Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
சனி பகவானின் கோபத்தைக் குறைக்க சனி ஜெயந்தி அன்று ஒவ்வொரு ராசிக்காரரும் செய்ய வேண்டியவைகள்!
இந்த ஆண்டு சனி ஜெயந்தி ஜூன் 10 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் ஒருசில செயல்களை செய்து வந்தால், நிச்சயம் சனி பகவானை மகிழ்விக்கவும், அவரது அருளைப் பெறவும் முடியும்.
சனி ஒருவரது ஜாதகத்தில் பெரும் ஆதிக்கத்தைக் கொண்ட ஒரு கிரகம். சனியின் ஆசியும், சாபமும் ஒருவரது செயல்களைப் பொறுத்தே உள்ளது. உலகில் பிறந்த எவரும் சனியின் ஆதிக்கத்தில் இருந்து தப்ப முடியாது. ஒருவருக்கு நடக்கும் நல்லது அல்லது கெட்டது எல்லாம் அவர்களின் செயல்களை வைத்தே சனி பகவான் அவர்களுக்கு தருகிறார்.

இப்படிப்பட்ட சனி பகவான் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை அன்று தான் பிறந்தார். அந்நாள் தான் சனி ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சனி ஜெயந்தி ஜூன் 10 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் ஒருசில செயல்களை செய்து வந்தால், நிச்சயம் சனி பகவானை மகிழ்விக்கவும், அவரது அருளைப் பெறவும் முடியும். அதோடு அவரால் சந்திக்கும் மோசமான விளைவுகளையும் குறைக்கலாம். இப்போது சனி ஜெயந்தி நாளில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் சனியின் மோசமான விளைவுகளைக் குறைக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்னவென்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள், சனி ஜெயந்தி நாளில் சுந்தர காண்டம் படிப்பது அல்லது அனுமன் சாலிசாவை சொல்வது மிகவும் நல்லது. இதனால் சனி பகவானை குளிர்விக்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் சனி அஷ்டோத்ரம் அல்லது சனி அஷ்டோத்திர சதனமாவளியை சனி ஜெயந்தி நாளில் சொல்லுங்கள். மேலும் ஏழை எளியோருக்கும் தானம் செய்யுங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி அன்று கருப்பு உளுத்தம் பருப்பை படைத்து வழிபடுவதனால், சனி தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் சனி பகவானின் அருளைப் பெறுவதற்கு ராஜா தசரத சனி ஸ்தோத்திரத்தை சனி பகவான் பிறந்த நாளான சனி ஜெயந்தி நாளில் சொல்லுங்கள்.

சிம்மம்
சனி பகவானின் தந்தையான சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்கள், சனி ஜெயந்தி அன்று அனுமனை வணங்கிய பின் எந்த ஒரு செயலையும் செய்யுங்கள். இதனால் சனி பகவானின் அருள் மட்டுமின்றி, அனுமனின் அருளும் கிட்டும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள், சனி ஜெயந்தி நாளில் விரதமிருந்து சனி பீஜ மந்திரத்தை உச்சரித்து வந்தால், சனிபகவானின் அருள் கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் நோயால் அவதிப்படும் மக்களுக்கு சேவை செய்வது நல்லது. அதோடு சனி பகவானுக்கு எள்ளு பொட்டலம் கொண்டு கடுகு எண்ணெயால் தீபமேற்றி வழிபடுவது நல்லது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் காகம், ஆடு, மாடு, எறும்பு போன்ற உயிரினங்களுக்கு உணவளிப்பது நல்லது. அதோடு அனுமன் சாலிசாவை சொல்வதன் மூலமும், சனி பகவானின் அருளைப் பெறலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி அன்று அரச மரத்தின் கீழ் 11 எள்ளு விளக்கேற்றி சனி பகவானின் மந்திரத்தை உச்சரித்து வழிபடுவதனால், சனி பகவானின் அருள் கிட்டும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் ஏழை மக்களுக்கு உணவை வாங்கி கொடுப்பதுடன், சனி மந்திரத்தை செல்வதன் மூலம், சனி பகவானைக் குளிர்வித்து அருளைப் பெறலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் ஏழரை சனியால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க, சனி ஜெயந்தி நாளில் அனுமனை வழிபடுங்கள். இதனால் சனி தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளன்று விரதம் இருந்து பஜ்ரங் பானை படிப்பதன் மூலம், சனி பகவானின் அருளைப் பெறலாம்.



Click it and Unblock the Notifications