For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செல்வ வளம் பெருக வசந்த பஞ்சமி நாளில் மதுரை மீனாட்சியை வணங்குங்கள்..!

சியாமளா நவராத்திரி இன்று முதல் அனுஷ்டிக்கப்படுகிறது. அனைத்து சக்தி ஸ்தலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது. சியாமளாவின் அம்சமாக திகழும் மதுரை மீனாட்சி அம்மனுக்கு சியாமளா நவராத்திரி விஷேசம்.

|

சியாமளா நவராத்திரி இன்று முதல் அனுஷ்டிக்கப்படுகிறது. வட இந்தியாவில் இதனை மகா குப்த நவராத்திரி என்று அழைக்கின்றனர். அனைத்து சக்தி ஸ்தலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது. தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. தை அமாவாசை கழிந்த மறுநாள் இன்று பிரதமையிலிருந்து நவமி வரை 25.01.2020 - 02.02.2020 வரை அம்பிகையை, பூரண கலசத்தில் ஆவாஹனம் செய்து, பூஜிக்கலாம். சியாமளா நவராத்திரியில் ஐந்தாவது தினமான வசந்த பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவி திருஅவதாரம் செய்ததாக ஐதீகம். எனவே, தென்னாட்டில் விஜயதசமி போல், வடநாட்டில் வசந்த பஞ்சமி அன்று வித்யாரம்பம் செய்கிறார்கள். அன்றைய தினம் அம்பிகையை வழிபடுபவருக்கு, கலைகள் அனைத்திலும் நிறைந்த பேராற்றல் கிடைக்கும் செல்வ வளம் பெருகும்.

Shyamala Navarathri or Magha Gupta Navratri Begins On January 25

சியாமளா' என்றும், 'ஸ்ரீ ராஜ ச்யாமளா என்றும், ஸ்ரீமாதங்கி என்றும், 'மஹாமந்திரிணீ' என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை, மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள். தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள். கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள். வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால்'மந்திரிணீ' என்று அறியப்படுபவள். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள். இந்த அம்பிகையைப் போற்றும் விதமாகவே ச்யாமளா நவராத்திரியைக் கொண்டாடி வழிபடுகிறோம்.

MOST READ: ரத சப்தமி நாளில் 7 எருக்கம் இலைகளை வைத்து நீராட வேண்டும் ஏன் தெரியுமா?

ஸ்ரீ ராஜ மாதங்கி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியால், தன் கரும்பு வில்லில் இருந்து உருவாக்கப்பட்டவள். அம்பிகையின் பிரதிநிதியாக, ராஜ்ய பாரம் நடத்துபவள். அம்பிகையின் முத்ரேஸ்வரியாக இருப்பவள். இதை ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், வெவ்வேறு விதமான புராணங்களிலும் தாந்தீரிக முறைகளிலும் வெவ்வேறு விதமாக அம்பிகையின் திருவுருவம் விவரிக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பச்சை நிறமே பச்சை நிறமே

பச்சை நிறமே பச்சை நிறமே

சில நூல்களில், ஸ்ரீ சியாமளா, பச்சை வண்ணம் உடையவளாக, சிரசில் சந்திரகலையை அணிந்தவளாக, நீண்ட கேசமும் புன்முறுவல் பூத்த அழகுத் திருமுகமும் உடையவளாக, இனிமையான வாக்விலாசம் உடையவளாக, ஆகர்ஷணம் பொருந்திய திருவிழிகள் உடையவளாக, கடம்ப மாலையும், பனை ஓலையினாலான காதணி மற்றும் பல்வேறு ஆபரணங்கள் தரித்து தாமரை மலர் மீது அமர்ந்திருப்பவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள்.

