Latest Updates
-
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
விருச்சிகத்தில் உதயமான சுக்கிரன்: இந்த ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது!
சுபகிரகமான சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும். இப்போது விருச்சிக ராசியில் உதயமாகியுள்ள சுக்கிரனால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறுகிறார்கள் என்பதைக் காண்போம்.
ஜோதிடத்தில் அழகு, காதல், ஆடம்பரம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன், கடந்த அக்டோபர் மாதத்தில் சிம்ம ராசியில் அஸ்தமனமானார். இந்நிலையில் இந்த சுக்கிரன் 2022 நவம்பர் 25 ஆம் தேதி மாலை 5.21 மணிக்கு விருச்சிக ராசியில் உதயமானார். சுக்கிரன் உதயமானதால், சுப காரியங்களுக்கு இருந்த தடை முடிவுக்கு வரும். சுக்கிரன் ஆளும் ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

சுபகிரகமான சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமானதாக இருக்கும். இப்போது விருச்சிக ராசியில் உதயமாகியுள்ள சுக்கிரனால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறுகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
சுக்கிரன் மேஷ ராசியின் 8 ஆவது வீட்டில் உள்ளார். இதனால் சுக்கிரனின் செல்வாக்கு இந்த ராசிக்காரர்களுக்கு பல எதிர்பாராத நற்பலன்களை வழங்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். திருமணம் தொடர்பான விஷயங்கள் சற்று தாமதமாகும். காதல் விஷயங்களில் அலட்சியமாக இருப்பீர்கள். வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 7 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். திருமண பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இனி நல்ல காலமாக இருக்கும். இக்காலத்தில் ரகசிய எதிரிகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 6 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் நீதிமன்ற வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். வெளிநாடு செல்ல விரும்புவோரின் முயற்சிகள் வெற்றி பெறும். மாணவர்கள் கல்விக்காக வெளியூர் செல்ல முயற்சித்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். ஆடம்பர பொருட்களுக்கு அதிக பணத்தை செலவழிப்பீர்கள்.

கடகம்
கடக ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். காதல் திருமணம் செய்ய விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது. இக்காலத்தில் வீட்டில் உள்ளோரின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இக்காலம் வெற்றிகரமானதாக இருக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். வீடு அல்லது வாகனம் வாங்க விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வளர அனுமதிக்காதீர்கள்.

கன்னி
கன்னி ராசியின் 3 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். எனவே கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் உங்களின் முடிவுகளும், செயல்களும் பாராட்டப்படும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணமான புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்புள்ளது. வெளிநாட்டு குடியுரிமைக்கு விண்ணப்பிக்க இது ஒரு நல்ல நேரம்.

துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் நிதி நிலை வலுபெறும். சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். உங்களின் பேச்சால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். ஆக்கப்பூர்வமான செயல்களில் வெற்றி கிடைக்கும். எந்த ஒரு பெரிய வேலையையும் தொடங்க அல்லது புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்பினால், அதற்கு கிரக நிலை சாதகமாக இருக்கும். வேலையில் எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வேலைகள் நிறைவேறும். சமூக ரீதியாக கௌரவம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் வெற்றி பெறும். வீடு அல்லது வாகனம் வாங்க விரும்பினால் கிரக நிலை சாதகமாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 12 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இக்காலத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆடம்பர பொருட்களுக்கு அதிக பணம் செலவழிப்பீர்கள். வெளியூர் பயணம் சாதகமாக இருக்கும். வெளிநாடு செல்ல முயற்சித்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். மாணவர்கள் இக்காலத்தில் வெற்றி பெற அதிக முயற்சியை எடுக்க வேண்டும்.

மகரம்
மகர ராசியின் 11 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இக்காலத்தில் உங்களுக்கு வெற்றிகள் குவியும். உங்களின் உத்திகள் நல்ல பலனைத் தரும். சில பெரிய வேலைகளைத் தொடங்க அல்லது புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட இக்காலம் சாதகமாக இருக்கும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது.

கும்பம்
கும்ப ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும் மற்றும் வெற்றி கிடைக்கும். கூட்டுத் தொழிலை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் வெற்றி பெறும். சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும்.

மீனம்
மீன ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் மீன ராசிக்காரர்கள் பெரும் வெற்றியைப் பெறுவார்கள். நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் சேவை மற்றும் குடியுரிமைக்கான முயற்சிகள் வெற்றி பெறும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களின் பொறுப்புக்களை நிறைவேற்றி வெற்றி காண்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications