For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதுப்பெண்ணை ஏன் வலது காலை எடுத்து வச்சு உள்ளே வா என்று சொல்கிறார்கள் தெரியுமா?

நம்முடைய பாதமே செல்வம் தரும் ஸ்ரீ மஹாலட்சுமி பாகம் ஆகும். இந்த பாதத்திற்கு மட்டும் தனி மரியாதை உண்டு, நம் கால் மற்றவர் மேல் பட்டு விட்டாலே அவரை தொட்டு வணங்குவோம், அவ்வாறு செய்யாமல் அவமதிப்பாய் இருந்தா

|

நீங்க கோடீஸ்வரர் ஆக ஆசைப்படுறீங்களா? ரொம்ப சிம்பிள் உங்க பாதங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்க. பாத சுத்தம் ஆரோக்கியம் மட்டுமல்ல அன்னை மகாலட்சுமியை உங்களிடம் வசியப்படுத்தும். வலது பாதத்தில் நாராயணன் சகிதமாக அன்னை மகாலட்சுமி குடியிருக்கிறார் எனவேதான் தம்பதி சகிதமாக வீட்டிற்குள் இருவரும் நுழைய வேண்டும் என்று புதுப்பெண்ணை வலது காலை எடுத்து வைத்து உள்ளே வா என்று அழைக்கின்றனர்.

Shocking Facts About Goddess Lakshmi No One Knows

லட்சுமி என்றாலே அழகு என்று தான் பொருள். எல்லா அழகான இடங்களிலும் லட்சுமி வாசம் செய்கிறாள். நிறைந்து நிற்கும் நெல் வயல், சுத்தமான மாட்டுத் தொழுவம், நீர் நிறைந்த ஆறு, குளங்கள், மகிழ்ச்சியான வீடு என இயற்கை அழகு கொஞ்சும் இடங்கள் எல்லாம் அன்னை இருக்கும் இடங்கள்தான். சுத்தமான பாதத்திலும் அன்னை மகாலட்சுமி வசிக்கிறார். எனவேதான் பசுவிற்கு பூஜை செய்வது போல பாதங்களுக்கும் பூஜை செய்கின்றனர்.

என் சாண் உடம்பிற்கு சிரசே தலைமை என்றாலும் பாதமே பூஜையை பெரும் சிறப்பு பெற்றதாகும், இந்த பாதம் மூவுலகையும் அளந்த பெருமையும். பாதம் உலகை ஆண்ட பெருமையும் புராணங்களில் படித்திருப்போம், ஆக இந்த பாதத்திற்கு இவ்வளவு மரியாதை ஏனெனில் அதுவே செல்வம் தரும் யோகம் தரும் மகாலட்சுமி குடிகொள்ளும் பாகமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shocking Facts About Goddess Lakshmi No One Knows

Goddess Lakshmi is the deity of wealth, which brings ego into any soul. Lakshmi represents matter or material wealth of this world.The real bond between God and any soul is only master and servant as per Madhva. As per the old tradition, the wife serves her husband like a servant serving the master.
Story first published: Thursday, December 19, 2019, 18:36 [IST]
Desktop Bottom Promotion