For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாளில் மற்றவர்களுக்கு சொல்ல வேண்டியது என்ன தெரியுமா?

பெண் விடுதலைக்காகவும் போராடினார். இவர் தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தார். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது.

|

பகுத்தறிவு, சுயமரியாதை, திராவிட அரசியல் என தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார். தமிழகத்தின் பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி செப்டம்பர் 17, 1879 ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார். இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாசிர தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார்.

Social Reformer Periyar Birth Anniversary; Best Periyar Quotes, Status, Shayari, Poetry & Thoughts in Tamil

பெண் விடுதலைக்காகவும் போராடினார். இவர் தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தார். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. ஈ.வெ.ரா, ஈ.வெ. இராமசாமி என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படும் தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்தநாளில் அவர் கூறிய பொன்மொழிகளை இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இறைமறுப்பாளர்

இறைமறுப்பாளர்

மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதைக் கருத்தில் கொண்டு பெரியார், தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். இவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு தந்தை பெரியார் குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார்.

பொன்மொழி 1

பொன்மொழி 1

விதியை நம்பி மதியை இழக்காதே! -தந்தை பெரியார்

பொன்மொழி 2

பொன்மொழி 2

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு! -தந்தை பெரியார்

பொன்மொழி 3

பொன்மொழி 3

ஒழுக்கம் என்பது சமுதாயத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே தன்மையாக இருக்க வேண்டும்.-தந்தை பெரியார்

பொன்மொழி 4

பொன்மொழி 4

உன் சாத்திரத்தை விட

உன் முன்னோரை விட

உன் வெங்காயம்

வெளக்ககாமத்தை விட

உன் அறிவு பெரிது

அதை சிந்தி!

-தந்தை பெரியார்

பொன்மொழி 5

பொன்மொழி 5

மதம்

மனிதனை மிருகமாக்கும்

சாதி

மனிதனை சாக்கடையாக்கும்

-தந்தை பெரியார்

பொன்மொழி 6

பொன்மொழி 6

ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மைதான். என்றாலும், அவனோட அவனுடைய முயற்சிகளும் அவன் துவங்கிய காரியங்களும் செத்துப்போய்விடுவதில்லை.- தந்தை பெரியார்

பொன்மொழி 7

பொன்மொழி 7

பெண்களிடம் கரண்டியை பிடிங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்!-தந்தை பெரியார்

பொன்மொழி 8

பொன்மொழி 8

பெண்கள் வெறும் அலங்காரத்தோடு திருப்தி அடைவதால், விடுதலை வேட்கை பிறப்பது அரிது. -தந்தை பெரியார்

பொன்மொழி 9

பொன்மொழி 9

யார் சொல்லி இருந்தாலும்

எங்கு படித்திருந்தாலும்

நானே சொன்னாலும்

உன் புத்திக்கு

பொது அறிவுக்கு

பொருந்தாத எதையும் நம்பாதே!

-தந்தை பெரியார்

பொன்மொழி 10

பொன்மொழி 10

வலிமை, கோபம் ஆளும் திறன் போன்றவை ஆணுக்கும்

சாந்தம், அமைதி போன்றவை பெண்ணுக்குமான குணங்கள் என்பது

ஆண் பெண்ணை அடக்கியாள பயன்படுமே தவிர

பெண்ணுக்கு ஒருநாளும் பயன்படாது

-தந்தை பெரியார்

பொன்மொழி 11

பொன்மொழி 11

கடவுள் இல்லை!

கடவுள் இல்லை!

கடவுள் இல்லவே இல்லை!!

கடவுளை கற்பித்தவன் முட்டாள்

கடவுளை பரப்பியவன் அயோக்கியன்

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி

கடவுளை மற! மனிதனை நினை!

-தந்தை பெரியார்

பொன்மொழி 12

பொன்மொழி 12

ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்துகொள்வதே ஒழுக்கமாகும்.

-தந்தை பெரியார்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Social Reformer Periyar Birth Anniversary; Best Periyar Quotes, Status, Shayari, Poetry & Thoughts in Tamil

Here we are talking about the Social Reformer Periyar Birth Anniversary; Best Periyar Quotes, Status, Shayari, Poetry & Thoughts in Tamil.
Desktop Bottom Promotion