For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏப்ரல் மாத இறுதியில் வரும் முதல் சூரிய கிரகணம்... இது இந்தியாவில் தெரியுமா?

2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எப்போது, நேரம் மற்றும் இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியுமா மற்றும் உலகின் வேறு எந்த பகுதிகளில் தெரியும்?

|

2022 ஆம் ஆண்டில் இரண்டு சூரிய கிரகணம் மற்றும் இரண்டு சந்திர கிரகணம் உட்பட 4 கிரகணங்கள் ஏற்படவுள்ளது. அதில் 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் மாதத்தில் ஏற்படவுள்ளது. இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் மாதத்தில் ஏற்படும். அதேப் போல் முதல் சந்திர கிரகணம் மே மாதத்தில், இரண்டாவது சந்திர கிரகணம் நவம்பர் மாதத்திலும் நிகழவுள்ளது.

Solar Eclipse 2022 in April : Know Date, Time and First Surya Grahan Visibility in India in Tamil

இப்போது 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எப்போது, நேரம் மற்றும் இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியுமா மற்றும் உலகின் வேறு எந்த பகுதிகளில் தெரியும் என்பன போன்ற தகவல்களைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூரிய கிரகணம் என்றால் என்ன?

சூரிய கிரகணம் என்றால் என்ன?

சூரிய கிரகணம் ஒரு அரிய வானியல் நிகழ்வு. சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து, அதன் கதிர்கள் பூமியில் படுவதைத் தடுக்கும் போது சூரிய கிரணம் ஏற்படுகிறது. சூரிய கிரகணங்களில் 4 வகைகள் உள்ளன. அவை மொத்த, வளைய, பகுதி மற்றும் கலப்பினம் ஆகும். இதில் ஒவ்வொன்றும் உலகின் ஒவ்வொரு பகுதிகளில் மட்டுமே தெரியும்.

2022 சூரிய கிரகண தேதி மற்றும் நேரம்

2022 சூரிய கிரகண தேதி மற்றும் நேரம்

பஞ்சாங்கத்தின் படி, 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ஆம் தேதி நிகழ்கிறது. இந்திய நேரப்படி, இந்த கிரகணம் மதியம் 12.15 மணிக்கு தொடங்கி மாலை 04.07 மணி வரை இருக்கும். இந்த கிரகணம் மேஷ ராசியின் பரணி நட்சத்திரத்தில் நிகழ்கிறது.

இந்தியாவில் தெரியுமா?

இந்தியாவில் தெரியுமா?

2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் 30 ஆம் தேதி நிகழும் முதல் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. ஆகவே இதற்கு மத முக்கியத்துவம் இருக்காது மற்றும் இந்தியாவில் சூதக் காலம் எதுவும் இல்லை.

வேறு எங்கு தெரியும்?

வேறு எங்கு தெரியும்?

2022 ஆம் ஆண்டில் நிகழும் சூரிய கிரகணம் தென் மற்றும் மேற்கு-தெற்கு அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிக் பெருங்கடல் பகுதிகளில் தெரியும். இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்ணில் பார்த்து மகிழ்ந்தாலும், பாதுகாப்பு கண்ணாடிகள், பைனாகுலர், ப்ரொஜெக்டர் ஆகியவற்றைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Solar Eclipse 2022 in April : Know Date, Time and First Surya Grahan Visibility in India in Tamil

Solar Eclipse 2022: The first Surya Grahan of the year 2022 will occur on April 30, Saturday. Know Date, Time and First Surya Grahan Visibility in India in tamil.
Desktop Bottom Promotion