மதுரை மீனாட்சி

மதுரை மீனாட்சி

அம்பிகையின் மரகதப் பச்சை வண்ணம், ஞானத்தைக் குறிக்கிறது. வித்யாகாரகனான புத பகவானுக்கு உரிய நிறமும் பச்சையே. வீணை, சங்கீத மேதா விலாசத்தையும், கிளி, பேச்சுத் திறமை வாய்க்க அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும் ஆத்ம ஞானத்தையும் குறிக்கிறது. மலரம்பு கலைகளில் தேர்ச்சியையும், பாசம் ஈர்க்கும் திறனையும், அங்குசம் அடக்கியாளும் திறனையும், கரும்பு உலகியல் ஞானத்தையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது. சியாமளாவின் அம்சமாக திகழும் மதுரை மீனாட்சி அம்மனுக்கு சியாமளா நவராத்திரி விஷேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு நவராத்திரிகள்

நான்கு நவராத்திரிகள்

இந்து மதத்தின் சிறப்பு மிக்க சாக்த வழிபாட்டில் அன்னை தெய்வங்களை போற்றும் விதமாக நவராத்திரி வழிபாடுகள் சிறப்புமிக்கதாகும். பருவ காலங்களுக்கு ஏற்ப ஒன்பது நாட்களை நவராத்திரிகளாக கொண்டு சக்தி தெய்வங்களை வணங்குவது மரபு. ஒவ்வொரு வருடமும் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் வகைகள் வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வஸந்த நவராத்திரி. இது பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் இந்த நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தை மாத சியாமளா நவராத்திரி

தை மாத சியாமளா நவராத்திரி

தை மாதத்தில் கொண்டாடப்படுவது ச்யாமளா நவராத்திரி. ச்யாமளா' என்றும், 'ஸ்ரீ ராஜ ச்யாமளா என்றும், ஸ்ரீமாதங்கி என்றும், 'மஹாமந்திரிணீ' என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை, மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள். தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள். கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள். வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால்'மந்திரிணீ' என்று அறியப்படுபவள். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள். இந்த அம்பிகையைப் போற்றும் விதமாகவே ச்யாமளா நவராத்திரியைக் கொண்டாடி வழிபடுகிறோம்.

அறிவின் தேவதை

அறிவின் தேவதை

கடல்போல் விரிந்த ஞானத்திற்கும், உள்முகமான அறிவாற்றலுக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. மனதில் தோன்றுவதை சாமர்த்தியமாக வெளிப்படுத்தும் நல்லாற்றலும், எதையும் கிரகிக்கும் திறனும், கிரகிப்பதை பிறர் விரும்பும் வண்ணம் வெளிப்படுத்தும் திறனும், ஸ்ரீமாதங்கியின் அருளாலேயே சித்திக்கும். நுண்ணறிவுக்கும் அதை வெளிப்படுத்தும் திறனுக்கும் மனதை அறிவின் மூலம் கட்டுப்படுத்தி அம்பிகையிடம் லயிக்கச் செய்யும் ஆற்றலுக்கும் அம்பிகையின் அருள் அவசியம்.

மதுரை மீனாட்சி

மதுரை மீனாட்சி

ஒருவரின் ஜாதகத்தில் சூரியனும், புதனும் இணைந்து அமையப் பெறுவது புதாத்திய யோகமாகும். இந்த யோகம் அமையப் பெற்றவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகமாகும். நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் ஏற்படும். புதன் சூரியனுக்கு பின் அஸ்தங்கமாகாமல் ஏற்படும் புத ஆதித்ய யோகமே சிறந்த பலனளிக்கிறது. மேலும் சூரியனை கடந்து புதன் நிற்கும்போது அது சுபவெசி யோகமாகவும் ஆகிறது. இன்று முதல் ஆரம்பிக்கும் ச்யாமளா நவராத்திரி நன்னாளில் ச்யாமளா தேவியை வணங்கி கல்வி கடவுளான சரஸ்வதியின் அருளோடு சரஸ்வதி யோகத்தையும் பெறலாம். வித்யாகாரகனின் அம்சமாக திகழும் மதுரை மீனாக்‌ஷி அம்மன் ராஜ மாதங்கி எனும் ச்யாமளாவாகவும் திகழ்கிறாள். மதுரை மீனாக்‌ஷியை வணங்கிவந்தால் புதனால் ஏற்படும் தோஷங்கள் நீங்குவதோடு சிறந்த கல்வி மற்றும் கலை ஞானமும் பெருகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shyamala Navarathri or Magha Gupta Navratri Begins On January 25

Shyamala Navarathri is celebrated from today is on January 25 Saturday for 9 days. Shyamala navarathri the prayers and poojas on these 9 days gives more beneficent blessings on children's education and fulfillment of all wishes.
Story first published: Saturday, January 25, 2020, 15:46 [IST]
Desktop Bottom Promotion