For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சனி தோஷம் நீங்கணுமா? அப்ப சனி ஜெயந்தி அன்று காலில் கருப்பு கயிற்றை இப்படி கட்டுங்க...

பொதுவாக கருப்பு நிறம் சனி பகவானுக்கு பிடித்த நிறம். சனி ஜெயந்தி அன்று காலில் கருப்பு நிற கயிற்றினை கட்டினால் சனி தோஷம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

|

ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாத அமாவாசை நாளன்று சனி ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மே 30 ஆம் தேதி திங்கட்கிழமை, அதாவது இன்று சனி ஜெயந்தி ஆகும். சனி பகவான் பிறந்த நாளான சனி ஜெயந்தி அன்று ஒருசில விஷயங்களை செய்வதன் மூலம் சனி பகவானை மகிழ்விக்கலாம். குறிப்பாக ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள் அல்லது சனியின் தாக்கத்தைக் கொண்டவர்கள் சனி ஜெயந்தி நாளில் கண்டிப்பாக ஒருசில விஷயங்களை செய்ய வேண்டும். அதில் ஒன்று தான் கருப்பு நிற கயிற்றை அணிவது.

Shani Jayanti 2022: Tie The Black Thread in Feet To Improve Shani Rahu and Ketu Planets

ஜோதிடத்தின் படி, கருப்பு நிற கயிற்றை கட்டுவது பல நன்மைகளைத் தரும். பொதுவாக கருப்பு நிறம் சனி பகவானுக்கு பிடித்த நிறம். சனி ஜெயந்தி அன்று காலில் கருப்பு நிற கயிற்றினை கட்டினால் சனி தோஷம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை. இப்போது சனி ஜெயந்தி நாளன்று ஏன் கருப்பு நிற கயிற்றை கட்ட வேண்டும் மற்றும் எந்த முறையில் காலில் கயிற்றினை கட்ட வேண்டும் என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சித்தி யோகம்

சித்தி யோகம்

2022 ஆம் ஆண்டின் வைகாசி மாதம் அமாவாசையானது மே 29 ஆம் தேதி மதியம் 2.54 மணிக்கு தொடங்கும். ஆனால் உதய திதி காரணமாக சனி ஜெயந்தி மே 30 ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சித்தி யோகம் உருவாகிறது. சித்தி யோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுவதால், இந்நாள் மிகவும் புனிதமானது. இந்த சித்தி யோகம் சனி ஜெயந்தி அன்று காலை 07.12 மணிக்கு உருவாகி, அந்நாள் முழுவதும் இருக்கும். அதே வேளையில், சுகர்ம யோகம் காலை முதல் 11.39 நிமிடங்கள் வரை இருக்கும்.

மே 30 ஆம் தேதி சனி ஜெயந்தியுடன், வட சாவித்திரி விரதம் மற்றும் சோமவதி அமாவாசையும் கொண்டாடப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் ஒருவர் சித்தி யோகத்தில் கருப்பு நிற கயிற்றைக் காலில் கட்டினால், விரைவில் சனி தோஷத்தில் இருந்து விடுபடுவார்.

கருப்பு நிற கயிற்றைக் கட்டுவது எப்படி?

கருப்பு நிற கயிற்றைக் கட்டுவது எப்படி?

தற்போது பெரும்பாலான பெண்கள் கருப்பு நிற கயிற்றை காலில் கட்டுகிறார்கள். ஆனால் கருப்பு நிற கயிற்றை சரியான முறையில் கட்டினால் தான், அதன் முழு பலன் கிடைக்கும். கருப்பு நிற கயிற்றினால் சனி தோஷம் மட்டுமின்றி, ராகு-கேதுவின் தோஷங்களும் நீங்கும். மேலும் கருப்பு நிற கயிற்றை காலில் மட்டும் தான் கட்ட வேண்டும் என்பதில்லை, விருப்பமுள்ளவர்கள் கை, கழுத்து போன்ற பகுதிகளிலும் கட்டிக் கொள்ளலாம்.

ஒருவேளை உங்களுக்கு கால்களில் அடிக்கடி வலி வருமானால், இடது காலில் ஒரு கருப்பு நிற கயிற்றினைக் கட்டுங்கள். வயிற்று வலியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள், கால் விரலில் கருப்பு நிற கயிற்றினைக் கட்ட வேண்டும். தீய மற்றும் எதிர்மறை சக்திகளின் விளைவுகளைத் தவிர்க்க கருப்பு நிற கயிறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கருப்பு நிற கயிறு நேர்மறை ஆற்றலைக் கொண்டது

கருப்பு நிற கயிறு நேர்மறை ஆற்றலைக் கொண்டது

ஜோதிட சாஸ்திரத்தின் படி, கருப்பு நிற கயிற்றினை உடலின் எந்த பகுதியில் கட்டியிருந்தாலும், உடலில் நேர்மறை ஆற்றல் பாயும். இது மட்டுமின்றி, காலில் கட்டியிருந்தால், சனி, ராகு, கேது போன்ற கிரகங்களின் கோபத்தில் இருந்து விடுபடலாம். முக்கியமாக சனி தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகள் விலகும்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

குழந்தைகளுக்கு கருப்பு நிற கயிற்றினை கட்டினால், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

நிதி பிரச்சனை நீங்கும்

நிதி பிரச்சனை நீங்கும்

சனி ஜெயந்தி அன்று காலில் கருப்பு நிற கயிற்றினைக் கட்டுவது மிகவும் நல்லது. குறிப்பாக நாளன்று வலது காலில் கருப்பு நிற கயிற்றினைக் கட்டுவது ஐதீகம். இதன் விளைவாக ஒருவரின் நிதி பிரச்சனைகள் நீங்கி, நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். மேலும் வீடு செல்வ செழிப்போடு சிறப்பாக இருக்கும்.

கருப்பு நிற கயிற்றினை அணியும் போது நினைவில் கொள்ள வேண்டியவைகள்:

கருப்பு நிற கயிற்றினை அணியும் போது நினைவில் கொள்ள வேண்டியவைகள்:

* கருப்பு நிற கயிற்றினை அணியும் முன், அதை கடவுளின் முன் வைத்து பூஜை செய்த பின்னரே அணிய வேண்டும்.

* அதன் முன் ஜோதிடத்தின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

* கருப்பு நிற கயிற்றினை கட்டுபவர் ருத்ர காயத்ரி மந்திரத்தை சொல்ல வேண்டும்.

* சொல்ல வேண்டிய மந்திரம் - ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹ் தன்னோ ருத்ரஹ் பிரச்சோதயாத்॥

* கருப்பு நிற கயிற்றினை கட்டுபவர்கள், உடலின் பிற பகுதிகளில் வேறு எந்த நிற கயிற்றினையும் கட்டியிருக்கக்கூடாது.

* சனி ஜெயந்தி அன்று கட்ட முடியாதவர்கள், கருப்பு நிற கயிற்றினை சனிக்கிழமைகளில் கட்டுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shani Jayanti 2022: Tie The Black Thread in Feet To Improve Shani Rahu and Ketu Planets

Shani Jayanti 2022 Tie The Black Thread in Feet To Improve Shani Rahu and Ketu Planets, Read on to know more...
Story first published: Monday, May 30, 2022, 11:51 [IST]
Desktop Bottom Promotion