For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க கருப்பு கயிறு கட்டுவதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் இதுதானாம்! ஷாக் ஆகாதீங்க…!

கருப்பு கயிறு கை, கால், கழுத்து, இடுப்பு பகுதியில் கவசமாக அணியப்படுகிறது. சூனியம் செய்யும் அல்லது தீய நோக்கங்களைக் கொண்டவர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள மக்கள் பொதுவாக இதை அணிவார்கள்.

|

இந்தியா பல்வேறு மத நம்பிக்கையுள்ள ஒரு மக்களின் தேசமாக விளங்குகிறது. வெவ்வேறு மதங்கள் வெவ்வேறு நம்பிக்கைகளைக் கொண்டுள்ளன. குறிப்பாக தீமை மற்றும் எதிர்மறை சக்தியிலிருந்து விடுபடுவதற்கு ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு நம்பிக்கைகளை கொண்டுள்ளன. பெரும்பாலான மக்கள் கணுக்கால், கழுத்து, இடுப்பு அல்லது மணிக்கட்டில் கருப்பு கயிறு அணிந்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

significance-of-wearing-black-thread

இப்போதெல்லாம், சில பெண்கள் மற்றும் ஆண்கள் அதை ஸ்டைலாக தோற்றமளிக்க அணிந்துகொள்கிறார்கள், மற்றவர்கள் இதை ஒரு புனித கயிறாக கருதுகிறார்கள். இது அவர்களைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றலிலிருந்து அவர்களை பாதுகாக்கும். கருப்பு கயிறு அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று சிலர் நம்புகிறார்கள். கருப்பு கயிறை ஏன் அணிகிறோம்? அதை எப்படி அணிகிறோம்? அதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? என்று இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு கயிறு

கருப்பு கயிறு

இந்தியாவில், கருப்பு நிறம் என்பது தீங்கு விளைவிக்கும் என்று கருதப்படுகிறது. மேலும் எந்தவொரு புனித வேலையும் செய்யும்போது, பொதுவாக, வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு அல்லது சிவப்பு போன்ற வண்ணங்கள் விரும்பப்படுகின்றன. ஒரு புனித விழாவின் போது அல்லது எந்தவொரு மத வேலையும் செய்யும் போது கருப்பு நிற ஆடைகளை அணிந்தவர்களை நீங்கள் அரிதாகவே காண்பீர்கள். ஆனால், தீங்கு என்று நினைக்கும் கருப்பு கயிறை பலர் தங்கள் உடலில் அணிந்திருப்பார்கள். அது ஏன் என்று தெரியுமா?

MOST READ:உடலுறவில் இருமடங்கு இன்பம் வேண்டுமா? அப்ப இந்த பண்டைய கால செக்ஸ் முறையை பின்பற்றுங்க...!

சனிபகவான்

சனிபகவான்

இந்து மதத்தில், கருப்பு நிறம் நீதி மற்றும் தண்டனையின் கடவுளான சனிபகாவனுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. அவரவர் செய்த செயல்களின் அடிப்படையில் மக்களுக்கு வெகுமதி அல்லது தண்டனை வழங்குபவர் என்று கூறப்படுகிறது. மக்களிடையே உள்ள எதிர்மறை எண்ணங்களை தடுத்து, நம்பிக்கை, உற்சாகம் மற்றும் நேர்மறை ஆற்றலுடன் இறைவன் ஆசீர்வதிக்கிறார். எனவே ஒருவர் கணுக்கால் சுற்றி கருப்பு கயிறு அணியும்போது, அந்நபர் எதிர்மறை மற்றும் தீய சக்தியிலிருந்து விலகி இருக்கிறார்.

தற்காத்துக்கொள்ள பயன்படுத்துவது

தற்காத்துக்கொள்ள பயன்படுத்துவது

கருப்பு கயிறு கை, கால், கழுத்து, இடுப்பு பகுதியில் கவசமாக அணியப்படுகிறது. சூனியம் செய்யும் அல்லது தீய நோக்கங்களைக் கொண்டவர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள மக்கள் பொதுவாக இதை அணிவார்கள். இருப்பினும், ஒரு கருப்பு கயிறு அணிவது சில விஷயங்களை மனதில் வைத்து அணிந்தால் மட்டுமே நேர்மறையான முடிவுகளைத் தரும். கருப்பு கயிறு அணியும்போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி இங்கு காணலாம்.

ஒன்பது முடிச்சி

ஒன்பது முடிச்சி

கருப்பு கயிறை உங்கள் கணுக்காலில் கட்டும்போது ஒன்பது முடிச்சுகள் இருக்க வேண்டும். இந்த கயிறை பிரம முகூர்த்தத்தில் கட்டலாம் அல்லது சரியாக நண்பகல் 12 மணிக்கு கட்டலாம். சனிக்கிழமை இந்த கயிறை கட்டுவது நல்லது. அதுவும் வலது கணுக்காலில் தான் கருப்பு கயிறை கட்ட வேண்டும்.

MOST READ:காதலர்களே! காதலர் தினத்துக்கு இந்த ரொமாண்டிக்கான விஷயங்களை செய்து உங்க லவ்வர அசத்துங்க...!

புனிதாமாகும் கயிறு

புனிதாமாகும் கயிறு

கருப்பு கயிறை அணிவதற்கு முன், அதை சனிபகவானிடம் வைத்து பூஜை செய்து, துர்கா தேவியையும் ஆஞ்சிநேயரையும் மனதில் நினைத்து ராமஜெயம் உச்சரித்து கட்டலாம். இவ்வாறு செய்யும்போது கருப்பு கயிறு புனிதமாகி, நம்மை பாதுகாக்கிறது. இதற்காக, நீங்கள் சில பாதிரியார்கள் அல்லது ஜோதிட நிபுணர்களையும் கலந்தாலோசிக்கலாம்.

ஆபத்திலிருந்து பாதுகாக்கும்

ஆபத்திலிருந்து பாதுகாக்கும்

கருப்பு கயிறை நாம் கட்டியிருக்கும்போது, நம்மை அறியாமல் கீழே விழுந்தாலும், மிகப் பெரிய ஆபத்து நேராமல் பார்த்துக்கொள்ளும். மேலும், நீண்ட நாட்களாக குணமாகத நாள் பட்ட நோயால் பாதிக்கப்பட்டியிருந்தால் அல்லது உடல் நல கோளாறுகளுடன் இருந்தாலோ கருப்பு கயிறை கட்டிவந்தால் குணமாகும் என்று கூறுவார்கள்.

நேர்மறை ஆற்றல்

நேர்மறை ஆற்றல்

கழுத்தில் கருப்பு கயிறை கட்டும்போது, அது அந்த நபருக்கு ஆரோக்கியமும் நேர்மறை ஆற்றலும் கிடைக்க உதவுகிறது. உங்கள் கணுக்கால், இடுப்பு, கழுத்து அல்லது கையைச் சுற்றி கருப்பு நூலைக் கட்டும்போது, அதை 2, 4, 6 அல்லது 8 வட்டங்களில் கட்டிக் கொள்ளுங்கள்.

MOST READ:ஈஸியாக கிடைக்கும் இந்த காய்கறிகள் உங்கள் மலச்சிக்கல் பிரச்சனையை விரைவில் போக்குமாம்...!

மந்திரம் ஓத வேண்டும்

மந்திரம் ஓத வேண்டும்

கருப்பு கயிறு சனிபகவானை குறிக்கிறது. கிரக இயக்கங்கள் மற்றும் தாஷா (கிரக ஆளும் காலங்கள்) பகுப்பாய்வு செய்த பின்னரே ஒருவர் கருப்பு கயிறை அணிய வேண்டும். உங்கள் உடலில் கருப்பு கயிறைக் கட்டிய பின், ருத்ரா காயத்ரி மந்திரத்தை ஓதிக் கொள்ளுங்கள். மந்திரத்தை ஓதுவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் நீங்கள் தீர்மானிக்கலாம். இது மேலும் உங்களுக்கு நன்மை பயக்கும்.

கயிறு அணியக்கூடாது

கயிறு அணியக்கூடாது

ஏற்கனவே நீங்களை கை மணிகட்டில் அல்லது கழுத்தில் மஞ்சள், சிவப்பு அல்லது குங்குமப்பூ நிற கயிறு அணிந்திருந்தால், கைகளில் கருப்பு கயிறைக் கட்டக்கூடாது. கருப்பு கயிறை பருவமடைந்த பெண்கள் கட்டுவது நல்லது.

கண் திருஷ்டி

கண் திருஷ்டி

காலில் கருப்பு கயிறு கட்டியிருக்கும்போது, சனிபகவானின் பார்வை வேகத்தை குறைக்கும் சக்தி அந்த கயிறுக்கு உள்ளது. கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவதால் கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

significance of wearing black thread

Here we are talking about the significance of wearing black thread.
Desktop Bottom Promotion