Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
சனி அஸ்தமனத்தால் அடுத்த 33 நாட்கள் ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
மிருத்யூ லோகத்தின் அதிபதியான சனி பகவான் 2022 ஜனவரி 19 ஆம் தேதி காலை 7.13 மணிக்கு மகர ராசியில் இருக்கும் போது மேற்கு திசையை நோக்கி அமர்ந்து அஸ்தமனமாவார்.
பொதுவாக சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வதற்கு முன் 33 நாட்கள் அஸ்தமனமாவது வழக்கம். அந்த வகையில் மிருத்யூ லோகத்தின் அதிபதியான சனி பகவான் 2022 ஜனவரி 19 ஆம் தேதி காலை 7.13 மணிக்கு மகர ராசியில் இருக்கும் போது மேற்கு திசையை நோக்கி அமர்ந்து அஸ்தமனமாவார். அதன் பின் மீண்டும் 2022 பிப்ரவரி 21 ஆம் தேதி மாலை 06.09 மணிக்கு பழைய நிலைக்கு திரும்பி உதயமாவார்.

இப்படி 33 நாட்கள் சனிபகவான் அஸ்தமனமாவதால், ஒருசில ராசிகளுக்கு நற்பலன்களும், சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிடைக்கும். ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம ராசியில் சுப ஸ்தானத்தில் சனி பகவான் இருப்பவர்களுக்கு, இந்த காலம் நல்லதல்ல. ஆனால் அசுப வீட்டில் சனி பகவான் இருப்பவர்களுக்கு இது நல்ல காலம். சனி பகவான் அஸ்தமனமாகும் போது, நிர்வாக அமைப்பு பலவீனமடையும் மற்றும் அராஜகம் அதிகரிக்கும். மகரம் மற்றும் கும்ப ராசியின் அதிபதியான சனி பகவான் துலாம் ராசியில் பலமாகவும், மேஷ ராசியில் பலவீனமாகவும் இருப்பார். இப்போது 33 நாட்கள் சனி பகவான் அஸ்தமனமாவதால் ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் சற்று தொய்வு ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும். ஆனால் இக்காலத்தில் தேர்தல் தொடர்பான எந்த முடிவையும் எடுக்கலாம். ஏனெனில் கிரக நிலைகள் இக்காலத்தில் உங்களுக்கு சாதகமாக உள்ளது.

ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் சனி இருப்பதால், கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்க கால அவகாசம் எடுக்கும். ஆனால் இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்களால் நன்மை கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் சேவை அல்லது குடியுரிமைக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உங்கள் துணிச்சல் பாராட்டப்படும்.

மிதுனம்
மிதுன ராசியின் 8 ஆவது வீட்டில் சனி இருப்பதால், மனதிற்கு சந்தோஷமளிக்கும் செய்திகள் உங்கள் காதுகளுக்கு வரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக வேலையில் இருந்த தடைகள் நீங்கும். நீங்கள் ஏதேனும் பெரிய வேலையைத் தொடங்க விரும்பினால் அல்லது புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்பினால், முடிவெடுப்பதில் தாமதிக்க வேண்டாம்.

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டில் சனி இருப்பதால், உங்களுக்கு நிம்மதி தரும் செய்திகளைத் தருவார். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை வெற்றியடையும். மாமியார் தரப்பிலும் ஆதரவு இருக்கும். நீங்கள் ஏதேனும் புதிய வேலையைத் தொடங்க விரும்பினால், அதிலிருந்தும் ஒரு நல்ல உணர்வை பெறுவீர்கள். மத்திய அல்லது மாநில அரசுத் துறைகளில் எதிர்பார்த்த வேலைகள் கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டில் சனி இருப்பதால், அதிக நல்ல பலனோ, கெடு பலனோ கிடைக்காது. மேலும் சூரிய பகவானும் இந்த வீட்டில் இருப்பதால், உங்களின் ரகசிய எதிரிகள் தோற்கடிக்கப்படடுவார்கள். நீதிமன்ற வழக்குகளிலும் உங்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் வரும். அரசுத் துறைகளில் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் அதற்கான வாய்ப்பு சாதகமாக அமையும்.

கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் சனி இருப்பதால், நற்பலன் கிடைக்கும். கல்வி போட்டியில் இருந்த தடைகள் நீங்கும். உங்கள் குழந்தைகள் தொடர்பான கவலைகள் குறையும். புது தம்பதியருக்கு குழந்தை பிறக்கும் யோகம் உண்டு. காதல் விஷயங்களில் உள்ள அலட்சியம் நீங்கும். காதல் திருமணமும் நடக்கலாம்.

துலாம்
துலாம் ராசியின் 4 ஆவது வீட்டில் சனி இருப்பதால், உங்களுக்கு நற்செய்திகள் கிடைக்கும். சனி, சூரியன் சேர்க்கையினால் நண்பர்கள், உறவினர்களுடன் உறவில் விரிசல் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான பிரச்னைகள் தீரும். பயணத்தின் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டில் சனி இருப்பதால், உங்களுக்கு நற்பலனை சனி பகவான் வழங்குவார். ஆற்றல் வளம் மிகுதியாக இருக்கும். உங்கள் முடிவுகளும் செயல்களும் பாராட்டப்படும். நீங்கள் வெளிநாட்டு நிறுவனங்களில் சேவை அல்லது குடியுரிமைக்கு முயற்சி செய்ய விரும்பினாலும், வாய்ப்பு சாதகமாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் சனி உள்ளார். இதனால் இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக கொடுத்த பணம் கைக்கு திரும்ப கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையை பேணுங்கள்.

மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் சனி இருப்பதால், இக்காலத்தில் உங்களின் ஆதிக்கம் குறையும். இக்காலம் நன்றாக இருக்காது. எந்த ஒரு வேலையையும் சோம்பேறித்தனத்தால் ஒத்தி வைக்காதீர்கள். உங்கள் திட்டங்களையும் உத்திகளையும் ரகசியமாக வைத்து வேலை செய்தால், நீங்கள் வெற்றி பெறுவீர்கள். மாணவர்களுக்கு நேரம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 12 ஆவது வீட்டில் சனி உள்ளார். இதனால் சில நாட்களாக உங்களுக்கு நல்ல செய்திகள் வந்தவாறு இருக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. ஆனால் அதிக செலவுகள் காரணமாக நிதி நெருக்கடிகள் இருக்கும். இரகசிய எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். நீதிமன்ற விவகாரங்களை வெளியில் தீர்த்துக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும்.

மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டில் சனி உள்ளார். இதனால் இக்காலம் உங்களுக்கு மிகவும் நல்லது என்று சொல்ல முடியாது, இருப்பினும் சூரியனின் நிலையால் உங்கள் வருமானம் தொடர்ந்து அதிகரிக்கும். கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மூத்த சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் வளர அனுமதிக்காதீர்கள். பிள்ளைகள் தொடர்பான கவலைகள் குறையும்.



Click it and Unblock the Notifications