சோர்வாக உணர்வீர்கள். ஆனால் நோய்வாய்ப்படும் முன் கவனித்தால், இதைத் தவிர்க்கலாம்.

துலாம்

துலாம்

துலாம் ராசியின் 3 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் உடன்பிறப்புகள் மற்றும் வேலை முன்னணியில் உள்ள உயர் அதிகாரிகளுடன் நல்ல மென்மையான உறவுகளை கோரக்கூடும். நிதி விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் புதிய திட்டங்களைத் தவிர்க்கவும். சூரிய கிரகணத்தால் எவ்விதமான தீங்கும் நடைபெறாது என்றாலும், நீங்கள் வெளிநாடுகளில் இருந்து பெற காத்திருக்கும் நற்செய்திகளை இழப்பீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் வீட்டில் உள்ள சூழ்நிலையும், குடும்ப உறுப்பினர்களுடனான உறவு கலங்கக்கூடும். உங்கள் பட்ஜெட்டை மீறி, தேவையற்ற செலவுகள் காரணமாக, நிதி தொடர்பான விஷயங்கள் உங்களை கவலையடையச் செய்யலாம். எனவே செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள் மற்றும் ஆரம்பட பொருட்களுக்கு செலவு செய்வததைக் குறைத்துக் கொள்ளுங்கள். இன்த காலத்தில், கண்களில் பிரச்சனைகளை சந்திக்கலாம்.

தனுசு

தனுசு

தனுசு ராசியின் முதல் வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த சூரிய கிரகணத்தால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். உங்கள் நுரையீரலில் அசௌகரியத்தை உணரலாம் அல்லது சுவாச பிரச்சனைகள் உங்களை தொந்தரவு செய்யலாம். இந்த காலத்தில் நிதி பற்றாக்குறையை அனுபவிக்கலாம் அல்லது நீங்கள் பல வழிகளில் பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும். இதனால் உங்கள் கையை மீறி செலவு அதிகரிக்கும். எவ்வளவு செலவானாலும், மற்றவர்களிடம் இருந்து கடனான பணம் வாங்குவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

மகரம்

மகரம்

மகர ராசியின் 12 ஆவது வீட்டில் கிரகணம் நடக்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் திடீர் இழப்பு அல்லது எதிர்பார்க்காத செலவை சந்திக்க நேரிடும். நிதி நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இந்த நிலைமை உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். இந்த காலத்தில் உங்களின் நிதி மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் இருந்து, உங்களின் பொறுமை உங்களுக்கு பெரிதும் உதவும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசியின் 11 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நடைபெறுகிறது. இதனால் நிதி கண்ணோட்டத்தில், இந்த ராசிக்காரர்கள் சற்று வசதியாக உணர்வார்கள். அறியாத பல ஆதாரங்களில் இருந்து ஒரு ஆதாயம் கிடைக்கலாம் அல்லது ஏதேனும் தொகை மிச்சம் இருந்தால், அது இந்த காலத்தில் உங்கள் கைக்கு கிடைத்து இனிமையானதாக்கும். இந்த காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவுகளில் உள்ள மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனம்

மீனம்

மீன ராசியின் 10 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதன் காரணமாக, நீங்கள் வசதியாக உணரமாட்டீர்கள். நீங்கள் வழக்கமாக வேலை செய்யும் சூழ்நிலை உங்களை அசௌகரியமானதாக உணர வைக்கலாம். தொழிலில் உங்கள் வாடிக்கையாளர்களின் பட்டியலை அதிகரிக்க, சிறப்பு முயற்சிகள் மற்றும் மதிப்பீடு தேவைப்படலாம். கவர்ச்சிகரமான திட்டங்களை வழங்குவதன் மூலம், பழைய வாடிக்கையாளர்களை பிடிப்பதற்கும், புதிய வாடிக்கையாளர்களைக் கொண்டு வருவதற்கும் வசதியாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion