For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த துளசி திருமணம் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் வரத்தை விரைவில் கொடுக்கும்

இந்து புராணங்களில் கூறியுள்ளபடி துளசி திருமணம் செய்வது குழந்தை இல்லா பெற்றோர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

|

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்கள் வாழ்க்கை முழுமை பெறுவது குழந்தை பிறந்த பிறகுதான். குழந்தைகள்தான் அவர்களின் வாழ்க்கைக்கான அர்த்தமாகவும், அவர்களின் நல்ல தாம்பத்யத்திற்கான அடையாளமாகவும் இருக்கிறார்கள். தம்பதிகளுக்கு மிகப்பெரிய குறை எனில் அது குழந்தை இல்லாத குறையாகத்தான் இருக்கும்.

Tulsi Vivah can work wonders for childless couples

இந்து மத நம்பிக்கைகளில் பல சடங்குகளும், பூஜைகளும் இந்த குறையை போக்குவதற்கு உள்ளது. அதில் மிகவும் முக்கியமானது துளசி கல்யாணமாகும். இந்த பதிவில் துளசி கல்யாணம் செய்வதன் அர்த்தம் என்ன அதனால் தம்பதிகளுக்கு கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துளசி திருமணம்

துளசி திருமணம்

இந்து புராணங்களில் கூறியுள்ளபடி துளசி திருமணம் செய்வது குழந்தை இல்லா பெற்றோர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும் என்று நம்பப்படுகிறது. துளசியுடன் இணைந்திருந்த பிருந்தாவின் ஆன்மா துளசி திருமணத்தன்று அந்த செடியில் குடியேறி தம்பதிகளை ஆசீர்வதிக்கும் என்று நம்பப்படுகிறது.

திருமண பொருட்கள்

திருமண பொருட்கள்

இந்த பூஜையின் பலன்களை முழுமையாக பெறுவதற்கு, ஒரு இந்து திருமணத்தில் என்னென்ன சடங்குகளை பின்பற்றுவார்களோ அவற்றை முடிந்த வரை பின்பற்றுங்கள். இந்த நிகழ்ச்சியானது உங்களின் மனதில் இருக்கும் வேண்டுதல்கள், உங்கள் உணர்வுகள் மற்றும் உங்களின் முழுமையான அர்ப்பணிப்பு என அனைத்தும் நிறைந்ததாக இருக்க வேண்டும்.

எந்த காரணத்திற்காகவும் துளசி இலைகளை பறிக்கக்கூடாது

எந்த காரணத்திற்காகவும் துளசி இலைகளை பறிக்கக்கூடாது

துளசி திருமண நாளன்று எந்த காரணத்தைக் கொண்டும் செடியில் இருந்து இலைகளை பறிக்கக் கூடாது. உங்கள் வீட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட துளசி செடிகள் இருந்தால் அதில் இது நீண்ட காலமாக இருக்கும் செடியோ அதைத்தான் துளசி திருமண சடங்கிற்கு பயன்படுத்த வேண்டும்.

MOST READ: தண்ணியடிச்சாலும் ஆரோக்கியமா வாழணுமா? இந்த மாதிரி குடிக்க கத்துக்கோங்க...!

மண்டப பகுதியை பசுசாணத்தைக் கொண்டு துடைக்கவும்

மண்டப பகுதியை பசுசாணத்தைக் கொண்டு துடைக்கவும்

தரைப்பகுதியை பசு சாணம் கொண்டு துடைப்பது மிகவும் புனிதமான ஒன்றாகும். தரையை நன்கு சுத்தம் செய்த பின் பசு சாணம் கொண்டு தரையை துடைக்கவும், அதற்குபின் சடங்குகள் முடியும்வரை அந்த இடத்தை அசுத்தப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

திருமண பொருட்களை கன்னி பெண்ணுக்கு தானமாக கொடுங்கள்

திருமண பொருட்களை கன்னி பெண்ணுக்கு தானமாக கொடுங்கள்

திருமணத்தில் உபயோகப்படுத்தப்பட்ட புடவைகள் மற்றும் சில பொருட்களை பெண்களுக்கு தானமாக கொடுத்து விட வேண்டும். குறிப்பாக கன்னி பெண்களுக்கு தானமாக கொடுப்பது நல்லது.

கன்னி பூஜை

கன்னி பூஜை

திருமண சடங்குகள் முடிந்த பிறகு கன்னி பூஜைக்கு ஏற்பாடு செய்யுங்கள். இந்த கன்னி பூஜையில் குறைந்தது எட்டு பெண்களாவது கலந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு புடவை, வளையல், குங்குமம் போன்றவற்றை வழங்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

துடைப்பத்தை உபயோகிக்காதீர்கள்

துடைப்பத்தை உபயோகிக்காதீர்கள்

பூஜை செய்து முடித்த மறுநாள் ஆண்ட இடத்தை துடைப்பம் கொண்டு சுத்தம் செய்வது புனிதமற்ற செயலாக கருதப்படுகிறது. எனவே அந்த இடத்தை தண்ணீரை கொண்டு துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். பொதுவாகவே துளசி இருக்கும் இடத்தை துடைப்பம் கொண்டு சுத்தம் செய்வது உங்கள் குடும்பத்திற்கு நல்லதல்ல. இது துளசியை அவமதிக்கும் செயலாகும்.

MOST READ: இந்த கோவில்களுக்குள் ஆண்கள் நுழையவேக் கூடாதாம்... இதில் மூன்று கோவில்கள் தென்னிந்தியாவில் உள்ளது...!

விளக்கேற்றுங்கள்

விளக்கேற்றுங்கள்

துளசி திருமணம் முடிந்த பிறகு அடுத்த மூன்று நாளுக்கு துளசி செடி அருகே விளக்கேற்றி வைப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். துளசியை உங்கள் மகளாக நினைத்து அந்த இடத்தில் விளக்கேற்றி வைக்கவும், அந்த பிரகாசமான ஒளி உங்கள் மகளின் நினைவுகள் என்றும் அது உங்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் என்பதன் அர்த்தம்தான் இது. இந்த பூஜை குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் வரத்தை விரைவில் வழங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tulsi Vivah can work wonders for childless couples

These traditional Tulsi Vivah can work wonders for childless couples.
Desktop Bottom Promotion