For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்ககிட்ட இந்த பழக்கங்கள் இருக்கா? அப்ப உங்களுக்கு கண்டிப்பா முன்ஜென்மம் இருந்திருக்கு...!

நமக்கு முன்ஜென்ம நியாபகங்கள் வருமா என்றால் அதற்கு முழுமையான பதில் இல்லை. ஆனால் நமக்கு முன்ஜென்மம் இருந்ததை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

|

இந்த உலகத்தில் கடந்த காலம் மீதும் முன்ஜென்மம் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு கலாச்சாரங்களில் முன்ஜென்மம் பற்றிய கதைகளும், நம்பிக்கைகளும் உள்ளது. விஞ்ஞானரீதியாக முன்ஜென்மம் பற்றிய ஆதாரங்கள் இல்லை என்றாலும் இதிகாசங்கள், புராணங்கள் என நாம் நம்பும் பலவற்றிலும் முன்ஜென்மம் பற்றி கூறப்பட்டுள்ளது.

signs you may have had a past life

நமக்கு முன்ஜென்ம நியாபகங்கள் வருமா என்றால் அதற்கு முழுமையான பதில் இல்லை. ஆனால் நமக்கு முன்ஜென்மம் இருந்ததை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி நாம் சந்திக்கும் சில நிகழ்வுகளும், அறிகுறிகளும் நம்முடைய முன்ஜென்மத்தை நியாபகப்படுத்துவதாகவும், முன்ஜென்மத்துடன் நமக்கு தொடர்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த அறிகுறிகள் உங்களுக்கு முன்ஜென்மத்தை நியாபகப்படுத்தும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொடர்ச்சியான கனவுகள்

தொடர்ச்சியான கனவுகள்

உங்களுக்கு வரும் கனவுகள் பற்றி பல விளக்கங்கள் இருக்கக்கூடும், ஆனால் நீங்க குறிப்பிட்ட கனவை மட்டும் தொடர்ச்சியாக பார்க்கிறீர்கள் என்றால், அது கடந்த கால வாழ்க்கையை வெளிப்படுத்தும் உங்கள் ஆழ் மனநிலையாக இருக்கலாம். இந்த தொடர்ச்சியான கனவுகள் பல வடிவங்களை எடுக்கலாம். அது எந்த காலகட்டத்தில் நடக்கிறது என்பதை கவனியுங்கள். வரலாற்றில் மற்றொரு கட்டத்தில் உங்கள் ஆன்மா வேறு எங்காவது இருந்திருக்கலாம் என்பதற்கான ஒரு அறிகுறி இது.

தேஜா வு அனுபவம்

தேஜா வு அனுபவம்

இந்த அனுபவம் கிட்டத்தட்ட அனைவருக்குமே மீண்டும் மீண்டும் கிடைக்கும். ஆனால் சாதாரண தேஜா வுக்கும், பாரம்பரிய தேஜா வுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இந்த தருணத்தில் நீங்கள் ஏற்கனவே வாழ்ந்தது போன்ற உணர்வு வந்தால் அதுதான் தேஜா வு. இதற்கு காரணம் மூளையின் நினைவக மையத்திற்குள் ஏற்படும் தவறுதான். கடந்த ஜென்மத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு இது முன்ஜென்ம வாழ்க்கையின் அடையாளமாக இருக்கலாம்.

உங்களுக்கு தெரியாத கடந்த நிகழ்வுகளை நினைவில் கொள்வது

உங்களுக்கு தெரியாத கடந்த நிகழ்வுகளை நினைவில் கொள்வது

தர்க்கரீதியாக உங்களிடம் இல்லாத நினைவுகள் உங்களிடம் இருந்தால், நீங்கள் முன்ஜென்ம வாழ்க்கையை வாழ்ந்தீர்கள் என்பதை அறிவதற்கான எளிதான வழி இதுவாகும். நீங்கள் அங்கு இல்லாத நிகழ்வுகளை நீங்கள் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறீர்களா? நீங்கள் ஒருபோதும் இல்லாதபோதும் ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் இடத்தையும் விவரிக்க முடியுமா? இவை கடந்தகால வாழ்க்கையில் எஞ்சியிருக்கும் நினைவுகளாக இருக்கலாம்.

நம்பமுடியாத தொலைநோக்கு பார்வை

நம்பமுடியாத தொலைநோக்கு பார்வை

மறுபிறவியில் நம்பிக்கை கொண்டவர்கள், கடந்த காலத்மும், எதிர்காலமும் - நேரத்துடன் ஒத்துப்போகிறது என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை கணிப்பதன் மூலம் நீங்கள் தொடர்ந்து மற்றவர்களைக் கவர்ந்தால் அல்லது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை நீங்கள் முன்கூட்டியே உணர முடிந்தால், நீங்கள் அதிக தொலைநோக்கு பார்வையைக் கொண்டவராக இருக்கலாம். இந்த எதிர்காலத்தை சொல்லும் திறன் உங்கள் ஆத்மா பல காலமாகவே பூமியில் வாழ்கிறது என்பதன் அர்த்தம். மேலும் குறிப்பிட்ட ஒன்று நிகழும்போது அதை அடையாளம் காண முடியும்.

MOST READ: சாணக்கியர் கூறியுள்ளபடி பெண்களுக்கு இயற்கையிலேயே இருக்கும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா?

காரணமில்லாத பயம்

காரணமில்லாத பயம்

நம் அனைவருக்கும் ஒருவித பயம் இருக்கிறது. சிலருக்கு உயரம் என்றால் பயம், சிலருக்கு பாம்பு என்றால் பயம், சிலருக்கு தண்ணீர் என்றால் பயம். இந்த பயம் எங்கிருந்து வந்தது என்று என்றாவது நீங்கள் சிந்தித்து உள்ளீர்களா? இந்த காரணமில்லாத பயம் உங்களின் முன்ஜென்ம சம்பவங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஒருவேளை உங்களுக்கு முன்ஜென்ம மரணம் அதனால் ஏற்பட்டிருக்கலாம்.

மர்மமான வலிகள்

மர்மமான வலிகள்

எந்த காரணமும் இல்லாமல் திடீரென விசித்திரமான வலிகள் உங்களுக்கு ஏற்படுகிறதா? வலி தோன்றி சிறிது நேரத்தில் மறைந்து விடுகிறதா? இதற்கு காரணம் உங்களுக்கு முன்ஜென்மத்தில் ஏற்பட்ட காயமாகவோ அல்லது விபத்தாகவோ இருக்கலாம். இந்த ஜென்மத்திலும் அந்த காயத்தின் உணர்வை நீங்கள் இன்னும் நினைவு கூரலாம்.

உங்கள் சோல்மேட்டாக ஒருவரை அடையாளம் காண்பது

உங்கள் சோல்மேட்டாக ஒருவரை அடையாளம் காண்பது

உங்களின் முன்ஜென்ம வாழ்க்கையை நினைவுகூறும் ஒரு முக்கியமான வழி இதுவாகும். நேரம், இடம் மற்றும் தடைகளையும் தாண்டி ஒருவரை உங்களுக்கு பார்த்தவுடன் பிடித்தால் உங்களுக்கு முன்ஜென்மம் இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஒருவரை பார்த்தவுடன் உங்களுக்கு பிடித்துவிட்டால் அவர்கள் உங்களுடன் முன்ஜென்மத்தில் இருந்தே பழகியிருக்க வாய்ப்புள்ளது.

நீங்கள் பழைய ஆன்மாவாக உணர்ந்தால்

நீங்கள் பழைய ஆன்மாவாக உணர்ந்தால்

ஒருவேளை நீங்கள் பழைய ஆன்மாவாக உணர்ந்தால் உங்களுக்கு முன்ஜென்மம் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த தனித்துவமான உணர்வு உங்கள் ஆன்மாவின் வயதை பிரதிபலிக்கலாம். உங்கள் வயதை விட நீங்கள் புத்திசாலியாக உணர்ந்தாலோ அல்லது அதிக அனுபவசாலியாக இருந்தாலோ உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முன்ஜென்மம் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த புத்திக்கூர்மையும், அனுபவமும் உங்களை வாழ்வின் உயரத்திற்கு அழைத்துச் செல்லும்.

MOST READ: இந்த ராசிக்காரங்க மத்தவங்கள வெறுக்கிறதுக்காகவே பிறந்தவங்களாம்.... பார்த்து உஷாரா பழகுங்க...!

தவிர்க்க முடியாத பழக்கங்கள்

தவிர்க்க முடியாத பழக்கங்கள்

உணர்ச்சிகளின் இருண்ட பக்கமானது கட்டுப்பாடற்ற பழக்கவழக்கங்களாகும், அவை மக்களின் வாழ்க்கையை எடுத்துக்கொள்கின்றன. மேலும் அவை உங்களுடைய சமூக அடையாளமாக இருக்கலாம். தூங்கும்போது விளக்கை அணைக்காமல் தூங்குவது, வெளியே செல்வதற்கு முன் கதவை பத்துமுறை சோதிப்பது, வித்தியாசமான பொருட்களை சேகரிப்பது, சந்தேகத்துடன் பேசுவது போன்றவை உங்களுக்கு முன்ஜென்மத்தில் இருந்து வந்த பழக்கமாக இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs You May Have Had a Past Life

If you have these signs you may had a past life.
Story first published: Friday, August 23, 2019, 12:24 [IST]
Desktop Bottom Promotion