Latest Updates
-
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா? -
கஜலக்ஷ்மி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க... வீட்ல எல்லொரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...! -
உயர் இரத்த அழுத்தம் இருக்கா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.. -
2026 IPL போட்டிகளில் விளையாடப்போகும் டாப் 10 வயதான வீரர்கள்... யாரெல்லாம் விளையாடப்போறாங்க பாருங்க...! -
மணமணக்கும்.. மட்டன் நோன்பு கஞ்சி - சிம்பிளா குக்கரில் எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
1 கப் துருவிய தேங்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா தேங்காய் சாதம் செய்யுங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்! -
மீன ராசியில் உதயமாகும் செவ்வாய்: ஏப்ரலில் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது... -
Eid-ul-Fitr 2026: இந்தியாவில் ரம்ஜான் பண்டிகை எந்த நாளில் கொண்டாடப்பட போகிறது? மார்ச் 20 அல்லது மார்ச் 21?
சுக்கிரன் மகரத்திற்கு செல்வதால் இந்த ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கணுமாம்.. உங்க ராசி இருக்கான்னு பாருங்க...
சுக்கிரன் தனது தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு 2021 டிசம்பர் மாதம் 08 ஆம் தேதி அன்று நள்ளிரவு 12.56 மணிக்கு நுழைகிறார். வேத ஜோதிடத்தின் படி, சுக்கிரனின் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
வேத ஜோதிடத்தில் சுப கிரகமாக கருதப்படுபவர் தான் சுக்கிரன். இந்த சுக்கிரன் ஒருவருக்கு அனைத்து வகையான சுகபோகங்களையும் வழங்குபவராக கூறப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் சாதகமான இடத்தில் இருந்தால், அவர்களின் இல்லற வாழ்க்கை சந்தோஷமாகவும், அற்புதமாகவும் இருக்கும்.

இத்தகைய சுக்கிரன் தனது தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு 2021 டிசம்பர் மாதம் 08 ஆம் தேதி அன்று நள்ளிரவு 12.56 மணிக்கு நுழைகிறார். வேத ஜோதிடத்தின் படி, சுக்கிரனின் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது மகரம் செல்லும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்கள் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
சுக்கிரனின் பெயச்சியால் தொழிலதிபர்கள் புதிய முயற்சிகளைப் பெறலாம். இக்காலத்தில் புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும் மற்றும் கனவுகளையும் அடைவீர்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அழகான பிணைப்பு இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மற்றும் இக்காலத்தில் மனம் அமைதியுடன் இருக்கும். இக்காலத்தில் உங்கள் சேமிப்பு உங்கள் முதலீட்டையும் பாதிக்கும். உங்கள் தாயுடன் உணர்வுகளை வலுவாக பகிர்ந்து கொள்வீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! உங்களிடம் மோசமான தகவல் தொடர்பு மற்றும் சரியாக முடிவெடுக்கும் திறன் இல்லாததால், உங்கள் வாழ்க்கைத் துணை சந்தோஷமாக இருக்கமாட்டார்கள். இக்காலத்தில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்தியைப் பெறுவீர்கள். மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல நினைத்தால், அதில் வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். திருமணமாகாதவர்கள் இக்காலத்தில் தங்கள் வாழ்க்கைத் துணையைக் காணலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! உங்களின் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். உங்கள் மூதாதையர் சொத்துக்களை விற்று செல்வத்தைப் பெறுவீர்கள். இக்காலத்தில் தொழிலில் வளர்ச்சி பெறுவதோடு, அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். வருமான உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. இக்காலத்தில் பயணத்தையும் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தொடர்ச்சியான உடல்நல பிரச்சனைகளால் கவலைப்படுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தவறான புரிதல்கள் ஏற்படுவதோடு, அது பெரிய பிரச்சனையையும் ஏற்படுத்தலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களே! உங்கள் அலுவலகத்தில் பணிச்சுவை அதிகமாக இருக்கும். எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டாலும் அதற்கான பலன் கிடைக்காது. இக்காலத்தில் கவனம் மற்றும் பொறுமையாக இருக்க வேண்டும். தவறான புரிதல்களால் வாழ்க்கைத்துணையுடன் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வியாபாரிகள் தங்கள் கூட்டாளிகளுடன் சுமுகமான உறவைப் பேணுவார்கள். குடும்ப பிரச்சனைகளைத் தீர்க்கும் போது அமைதியாக இருங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த காலத்தில் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்த வேண்டும். நிதியைப் பொறுத்தவரை, செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். தேவையில்லாமல் செலவுகளை செய்யாதீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் அதிக கவனம் செலுத்துங்கள். உங்கள் துணையுடன் தவறான தொடர்பு காரணமாக உங்களுக்கு சில பிரச்சனைகள் வரலாம். மாணவர்கள் படிப்பில் சில தடைகளை சந்திக்கலாம் மற்றும் புதிய படிப்பில் சேர மறுபரிசீலனை செய்யக்கூடும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இக்காலத்தில் நீங்கள் ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உணவுப் பழக்கங்களை கவனித்து சரியான பின்பற்றுங்கள். இக்காலத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்கள் தங்களின் கல்வித் திட்டங்களில் சிறப்பாக செயல்படுவார்கள். செலவுகள் திடீரென்று அதிகரிக்கும். இக்காலத்தில் உங்களின் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களே! நீங்கள் உங்கள் பணியிடத்தில் சில சவால்களை சந்திப்பீர்கள். முதலீடுகளில் இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களால் தங்கள் படிப்பில் கவனத்தை செலுத்த முடியாமல் அவதிப்படுவார்கள். சில பழைய ஆரோக்கிய பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பிக்கும். சொந்த மற்றும் தொழில் வாழ்க்கையில் பணிச்சுமை அதிகரிக்கும். இதுவே இக்காலத்தில் உங்களின் மன அழுத்தம் மற்றும் கவலைக்கு காரணமாக இருக்கலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இக்காலத்தில் உங்கள் எதிரிகள் உங்களுக்கு தொல்லைகளைக் கொடுக்கலாம். தொற்றுகளைத் தவிர்க்க உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பணியிடத்தில் புதிய தொடர்புகளை உருவாக்குவீர்கள். இக்காலத்தில் பயணத்திற்கு வாய்ப்புள்ளது. மேலும் ஏற்ற இறக்க மனநிலையால் அவதிப்படுவீர்கள். இக்கால கட்டத்தில் உங்களின் பொழுதுபோக்கு அல்லது திட்டம் அல்லது விருப்பமான ஏதாவது ஒன்றில் கவனத்தை செலுத்துங்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இக்காலத்தில் உங்களின் வேலைகள் அனைத்தும் தாமதமாகலாம். உங்களின் செலவுகளைக் கவனிக்க அறிவுறுத்தப்படுகிறது. திருமண வாழ்க்கைக்கு நல்ல காலமாக இருக்கும். சிறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வழக்காமன சோதனைகளை தவறாமல் செய்ய வேண்டும். மாணவர்கக்கு இக்காலம் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் படிப்பில் இன்னும் அதிக கவனத்தை செலுத்த வேண்டும்.

மகரம்
சுக்கிரன் மகர ராசிக்கு வருவதால், இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாகும் மற்றும் விரும்பிய பலனைப் பெறுவீர்கள். இக்காலத்தில் உறவுகள் நன்றாக இருக்கும். உறவில் இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணை சொல்வதை கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அது எதிர்மறையான உணர்வுகளை உருவாக்கும். துணையின் பேச்சைக் கேட்டால் அது பல பிரச்சனைகளை தவிர்க்க உதவும். பெற்றோர்கள் உங்களின் நடத்தையால் சந்தோஷப்படுவார்கள். ஃபிட்டாக இருக்க தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இக்காலத்தில் நீங்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழ பல விஷயங்களில் ஆடம்பர செலவுகளை செய்வீர்கள். இக்காலத்தில் நீங்கள் சில செல்வத்தையும் பெறலாம். தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, அலுவலகத்தில் வேலை பரபரப்பாக இருக்கும். இக்காலத்தில் வெற்றிக்காக கடினமாக உழைக்க வேண்டும். ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் இருக்கும். அதற்காக மருந்து மாத்திரைகளுக்காக செலவுகளையும் செய்ய வேண்டியிருக்கும். இக்காலத்தில் மற்றவர்களை சந்திக்கும் போது உங்களின் நடத்தையை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மீனம்
மீன ராசிக்காரர்களே! இக்காலத்தில் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க ஒரு அனுபவசாலியின் ஆலோசனையைப் பெற வேண்டும் மற்றும் இது உங்களுக்கு லாபகரமானதாகவும் இருக்கும். இக்காலத்தில் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சட்ட விஷயங்கள் தாமதமாகலாம். ஆனால் அதற்கு கவலைப்பட தேவையில்லை. இக்கால கட்டத்தில் பயணத்திற்கு வாய்ப்புள்ளது. கனவுகளை அடைய மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏழை மக்களுக்காக செலவுகளை செய்வீர்கள். முக்கியமாக, இக்காலத்தில் நீங்கள் நிம்மதியாகவும், அமைதியாகவும் உணர்வீர்கள்.



Click it and Unblock the Notifications











