Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
சனி வக்ர நிவர்த்தியால் இந்த 5 ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பிக்குது.. உங்க ராசி இதுல இருக்கா?
மகர ராசியில் வக்ர நிலையில் இருக்கும் சனி, 2022 அக்டோபர் 23 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து, நேர் பாதையில் பயணிக்க தொடங்குகிறார். சனி வக்ர நிவர்த்தி அடைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் ஆரம்பிக்கிறது?
நீதியின் கடவுளாக கருதப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் பாரபட்சம் பாராமல் ஒருவரில் செயல்களுக்கு ஏற்ப பலனை வழங்குகிறார். சனி மெதுவாக நகரும் கிரகம். இது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டுகள் ஆகும். சனி ஒரு சுழற்சியை முடிக்க சுமார் 30 ஆண்டுகள் ஆகும். இந்நிலையில் சனி பகவான் 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு சென்றார். பின் ஜூன் 05 ஆம் தேதி கும்பத்தில் வக்ரமாகி, ஜுலை 12 ஆம் தேதி வக்ர நிலையில் மகரத்தை அடைந்தார்.

மகர ராசியில் வக்ர நிலையில் இருக்கும் சனி, 2022 அக்டோபர் 23 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து, நேர் பாதையில் பயணிக்க தொடங்குகிறார். சனி வக்ர நிவர்த்தி அடைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் ஆரம்பிக்கிறது என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் வியாபாரம் செய்பவர்களுக்கு சனி பகவானால் நற்பலன்கள் அதிகமாக கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதே வேளையில் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும் மற்றும் பண வரவும் கூடும்.

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இதுவரை இந்த ராசிக்காரர்கள் சந்தித்து வந்த கஷ்டங்கள் நீங்கும். வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் உங்களின் கௌரவமும், மரியாதையும் அதிகரிக்கும். முக்கியமாக இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 4 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். இக்காலகட்டத்தில் அதிக நற்செய்திகளைப் பெறுவார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகளால் நற்செய்திகள் வர வாய்ப்புள்ளது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். எனவே சனி பகவானின் அருளால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். எந்த ஒரு வேலையைத் தொடங்கினாலும், அதன் முடிவு சாதகமாக இருக்கும். முதலீடு செய்திருந்தால், அதிலிருந்து நல்ல பலன் கிடைக்கும். திருமணமானவர்களின், திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதன்ல் சனி பகவான் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைத் தருவார். இதுவரை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து விடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் என இரண்டிமே நல்ல வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
