Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
ஏப்ரல் மாதத்தில் நிகழும் சூரிய கிரகணத்தால் அதிகம் பாதிக்கப்படப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
கிரகணம் ஒரு வகையான வானியல் நிகழ்வாக இருந்தாலும், ஜோதிடத்தில் இது மங்களகரமான நிகழ்வாக கருதப்படுவதில்லை. எனவே ஜோதிடத்தின் படி, 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஒவ்வொரு ராசிகளையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை காண்போம்.
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 2022 ஏப்ரல் 30 தேதி நிகழவிருக்கிறது. பஞ்சாங்கத்தின் படி, இந்த முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ஆம் தேதி மதியம் 12.15 மணியில் இருந்து மாலை 04.07 மணி வரை நிகழும். சூரிய கிரகணத்தின் போது, சந்திரன் முழுவதுமாக சூரியனை மறைக்கும். இதனால் சூரியனின் கதிர்கள் பூமியில் படாது. இந்த வானியல் நிகழ்வு தான் சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

கிரகணம் ஒரு வகையான வானியல் நிகழ்வாக இருந்தாலும், ஜோதிடத்தில் இது ஒரு மங்களகரமான நிகழ்வாக கருதப்படுவதில்லை. எனவே ஜோதிடத்தின் படி, 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஒவ்வொரு ராசிகளையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள், பணம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். கிரகண காலத்தில் பணம் தொடர்பான எந்த வேலைகளையும் செய்யாதீர்கள். இல்லாவிட்டால் பெரும் பிரச்சனையில் சிக்கி தவிக்க நேரிடும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! சூரிய கிரகண நாளில் உங்களின் தன்னம்பிக்கை குறையும். மேலும் இந்நாளில் தேவையற்ற கோபம் அல்லது மன அழுத்தத்தைத் தவிர்த்திடுங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளன்று கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதோடு உங்களைச் சுற்றியிருப்பவர்களின் அசைவுகளை கூர்ந்து கண்காணியுங்கள். மொத்தத்தில் கவனமாக இருங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகண தினம் நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் இந்நாளில் நீங்கும். இதுமட்டுமின்றி, நிதி தொடர்பான பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! ஆண்டின் முதல் சூரிய கிரகண நாளன்று உங்களுக்கு வியாபாரத்தில் நல்ல பணம் கிடைக்கும். ஆனாலும், இந்நாளில் எந்தவொரு நிதி முதலீட்டையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி
2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகண நாளில் கன்னி ராசிக்காரர்கள் வெற்றி பெறுவதற்கு சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இது மட்டுமின்றி, இந்நாளில் உங்கள் வேலையையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் சற்று மோசமானதாகவே இருக்கும். கிரகண நாளன்று உங்கள் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படலாம். மேலும் இந்நாளில் சட்ட மோதல்களைத் தவிர்த்திடுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளன்று உத்தியோகத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுமட்டுமின்றி, வியாபாரத்திலும் நி தி தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! சூரிய கிரகண நாளில் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்நாளில் அதீத நம்பிக்கையை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இந்நாளன்று உங்கள் இயல்பை மென்மையாக வைத்திருங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களே! சூரிய கிரகண நாளன்று உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும். அதோடு, பந்தயம் மற்றும் சூதாட்டத்தை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் முதலீட்டில் நஷ்டத்தை சந்திக்கலாம். குடும்ப தகராறால் சற்று மன வருத்தத்தில் இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் பேச்சினால் வருத்தம் கொள்ளலாம். எவ்விதமான அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க பொறுமையாக இருங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் நல்ல பலனைத் தரும். வியாபாரத்தில் செய்யப்படும் நிதி முதலீட்டினால் நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் கௌரவம் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications